டெல்லியில் மேலும் ஒரு வாரம் முழு பொதுமுடக்கம் நீட்டிப்பு.!

டெல்லியில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், முழு பொதுமுடக்கம் வரும் 17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் கொரோனா இரண்டாவது அலை பரவல் அதிகரித்து வரக்கூடிய சூழலில் முழு பொதுமுடக்கம் வரும் 17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் ஏற்கனவே, அறிவிக்கப்பட்ட முழு ஊரடங்கு நாளையுடன் முடிவடைய இருந்த நிலையில், மேலும் ஒருவாரம் நீட்டிப்பு செய்து மாநில அரசு அறிவித்துள்ளது.

தலைநகர் டெல்லியில் உள்ள மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால், ஆக்சிஜன் பற்றாக்குறை மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. இதன் விளைவாக நோயாளிகள் உயிரிழந்து கொண்டியிருக்கின்றன.

கடுமையான நெருக்கடியையே சந்தித்து வரும் டெல்லி சுகாதாரத்துறை வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாளை காலை 5 மணி வரை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. டெல்லியில் நேற்று ஒரே நாளில் 17,364 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 332 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்