அதிமுகவில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும்.. சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

vk sasikala

அதிமுகவில் இருந்து விகே சசிகலாவை நீக்கியது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு, அதிமுகவில் இடைக்கால பொதுச்செயலாளராக சசிகலாவும், துணை பொதுச்செயலாளராக டி.டி.வி.தினகரனும் பொதுக்குழு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதையடுத்து, விகே சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரை பதவிகளில் இருந்து நீக்கம் செய்து, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன. இதன்பிறகு, அதிமுகவில் ஒன்றை தலைமை பிரச்சனை பூகம்பமாக வெடித்து ஓபிஎஸ், இபிஎஸ் என இரு அணிகளாக … Read more

#Breaking : டாஸ்மாக்கிற்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம்.! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

எந்தெந்த நிறுவனங்களிடம் இருந்து மதுபானங்கள் வாங்கப்படுகிறது என்பது குறித்த விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என டாஸ்மாக் நிறுவனத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  கடந்த 2015ஆம் ஆண்டு கோவையை சேர்ந்த லோகநாதன் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் டாஸ்மாக் மதுபானங்களின் கொள்முதல், விற்பனை விவரம் உள்ளிட்டவை குறித்து கேட்டிருந்தார். அதனை வழங்க டாஸ்மாக் மறுத்துவிட்டது. இதனை தொடர்ந்து அவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கு விசாரணையில் ஏற்கனவே உயர்நீதிமன்றம் விதித்திருந்த உத்தரவை … Read more

உங்கள் மகளின் செல்போனை ஒப்படைக்காவிட்டால் உங்கள் மீது விசாரணை நடத்தப்படும்.! உயர்நீதிமன்றம் அதிரடி.!

கள்ளக்குறிச்சி மாணவியின் செல்போனை பெற்றோர்கள் தர மறுத்தால், பெற்றோர்களை விசாரிக்க நேரிடும். – சென்னை உயர்நீதிமன்றம். கடந்த ஜூலை மாதம் கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக மாணவியின் பெற்றோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அதில் தங்கள் மகள் உயிரிழந்த வழக்கு முறையாக விசாரிக்கப்பட வேண்டும். என அதில் குறிப்பிட்டு இருந்தனர். அந்த வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது போலீசார் தரப்பில், … Read more

ஆதாயம் தரும் இரட்டை பதவி.! ஆளுநருக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு.!

ஆதாயம் தரும் இரட்டை பதவியில் ஆளுநர் இருக்க கூடாது என தந்தை பெரியார் திராவிடர் கழக காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் கண்ணதாசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.  தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி , அண்மையில் ஆரோவில் அறக்கட்டளையின் நிர்வாக குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆளுநராக இருப்பவர்கள் ஆதாயம் தரும் பதவியில் இருக்க கூடாது என தந்தை பெரியார் திராவிடர் கழக காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் கண்ணதாசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். … Read more

ஆதார் எண் – மின் இணைப்பு எண் இணைப்பு வழக்கு.! உயர்நீதிமன்ற தீர்ப்பு தேதி இதோ.!

மின்சார மானியம் பெற மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும்படி வற்புறுத்தக் கூடாது என்ற வழக்கின் தீர்ப்பு வரும் 19ஆம் தேதி வெளியாக உள்ளது.  மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என தமிழக அரசு அண்மையில் அறிவுறுத்தியது.  இதற்காக இந்த மாத இறுதி வரையில் கால அவகாசம் கொடுக்கப்பட்டது. இதனை குறிப்பிட்டு, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. மின்சார மானியம் பெற மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும்படி … Read more

பரபரப்பு… 3 பேர் கைது…! ‘பிச்சைக்காரன் 2’ படக்குழு மீது வழக்கு.?

நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி தற்போது பிச்சைக்காரன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு தற்போது சென்னையில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், பரபரப்பான சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. அது என்னவென்றால், “பிச்சைக்காரன் 2” படத்திற்கான படப்பிடிப்பு சென்னை உயர்நீதிமன்ற வளாக பகுதியில் நடைபெற்று வரும் நிலையில், அனுமதியின்றி ட்ரோன் பறக்கவிட்ட படக்குழுவை சேர்ந்த  3 பேரை போலீசார் கைது செய்தனர். இதையும் … Read more

ஆதார் எண் – மின் இணைப்பை ரத்து செய்யகோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய வழக்கு.!

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.  மின் இணைப்பு எண்ணை, வீட்டின் உரிமையாளர் அல்லது வாடகைக்கு குடியிருப்போர் அவர்களது ஆதார் எண்ணோடு இணைக்க வேண்டும் என்ற உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. அதற்கான கால அவகாசம் இம்மாதம் இறுதி வரையில் அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக இம்மாதம் முழுவதும் மின் அலுவலகத்தில் சிறப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது. அதே போல, இணையத்தில் இணைக்கவும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் … Read more

எரிபொருள் விலையேற்றம்… ஆட்டோ கட்டணம் நிர்ணயம்.! அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு.!

எரிபொருள் விலையேற்றத்தை பொறுத்து ஆட்டோ கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும் என்ற வழக்கில் அரசு தரப்பு பதிலளிக்க வேண்டும் என வழக்கு தள்ளி வைக்கப்பட்டது. கடந்த 2015 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஆட்டோ கட்டணம் எரிபொருள் விலை ஏற்றத்திற்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட்டது. அதற்கு பிறகு 7 ஆண்டுகள் ஆகியும் இன்னும் மறு நிர்ணயம் செய்யப்படவில்லை. இதனால் ஆட்டோ ஓட்டுனர்களே உயர்த்தி வசூலித்து வருகிறார்கள். என சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ராமமூர்த்தி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து … Read more

திமுக எம்பி மீதான பணபரிமாற்ற வழக்கு.! உயநீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

திமுக எம்பி ஜெகத்ரட்சகன் மீதான அமலாக்கத்துறை வழக்கும் ரத்து செய்யப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. ஏற்கனவே சிபிசிஐடி பதிந்த வழக்கும் ரத்து செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. அரக்கோணம் மக்களவை தொகுதி எம்பி ஜெகத்ரட்சகன் மீது கடந்த 1995ஆம் ஆண்டு குரோம்பேட்டை லெதர் ஃபேக்டரி நிலத்தை அபகரித்ததாக கூறி அந்த கம்பெனி நிறுவனர் புகார் அளித்து இருந்தார். இந்த புகாரை அடுத்து, எம்பி ஜெகத்ரட்சகன் மீது சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதே போல, … Read more

அரசு மருத்துவமனைகளில் பறக்கும் படை.! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

அரசு மருத்துவமனைகளில் செயல்பாடுகளை கண்காணிக்க பறக்கும் படை அமைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.  சென்னை அரசு மருத்துவமனையில் அண்மையில் கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா, தவறான மருத்துவ சிகிச்சையால் உயிரிழந்த சம்பவம் அரசு மருத்துவமனைகள் சிகிச்சை குறித்த பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டன. இந்நிலையில, சென்னை உயர்நீதிமன்றம் இது குறித்து புதிய உத்தரவை தமிழக சுகாதாரத்துறைக்கு பிறப்பித்துள்ளது. அதன்படி, அரசு மருத்துவமனைகளில் பறக்கும் படையை அமைக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள், … Read more