#Breaking : கர்நாடகாவில் 2 வாரங்கள் முழு ஊரடங்கு…!

கர்நாடகத்தில் நாளை இரவு 9 மணி முதல் மே-10ம் தேதி வரை 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், கர்நாடகாவில் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதையடுத்து, 2 வாரங்களுக்கு அங்கு முழு ஊரடங்கு  அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அம்மாநில முதல்வர் எடியூரப்பா அவர்கள் கூறுகையில், ‘கர்நாடகத்தில் நாளை இரவு 9 மணி முதல் மே-10ம் தேதி வரை 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

கர்நாடகாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும், அத்தியாவசிய பொருட்கள் விற்பனைக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.