கர்நாடகா:கர்ப்பிணி பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கொரோனாவல் பலி ! அர்ப்பணிப்பின் உச்சம்….

கர்நாடகாவில் 7 மாத கர்ப்பிணி போலீஸ் அதிகாரி கொரோனாவால் உயிரிழப்பு,சோகத்தின் உச்சம்.

இந்தியாவில் கொரோனா கோரத்தாண்டவம் ஆடிவரும் நிலையில் இறப்புகளும் உச்சத்தை எட்டி வருகிறது. மேலும் உயிரிழந்தவர்களின் உடலை எரிக்க இடமில்லாமல் ஆங்காங்கே மக்கள் தவித்து வீதியில் நிற்கும் அவலமும் நடந்தேறி வருகிறது. இச்சூழலில் தடுப்பூசி தட்டுப்பாடு ஆக்ஸிஜன் பற்றாக்குறை போன்றவைகளும் இந்தியாவின் தற்போதுள்ள கொரோனா பாதிப்பு நிலையை வெட்டவெளிச்சமாக்கியுள்ளது.

இந்நிலையில் கர்நாடகாவில் 28 வயதுள்ள பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இன்று உயிரிழந்துள்ளார், அவர் 7 மாத கர்ப்பிணியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் 28 வயதான ஷாமிலி கர்நாடகா கோலாரில் உள்ள ஆர்.எம்.ஜலப்பா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக தக்ஷினா கன்னட காவல் கண்காணிப்பாளர் ரிஷிகேஷ் சோன்வானே தெரிவித்தார், அந்த பெண் 7 மாத கர்ப்பிணியாக இருந்ததும், அதனால் கொரோனா தடுப்பூசி போடாமல் இருந்ததாகவும் கூறியுள்ளார்.

இதுகுறித்து போலீஸ் டைரக்டர் ஜெனரல் பிரவீன் சூத் ட்விட் செய்துள்ளார், அதில் கோலாரின் பி.எஸ்.ஐ. ஷாமிலி, கோவிட் உடனான போரில் தோல்வியடைந்தார். நம்மில் யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும் “தயவுசெய்து போலீசாருடன் ஒத்துழைக்கவும், வீட்டிலேயே இருங்கள் மற்றும் பாதுகாப்பாக இருங்கள்” என்று மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.