தமிழகத்தில் வக்கில்கள் வேலை நிறுத்த போராட்டம் ..,

தமிழகத்தில் நேற்று வழக்கறிஞர்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து, போராட்டம் நடத்தினர். குமரி மாவட்ட வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு இந்த போராட்டத்துக்கு ஆதரவு கொடுத்து இருந்தார்கள். இதையடுத்து நாகர்கோவிலில் நேற்று வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் இறங்கினர். நாகர்கோவிலில் நீதிமன்ற வளாகம் முன் வக்கீல் சங்க தலைவர் மகேஷ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் வக்கில் சங்க செயலாளர் வக்கீல் மரிய ஸ்டீபன், பொருளாளர் பார்த்தசாரதி மற்றும் ஏராளமான வழக்கறிஞர்கள், வக்கீல் சங்க நிர்வாகிகள் … Read more

ஊதியம் வழங்காததை கண்டித்து தொழிலாளர்கள் உரிமையாளர் வீட்டு முன் முற்றுகை ..,

திருச்சி:தனியார் பாய்லர் தொழிற்சாலை ஒன்று திருச்சி துவாக்குடி சிப்காட் பகுதியில் செயல்பட்டு வருகின்றது. இங்கு சுமார் 400க்கும் மேற்பட்ட  நிறுவன ஊழியர்கள், ஒப்பந்த ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்களுக்கு கடந்த 5 மாதமாக ஊதியம் வழங்கப்படவில்லை. இதுகுறித்து நிர்வாகத்துடன் தொழிலாளர்கள் சார்பில் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை  நடத்தப்பட்டது. அதில் கடந்த வாரம் திங்கட்கிழமை 2 மாதம் ஊதியமும், ஏப்ரல் 7ம் தேதி 2 மாத நிலுவை ஊதியமும், மூன்று மாதத்திற்கு வாரம் 4 நாட்கள் மட்டும் வேலை செய்வது போன்ற … Read more

மதுரையில் மணல் தொழிற்சாலையை எதிர்த்து மக்கள் முற்றுகை போராட்டம் ..,

மேலூர்:  அய்யாஊத்து கண்மாய் கொட்டாம்பட்டி யூனியன், சொக்கம்பட்டி ஊராட்சியில் உள்ளது . எம் சாண்ட் தயாரிக்கும் மணல் தொழிற்சாலை  நீர்ப்பிடிப்பு பகுதியில் பாலம் அமைத்து சொக்கம்பட்டி ஊராட்சியில் கட்டப்பட்டுள்ளது. இதற்கு கிராம மக்கள் ஆரம்பம் முதல்   எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக பல்வேறு இடங்களில் கிராமமக்கள் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த பாலம்  நீர் நிலைகளை ஆக்கிரமித்து தொழிற்சாலைக்கு செல்வதற்கு இங்கு கட்டப்பட்டுள்ளது. இந்த தொழிற்சாலையால் சுற்றுச்சூழல் பாதிப்பதுடன், விவசாயமும் அழிந்துவிடும் என்று கிராம மக்கள் குற்றம் … Read more

நோ பார்க்கிங் ஏரியாவில் பார்க் செய்ததால், 3 கோடிரூபாய் மதிப்ப்புமிக்க காரை நொறுக்கிய போலீசார்

கார் வைத்திருப்பவர்கள் அதனை சிலர் தன் கண் போல பார்த்து கொள்கின்றனர். அப்படி இருக்கையில் ஒருவர் தனது காரை ஓர் இடத்தில்  பார்க் செய்திவிட்டு திரும்பி வந்து பார்கையில் கார் அப்பளமாக நொறுங்கியது கேட்டு அதிர்ச்சியடைந்தார். அந்த  கார் உயர் ரக பெராரி ரக கார் என தெரிந்ததும் பல கார் பிரியர்களின் நெஞ்சமும் நொறுங்கியது. யு.கேவை சேர்ந்த கோடீஸ்வரர்களில் ஒருவரான ஷாகித் கான். இவர். தனது வீட்டில் வாடகைக்கு இருந்தவர்களை வெளியேற்றியதற்காக கோர்ட்டில் நடந்த வழக்கில் … Read more

குற்றவாளிகளுக்கு மட்டும் தான் மனித உரிமையா.? காவலர்களுக்கு இல்லையா.? : நீதிபதி கிருபாகரன் கேள்வி…!!

