கோயம்பேடு மார்க்கெட்டுக்கு மக்கள் வரவேண்டாம் – அங்காடி நிர்வாகக்குழு அறிவிப்பு

பொதுமக்களுக்குத் தேவையான பொருட்களை தங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள கடைகளில் வாங்குமாறு கோயம்பேடு அங்காடி நிர்வாகக்குழு அறிவிப்பு. தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 10ம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இதில் அத்தியாவசிய தேவைகளுக்கான கடைகள் மட்டும் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை அனுமதி வழங்கப்பட்டது. இருப்பினும், மக்கள் தேவையில்லாமல் வெளியே சுற்றி வருவதாக தகவல் வெளியான நிலையில், மேலும் சில கட்டுப்பாடுகளை விதித்து … Read more

பொதுமக்கள் தினமும் வெளியே வரக்கூடாது – காவல்துறை எச்சரிக்கை

பொதுமக்கள் பொருட்கள் வாங்க தினசரி வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று மதுரை மாநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. விநியோக சேவைகளை பயன்படுத்தி பொருட்களை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் பலசரக்கு மற்றும் காய்கறிகளை அருகில் உள்ள கடைகளில் வாங்கிக்கொள் வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது. மேலும் தனிமனித இடைவெளியை பின்பற்றாத கடைகளுக்கு சீல் வைக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனிடையே, தமிழகத்தில் கடந்த 10ம் தேதி முதல் 24ம் தேதி வரையில் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று … Read more

#Breaking: கடுமையாகும் ஊரடங்கு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!!

தமிழகத்தில் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்த உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆலோசனை. தமிழகத்தில் கடுமையாக முழு ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து டிஜிபி திரிபாதி, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் மற்றும் சட்ட ஒழுங்கு கூடுதல் டிஜிபி தாமரை கண்ணன் உள்ளிட்ட அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோனை மேற்கொண்டு வருகிறார். நேற்று கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்து கட்சி தலைவர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார். இதனிடையே, தமிழகத்தில் முழு ஊரடங்கு கடந்த 10ம் … Read more

நாளை முதல் முழு ஊரடங்கு: காவல்துறையினருக்கு டிஜிபி திரிபாதி அறிவுரை!!

கொரோனா பரவல் காரணமாக தமிழக்தில் நாளை முதல் முழு ஊரடங்கு அமலில் வரவுள்ளதால், காவல்துறையினருக்கு டிஜிபி திரிபாதி அறிவுறுத்தல். தமிழகத்தில் நாளை முதல் 24ம் தேதி வரை முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட உள்ளன. இந்த நிலையில், முழு ஊரடங்கில் காவல்துறையினர் எவ்வாறு செயல்பட வேண்டும் என்றும் டிஜிபி திரிபாதி அறிவுறுத்தியுள்ளார். அதன்படி, பொதுமக்களிடம் காவல்துறையினர் மிகுந்த கனிவுடன் நடந்துகொள்ள வேண்டும். எந்த சூழ்நிலையிலும் கோபமாகவோ, மரியாதையை குறைவாகவோ மக்களிடம்  நடந்துகொள்ளக்கூடாது. மார்க்கெட் போன்ற இடங்களில் பொதுமக்கள் கூட்டமாக கூடுவதை … Read more

டெல்லியில் மேலும் ஒரு வாரம் முழு பொதுமுடக்கம் நீட்டிப்பு.!

டெல்லியில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், முழு பொதுமுடக்கம் வரும் 17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் கொரோனா இரண்டாவது அலை பரவல் அதிகரித்து வரக்கூடிய சூழலில் முழு பொதுமுடக்கம் வரும் 17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் ஏற்கனவே, அறிவிக்கப்பட்ட முழு ஊரடங்கு நாளையுடன் முடிவடைய இருந்த நிலையில், மேலும் ஒருவாரம் நீட்டிப்பு செய்து மாநில அரசு அறிவித்துள்ளது. தலைநகர் டெல்லியில் உள்ள மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. … Read more

கர்நாடகாவில் இப்போதைக்கு ஊரடங்கு நீட்டிப்பு இல்லை – முதல்வர் எடியூரப்பா

கொரோனா பரவல் மேலும் அதிகரித்தால் மே 12ம் தேதிக்கு பிறகு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். கர்நாடகா மாநிலத்தில் தினந்தோறும் கொரோனா பாதிப்பு 40 ஆயிரத்தை கடந்து வருகிறது. ஏற்கனவே, மாநில முழுவதும் சில கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. இந்த நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து முதல்வர் எடியூரப்பா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர், கொரோனா பரவல் மேலும் அதிகரித்தால் வரும் 12ம் தேதிக்கு … Read more

#BREAKING: பீகாரில் மே 15ம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு – முதலமைச்சர் நிதிஷ் குமார் அறிவிப்பு

பீகார் மாநிலத்தில் வரும் 15ம் தேதி வரை முழு ஊரடங்கு நீடிக்கப்படுகிறது என்று முதலமைச்சர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. பெரும்பாலான மாநிலங்களில் பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. இதுபோன்று  பீகாரில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. எனவே, பீகாரில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், மாநிலம் முழுவதும் இரவுநேர ஊரடங்கு, சில புதிய கட்டுப்பாடுகளை அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் … Read more

#Breaking: தமிழகத்தில் முழு ஊரடங்கை அமல்படுத்தக் கோரி வழக்கு!!

தமிழகத்தில் முழு ஊரடங்கை அமல்படுத்த கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸின் 2வது அலையை கட்டுப்படுத்த முழு பொதுமுடக்கத்தை அமல்படுத்த கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. சென்னையை சேந்த பாலாஜி என்பவர் தொடர்ந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது. மேலும், அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடவேண்டும் என்றும் மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளார். இதனிடையே, தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா நோய்ப் பரவலைக் கருத்தில் … Read more

#breaking: மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கையன்று முழு ஊரடங்கு – தமிழக அரசு

வாக்கு எண்ணிக்கை தினத்தன்று முழு ஊரடங்கு ஏற்கனவே அமலில் உள்ளது என்று தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. மே 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை தினத்தன்று முழு ஊரடங்கு ஏற்கனவே அமலில் உள்ளதாக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்தாக கூறப்படுகிறது.  தொழிலாளர் தினத்துக்கு பொதுவிடுமுறை என்பதால் மே 1ல் சனிக்கிழமை அன்று முழு ஊரடங்கிற்கு அவசியமில்லை என்றும் கூறியுள்ளது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மே 1 முதல் கொரோனா தடுப்பூசி போடுவதால் சனிக்கிழமை … Read more

மே 1, 2 தேதிகளில் தமிழகத்தில் முழு ஊரடங்கு – உயர்நீதிமன்றம் பரிந்துரை.!

மே 01, 02 தேதிகளில் தமிழகத்தில் முழு ஊரடங்கை அமல்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக இரவுநேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், மேலும் சில கட்டுபாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது. இருப்பினும், மே 01, 02 தேதிகளில் தமிழகத்தில் முழு ஊரடங்கை அமல்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது. தேர்தல் பணி தொடர்பான வாகனங்களை மட்டுமே அந்த இரண்டு நாட்களில் அனுமதிக்கலாம் என … Read more