கர்நாடகா:கர்ப்பிணி பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கொரோனாவல் பலி ! அர்ப்பணிப்பின் உச்சம்….

கர்நாடகாவில் 7 மாத கர்ப்பிணி போலீஸ் அதிகாரி கொரோனாவால் உயிரிழப்பு,சோகத்தின் உச்சம். இந்தியாவில் கொரோனா கோரத்தாண்டவம் ஆடிவரும் நிலையில் இறப்புகளும் உச்சத்தை எட்டி வருகிறது. மேலும் உயிரிழந்தவர்களின் உடலை எரிக்க இடமில்லாமல் ஆங்காங்கே மக்கள் தவித்து வீதியில் நிற்கும் அவலமும் நடந்தேறி வருகிறது. இச்சூழலில் தடுப்பூசி தட்டுப்பாடு ஆக்ஸிஜன் பற்றாக்குறை போன்றவைகளும் இந்தியாவின் தற்போதுள்ள கொரோனா பாதிப்பு நிலையை வெட்டவெளிச்சமாக்கியுள்ளது. இந்நிலையில் கர்நாடகாவில் 28 வயதுள்ள பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இன்று உயிரிழந்துள்ளார், அவர் … Read more

அமெரிக்காவில் ஐ.டி வேலையை உதறிவிட்டு,மாடு வளர்ப்பு மூலம் ரூ.44 கோடி வருவாய் ஈட்டும் தன்னம்பிக்கை இளைஞர்..!

கர்நாடகாவைச் சேர்ந்த கிஷோர் என்ற இளைஞர் அமெரிக்காவில் பணிபுரிந்து வந்த ஐ.டி வேலையை விட்டுவிட்டு,மாடு வளர்ப்பு மூலம் ரூ.44 கோடி வருவாய் ஈட்டி வருகிறார். கர்நாடகாவைச் சேர்ந்த கிஷோர் இந்துகுரி என்ற இளைஞர்,கரக்பூர் ஐஐடியில் இன்ஜினியரிங் முடித்துவிட்டு,பி.ஹெச்.டி படிப்பதற்காக அமெரிக்கா சென்றார்.அதன் பிறகு,படிப்பை நிறைவு செய்த கிஷோர்,உலகின் மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுள் ஒன்றான Intel லில் பணிக்கு சேர்ந்து மாதம் அதிக ஊதியம் வாங்கி வந்தார்.எனினும்,கிஷோரால் அந்த வேலையை தொடர்ந்து செய்ய முடியவில்லை. இதனையடுத்து,6 ஆண்டுகள் கழித்து … Read more

கர்நாடகாவில் தொற்றால் உயிரிழந்தவர்களின் உடலை எரிக்க உதவி எண்….!

கர்நாடகாவில் தொற்றால் உயிரிழந்தவர்களின் உடலை எரிக்க உதவி எண். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஒவ்வொரு மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. தொற்றால் பாதிக்கப்பட்டு பல மருத்துவமனைகள் நிரம்பி வழியும் நிலையில், தடுப்பூசி , ஆக்சிஜன்,  படுக்கைகள் பற்றாக்குறை பல இடங்களில் காணப்படுகிறது.  இந்நிலையில், தொற்றால் இறந்தோரை அடக்கம் பண்ணுவதற்கு கூட இடம் இல்லாத  நிலை காணப்படுகிறது. இதனையடுத்து, பெங்களூருவில் … Read more

கர்நாடகாவில் இப்போதைக்கு ஊரடங்கு நீட்டிப்பு இல்லை – முதல்வர் எடியூரப்பா

கொரோனா பரவல் மேலும் அதிகரித்தால் மே 12ம் தேதிக்கு பிறகு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். கர்நாடகா மாநிலத்தில் தினந்தோறும் கொரோனா பாதிப்பு 40 ஆயிரத்தை கடந்து வருகிறது. ஏற்கனவே, மாநில முழுவதும் சில கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. இந்த நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து முதல்வர் எடியூரப்பா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர், கொரோனா பரவல் மேலும் அதிகரித்தால் வரும் 12ம் தேதிக்கு … Read more

கர்நாடகாவில் ஆக்சிஜன் பற்றாக்குறை: 24 மணி நேரத்தில் மட்டும் 6 நோயாளிகள் உயிரிழப்பு

