ஹரியானாவில் காவிமயமாகும் கல்வி….!!

ஹரியானாவில் காவிமயமாகும் கல்வி; பள்ளிக்கூடங்களில் இனிமேல் “காயத்ரி மந்திரம்”-கட்டாயமாக சொல்ல வேண்டும் என அம்மாநில கல்வித்துறை உத்தரவு பிறபித்துள்ளது. ஏற்கனவே அம்மாநில பள்ளிகளில் பகவத்கீதை ஸ்லோகங்கள் பாடமாக ஆக்கி உள்ளனர்.கார்ப்பரேட்களின் வேட்டைகாடாக நாட்டை ஆக்கியவர்கள். அந்த ரணத்தை மறக்கடிக்க மறைநூலில் இடம் தேடுகிறார்கள்.

‘மைக்ரோசாப்ட்’ நிறுவனத்துடன் தமிழக பள்ளிக்கல்வித்துறை ஒப்பந்தம்

தமிழகத்தில் பள்ளி ஆசிரியர்கள் 500 பேருக்கு சிறப்பு பயிற்சியை அளிப்பதோடு, 7 அரசுப் பள்ளிகளைத் தத்தெடுக்கும் அனுமதியையும் பெற்று ‘மைக்ரோசாப்ட்’ நிறுவனம் தமிழக கல்வித்துறையோடு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதுகுறித்து இன்று சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில், மைக்ரோசாஃப்ட் அதிகாரி மணீஷ் பிரகாஷ், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனைச் சந்தித்தார். சிறப்புப் பயிற்சிக்கான ஒப்பந்தம் இரு தரப்பிலும் கையெழுத்தானது. மேலும், கரூர், கன்னியாகுமரி, திருப்பூர், ஓசூர், சென்னை உள்ளிட்ட இடங்களில் 7 பள்ளிகளைத் தத்தெடுப்பதற்கான அனுமதியையும் ‘மைக்ரோசாப்ட்’ நிறுவன … Read more

அமைச்சர் செங்கோட்டையன் மறுப்பு!

அமைச்சர் செங்கோட்டையன், அதிமுக நிர்வாகிகள் கை காட்டுவோருக்கே அரசுப் பணி என்று தான் கூறவில்லை என  தெரிவித்துள்ளார். சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அரசு சித்த மருத்துவக்கல்லூரியில் நலம்வாழ்வு என்ற பெயரில் நடைபெறும் சித்த மருத்துவ கண்காட்சி துவக்க நிகழ்ச்சியில் அமைச்சர்கள் செங்கோட்டையன், விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், வேலை வாய்ப்பு முகாம்களில் தனியார் நிறுவனங்கள் அதிகம் பங்கேற்கும் என்பதால், அதில் அ.தி.மு.கவில் உள்ள படித்தவர்களுக்கு வேலை … Read more

இன்று குரூப் 4 தேர்வு 20 லட்சம் பேர் எழுதுகின்றனர்!

இன்று  டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு தமிழகம் முழுவதும் 6,962 மையங்களில்  நடக்கிறது. இதில், 20 லட்சத்து 69 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில், குரூப் 4 பதவியில் அடங்கிய கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், வரி தண்டலர், நில அளவர், வரைவாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் உள்ளிட்ட நிலைகளில் உள்ள 9,351 காலிப் பணியிடங்களை நிரப்ப கடந்தாண்டு நவம்பரில் அறிவிப்பு வெளியானது. இதையடுத்து, இப்பணிகளுக்கான போட்டித் தேர்வு … Read more

இந்தியா முழுவதும் லட்சகணக்கில் காவலர்கள் படையில் காலி பணியிடங்கள்!

மாநிலங்களவையில் மத்திய அரசு, நாட்டில் காவலர்கள் படையில் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளதாக  தெரிவித்துள்ளது. இதுகுறித்த கேள்விக்கு மத்திய இணை அமைச்சர் ஹன்ஸ்ராஜ் அஹிர் அளித்த பதிலில், 19 லட்சத்து 89 ஆயிரத்து 295 காவலர்கள் படையில் பதவிகளில், கடந்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதி வரை 4 லட்சத்து 43 ஆயிரத்து 524 பதவிகள் காலியாக உள்ளதாகக் கூறினார். இது அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் உள்ள காலியிடங்கள் எனச் சுட்டிக்காட்டிய … Read more

ரயில்வேயில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !இதோ விண்ணப்பிக்க கடைசி தேதி ….