காவல்துறையினர் பிரச்சினைகளை தீர்க்க நிபுணர் குழு அமைக்க உத்தரவிட்டும் நடவடிக்கை எடுக்காதது ஏன்.?. தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. நிபுணர் குழுவினர் பட்டியலை வரும் 22 ஆம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும். பட்டியலை சமர்பிக்க்கவிட்டால் உள்துறை செயலர் நேரில் ஆஜராக நேரிடும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. உயர் அதிகாரிகள் வீட்டில் எவ்வளவு காவலர்கள் வேலை பார்க்கின்றனர்.?. குற்றவாளிகளுக்கு மட்டும் தான் மனித உரிமையா.? காவலர்களுக்கு இல்லையா.? : நீதிபதி கிருபாகரன் கேள்வி.

தமிழகத்தில் நடந்த காவலர்கள் தற்கொலைக்கு காரணம் இது வா…?? சட்டமன்ற பேரவை பேசிய முதலமைச்சர் பழனிச்சாமி…

தமிழகத்தில் நடந்த காவலர்கள் தற்கொலை என்பது குடும்ப, உடல்நிலை, காதல் உள்ளிட்ட பிரச்சினைகளால் நிகழ்கிறது. காவலர்கள் தற்கொலையை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பணிச்சுமையை கருத்தில் கொண்டு காவலர்களுக்கு வாராந்திர ஓய்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உடல்நலத்தை பேணிக்காக்க யோகா பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. காவலர்கள் தற்கொலை தொடர்பாக தமிழக சட்டமன்ற பேரவையில் முதலமைச்சர் பழனிச்சாமி விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ்கன்,  தமிழ்ராக்கர்ஸ் உள்ளிட்ட மேலும் 28 இணையதளங்களை முடக்கியது காவல்துறை…!!

தமிழ்,தெலுங்கு மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகும் புதிய திரைப்படங்களை சட்டத்திற்கு புறம்பாக இணையதளங்களில் பதிவேற்றம் செய்பவர்கள் மீது சமீபத்தில் காவல்துறை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் தமிழ்கன்,  தமிழ்ராக்கர்ஸ் உள்ளிட்ட இணையதளங்கள் இதுவரையில் காவல்துறையினரின் நடவடிக்கைக்கு பின்னர் முடக்கப்பட்டுள்ளன.இந்நிலையில் புதிய தமிழ்திரைப்படங்களை பதிவேற்றம் செய்து வந்த மேலும் 28 இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளன. tamilrockers,tamilmvfun என்ற பெயரில் செயல்பட்டு வந்த இணையதளங்கள் முடக்கப்பட்டன.

மோசடி வழக்கில் ஆஜராகும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை துன்புறுத்தக் கூடாது என போலீசுக்கு கோர்ட் உத்தரவு…!!

மோசடி வழக்கில், விசாரணைக்கு ஆஜராகும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை துன்புறுத்தக் கூடாது என தமிழக காவல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல் செய்துள்ளது. கடந்த ஆட்சியில் செந்தில் பாலாஜி தமிழக அமைச்சராக இருக்கும் போது போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.40 லட்சத்தை 16 பேரிடம் மோசடி செய்ததாக, அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நடிகை ஸ்ருதி மீது குண்டர் சட்டம் !!!

திருமணம் செய்வதாக கூறி இளைஞர்களிடமும் தொழிலதிபர்களிடமும் பலகோடி ரூபாய் பண மோசடியில் ஈடுபட்ட நடிகை ஸ்ருதி மீது குண்டர் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நடிகை ஸ்ருதி சமூக வலைதளம் மூலமாக ஏராளமான இளைஞர்களிடமும் தொழிலதிபர்களிடமும் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைக் கூறி, பணமோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் சேலத்தைச் சேர்ந்த மென்பொறியாளர் பாலமுருகனிடம் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி பணம் வாங்கியுள்ளார். நடிகை ஸ்ருதியின் அழகிலும் அவருடைய ஆசை வார்த்தைகளிலும் மயங்கிய பாலமுருகன் ஸ்ருதி கேட்க்கும் பொழுதெல்லாம் பணம் … Read more

சிசிடிவி காட்சிகளை வைத்து தேடும் போலீஸ் !!!

சினிமா பைனான்சியர் போத்ராவின் மகள் கரிஷ்மா போத்ராவை கடத்தியது யார் என்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சினிமா தயாரிப்பாளர்களுக்கு வட்டிக்கு பணம் கொடுத்து வருபவர் போத்ரா. இவரது மகள் கரிஷ்மா போத்ராவை கடந்த இரண்டு நாட்களாக காணவில்லை. சினிமா பைனான்சியர் போத்ரா, தி.நகரில் தங்கியிருந்த கரிஷ்மா கடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்து தி.நகர் துணை ஆணையரிடம்  புகார் அளித்துள்ளார். போத்ரா கந்துவட்டிக்கு பணம் கொடுத்து கைதானவர், அதனால் அவரது எதிரிகள் யாரும் கடத்தியிருக்கலாமா என்ற கோணத்தில் விசாரணை … Read more