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக 2 நோயாளிகள் உயிரிழந்துள்ள நிலையில், மொத்தம் அம்மாநிலத்தில் 6 நோயாளிகள் ஒரே நாளில் உயிரிழந்தனர். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தனது தீவிரத்தை அதிகரித்துக் கொண்டே செல்கிறதே தவிர குறைந்தபாடில்லை. இந்நிலையில், தினமும் லட்சக்கணக்கான மக்கள் புதிதாக பாதிக்கப்படும் நிலையில், ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்து கொண்டும் இருக்கின்றனர். கொரோனாவால் உயிரிழப்பவர்களை விட மருத்துவமனைகளில் சிகிச்சை பெற முடியாமல் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் … Read more

கர்நாடகா:கொரோனவால் செத்துவிட்ட மனிதநேயம்..!நடுரோட்டில் துடிதுடித்து இறந்த பெண்..!

கர்நாடகாவில்,கொரோனா தொற்று பரவுதல் அச்சம் காரணமாக உதவிக்கு யாரும் வராததால் பெண் ஒருவர் நடுரோட்டில் துடிதுடித்து இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம்,கோலார் மாவட்டத்தில் வசித்து வந்த பெண்(வயது 50) ஒருவர்,கடந்த சில நாட்களாக காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்துள்ளார்.இதனையடுத்து,நேற்று காலை மருத்துவமனைக்கு புறப்பட்டு செல்லும் வழியில் திடீரென்று மயங்கி விழுந்தார்.கொரோனா தொற்று பாதித்திருக்கும் என்பதால் அப்பெண்ணுக்கு உதவி செய்ய ஒருவர் கூட முன்வரவில்லை.அதற்குப் பதிலாக ரோட்டில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அப்பெண்ணை … Read more

கர்நாடகாவில் 18 மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தாமதமாகலாம் – கார்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர்

கர்நாடகாவில் 18 மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தாமதமாகலாம் கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் தெரிவித்துள்ளார்.  இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக போராடி வருகிறது. இந்நிலையில் மே 1-ஆம் தேதி முதல் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள்  தடுப்புச் எடுத்துக் கொள்ளுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில் கர்நாடக சுகாதார அமைச்சர் டாக்டர் கே.சுதாகர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது,  … Read more

#Breaking : கர்நாடகாவில் 2 வாரங்கள் முழு ஊரடங்கு…!

கர்நாடகத்தில் நாளை இரவு 9 மணி முதல் மே-10ம் தேதி வரை 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கர்நாடகாவில் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதையடுத்து, 2 வாரங்களுக்கு அங்கு முழு ஊரடங்கு  … Read more

முதல்வர்களுக்கு பாடம் கற்பிக்க நீங்கள் ஒன்றும் தலைமை ஆசிரியர் அல்ல – முன்னாள் முதல்வர் சித்தராமையா!

முதல்வர்களுக்கு பாடம் கற்பிக்க நீங்கள் ஒன்றும் தலைமை ஆசிரியர் அல்ல என பிரதமர் மோடியை விமர்சித்த கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா. இதுகுறித்து, கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், பிரதமர் மோடி அவர்களே, எந்த நோக்கமும் இல்லாமல் நீங்கள் மீண்டும் மீண்டும் தொலைக்காட்சியில் தோன்றினால் வைரஸ் மறைந்துவிடாது என்றும் முதல்வர்களுக்கு பாடம் கற்பிக்க நீங்கள் ஒன்றும் தலைமை ஆசிரியர் அல்ல எனவும் விமர்சித்துள்ளார். மாநில அரசுகளின் கோரிக்கைகளை முதலில் நிறைவேற்றுவதன் … Read more

#BREAKING NEWS: நாளை முதல் கர்நாடகாவில் இரவு ஊரடங்கு..!

கர்நாடகாவில் நாளை இரவு 9 மணி முதல் மே 4 ஆம் தேதி காலை 6 மணி வரை  இரவு ஊரடங்கு  நாளை இரவு 9 மணி முதல் மே 4 ஆம் தேதி காலை 6 மணி வரை கர்நாடகாவில் இரவு ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவு ஊரடங்கு உத்தரவின் போது ஜிம்கள், தியேட்டர்கள், பார்கள், விடுதிகள் இரவு 9 மணிக்கு மூடபப்டும் எனவும்  இது ஒருபுறம் இருக்க வெள்ளிக்கிழமை இரவு … Read more