ரயில்வ தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,   ரயில்வே உதவி ஓட்டுநர், தொழில்நுட்ப பணியாள்கள் என பல்வேறு பிரிவுகளில் 26,000 பேரை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி, பத்தாம் வகுப்பு, ஐடி, பொறியியல், டிப்ளமோ உள்ளிட்ட கல்வித் தகுதி உடைய 18 வயது முதல் 30 வயதுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மார்ச் 5-ம் தேதி விண்ணப்பிப்பதற்கு கடைசி நாளாகும். இடஒதுக்கீடு பிரிவில் வயது வரம்பில் சலுகை வழங்கப்பட்டுள்ளது. பிற்பட்டோருக்கான ஒதுக்கீட்டில் 3 ஆண்டுகளும், தாழ்த்தப்பட்டோருக்கான ஒதுக்கீட்டில் 5 ஆண்டுகளும் … Read more

தனியார் கல்லூரி பேருந்து திருப்பூரில்  சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து!

தனியார் கல்லூரி பேருந்து திருப்பூரில்  சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்து.  20க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் காயமடைந்தனர். திருப்பூர் முத்தூர் பகுதியில் கருப்பணன் மாரியப்பன் கலை அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இன்று காலை அந்த கல்லூரி பேருந்து மாணவர்களுடன் கல்லூரிக்குச் சென்றுகொண்டிருந்த போது கூலிப்பாளையம் அருகே பேருந்து ஓட்டுநர் -க்கு வலிப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் நிலை தடுமாறிய பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 20க்கும் மேற்பட்ட மாணவ – மாணவியர் காயம் அடைந்தனர். … Read more

தனியார் பள்ளிகளில் ஆசிரியர்-மாணவர் விகிதாச்சாரத்தை பின்பற்ற வேண்டுமா?

உயர்நீதிமன்றத்தில் 3 நீதிபதிகள் அமர்வுக்கு அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகள், கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் ஆசிரியர் – மாணவர் விகிதாச்சாரத்தை பின்பற்ற வேண்டுமா? என்பது குறித்த விசாரணைக்கு  பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணயக் குழு, 2015 – 16 முதல் மூன்று ஆண்டுகளுக்கு கட்டணம் நிர்ணயித்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. சென்னை செங்குன்றம் விவேகானந்தா மெட்ரிகுலேஷன் உள்ளிட்ட பள்ளிகள் தொடர்ந்த … Read more

லஞ்ச ஒழிப்புத்துறை கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில் சோதனை!

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியர் பணி நியமனத்துக்காக 30 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரையடுத்து  சோதனை மேற்கொண்டுள்ள லஞ்ச ஒழிப்புத்துறையினர், துணைவேந்தர் கணபதியிடமுடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை பாராதியார் பல்கலைக் கழகத்தில் கவுரவ விரிவுரையாளராக பணியாற்றி வரும் சுரேஷ் என்பவர், கல்லூரியில் உள்ள உதவி பேராசியர் பணியிடத்திற்காக விண்ணப்பித்துள்ளார். அவருக்கு பணி வழங்க பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி, 30 லட்சம் லஞ்சம் கேட்டதாகவும், அதில் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கமாகவும், 29 … Read more

மருத்துவ மாணவர்களே உஷார்! கோடிக்கணக்கில் பண மோசடி செய்தவர் கைது …..

மத்திய குற்றப்பிரிவு போலீசார் மருத்துவச் சீட்டு வாங்கி தருவதாக 20க்கும் மேற்பட்டோரிடம் கோடிக்கணக்கில் பணம் மோசடி செய்த நபரை  கைது செய்தனர். சென்னை எழும்பூரை சேர்ந்த குமார் என்பவர், தமது மகனுக்கு மருத்துவச்சீட்டு வாங்குவதற்காக, ராஜேஸ்வரன் என்பவரிடம் 35 லட்சம் ரூபாயை கடந்த 2013 ஆம் ஆண்டு கொடுத்தார். பூனேவில் உள்ள மருத்தவக் கல்லூரியில் இடம் பெற்றுத் தருவதாக கூறிய ராஜேஸ்வரன், பின்னர் தலைமறைவானார். புகாரின்பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், தர்மபுரியில் … Read more