மருத்துவ கல்லூரிகளில் சேர இன்று கடைசி நாள்!

முதல் சுற்று கலந்தாய்வில் இடங்களை ஒதுக்கி ஆணை பெற்றவர்கள் கல்லூரிகளில் சேர்வதற்கு இன்று கடைசி நாள். மருத்துவ கல்லூரிகளில் சேருவதற்கு இன்றே கடைசி நாள் என்று மருத்துவ கல்லூரி இயக்ககம் அறிவித்துள்ளது. அதாவது, இடஒதுக்கீடு பெற்ற மாணவர்கள் மருத்துவ கல்லூரிகளில் சேர இன்று கடைசி நாளாகும். எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான பொது கலந்தாய்வு ஆன்லைனில் நடைபெற்றது என்று மருத்துவ கல்லூரி இயக்கக அதிகாரிகள் தெரிவித்தன. இந்த கலந்தாய்வில் 5,647 எம்பிபிஎஸ் இடங்களும், 1,389 பிடிஎஸ் இடங்களும் நிரம்பியது. … Read more

இந்த மருந்துகளை விற்றால் மருந்துக்கடைகளின் உரிமங்கள் உடனடியாக ரத்து – தமிழ்நாடு மருந்துகட்டுப்பாட்டு வாரியம்

மருந்து கடைகளில் போதை தரும் மருந்துகளை விற்றால், மருந்து கடையின் உரிமம் உடனடியாக ரத்து செய்யப்படும் என தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு.  தமிழகத்தில் சமீப நாட்களாக போதை பொருட்களை தடுப்பதற்கு தமிழக அரசும், காவல்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் மருந்து கடைகளில் போதை தரும் மருந்துகளை விற்றால், மருந்து கடையின் உரிமம் உடனடியாக ரத்து செய்யப்படும் என தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. போதை தரும் மருந்துகளை … Read more

கால்நடை மருத்துவப் படிப்புகளில் மாணவர் சேர்க்கை – 2,000 பேர் விண்ணப்பம்…!

கால்நடை மருத்துவப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான நேற்று விண்ணப்பப் பதிவு தொடங்கிய நிலையில், இதுவரை 2,000 பேர் விண்ணப்பித்துள்ளனர்.  இளநிலை கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு நேற்று தொடங்கிய நிலையில், (செப்டம்பர் 12ம் தேதி) 26ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு  ஆன்லைனில் http://adm.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.  அதன்படி, கால்நடை மருத்துவப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான நேற்று விண்ணப்பப் பதிவு தொடங்கிய நிலையில், இதுவரை … Read more

#BREAKING: கூடுதலாக 1,450 மருத்துவ மாணவர் சேர்க்கை – அமைச்சர் அறிவிப்பு

மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 4,308 காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு. தமிழ்நாட்டில் கூடுதலாக 1,450 மருத்துவ மாணவர சேர்க்கை இந்த ஆண்டே தொடங்கப்படும் என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். தமிழக சட்டபேரவையில் பேசிய அமைச்சர், ரூ.1,018.85 கோடியில் 19 மருத்துவமனைகள் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளாக தரம் உயர்த்தப்படும் என்றும் 12 மாவட்ட அரசு மருத்துவமனைகளில் ரூ.15 கோடியில் புதிய ஒருங்கிணைந்த ஆய்வகங்கள் அமைக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார். மருத்துவ … Read more

கல்விக் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் – சீமான்

உக்ரைனிலிருந்து தாயகம் திரும்பிய மருத்துவ மாணவர்கள் இந்திய மருத்துவக் கல்லூரிகளில் படிப்பினைத் தொடர அனுமதிப்பதோடு, அவர்களது கல்விக் கடன்களையும் முழுமையாக தள்ளுபடி செய்ய இந்திய மத்திய அரசு முன்வர வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உக்ரைன் நாட்டில் ஏற்பட்டுள்ள கொடும் போர்ச்சூழலில் சிக்கி உயிர் பிழைத்து வந்துள்ள இந்திய மாணவ, மாணவியரை அவரவர் மாநிலங்களில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து மருத்துவப் படிப்பினைத் … Read more

மருத்துவ மாணவர் சேர்க்கை முறைகேடு – வழக்கு பதிய ஐகோர்ட் உத்தரவு!

மாணவர் சேர்க்கை கிடைக்காமல் பாதிக்கப்பட்ட இருவருக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடாக வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு. தனியார் கல்லூரிகளில் மருத்துவ மேற்படிப்பு சேர்க்கை முறைகேட்டில் ஈடுபட்டோர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாணவர் சேர்க்கையில் முறைகேட்டில் தொடர்புடையோர், தனியார் கல்லூரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் மருத்துவ கல்வி இயக்குநரக அதிகாரிகள், துறையினரை விசாரிக்க சிபிசிஐடிக்கு நீதிபதி தண்டபாணி ஆணையிட்டார். முறைகேட்டில் தொடர்புடைய தேர்வுக்குழு … Read more

மக்களே ஒரு அரிய வாய்ப்பு…! மருத்துவ பணியாளர்கள் பணிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் இதுவே..! – மருத்துவ துறை

தமிழகம் முழுவதும் 7,296 மருத்துவ பணியாளர் பணிக்கு டிச.15-க்குள் விண்ணப்பிக்கலாம் என மருத்துவத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 7,296 மருத்துவ பணியாளர் பணிக்கு டிச.15-க்குள் விண்ணப்பிக்கலாம் என மருத்துவத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, nhm.tn.gov.in- விண்ணப்பத்தை பதிவிறக்கி மாவட்ட நல்வாழ்வு சங்க துணை இயக்குனர் அலுவலகத்துக்கு அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 4,848 இடைநிலை மருத்துவ பணியாளர் பணியிடத்துக்கு B.sc nursing அல்லது செவிலியர் பட்டயப்படிப்பு அவசியம். 2,448 பல்நோக்கு மருத்துவ பணியாளர் பணியிடத்துக்கு +2-வில் உயிரியல் … Read more

மக்களுக்கு மருத்துவ சேவை வழங்குவதில் புதிய மறுமலர்ச்சியை இத்திட்டம் ஏற்படுத்தும் – அன்புமணி ராமதாஸ்

மக்களுக்கு மருத்துவ சேவை வழங்குவதில் புதிய மறுமலர்ச்சியை இத்திட்டம் ஏற்படுத்தும். பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கடந்த ஆண்டு சுதந்திர தின உரையில் மின்னணு மருத்துவ திட்டம் நாடு முழுவதும் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவித்திருந்த நிலையில், தேசிய டிஜிட்டல் சுகாதார திட்டத்தை டெல்லியில் இருந்து காணொலியில் பிரதமர் தொடங்கி வைத்தார். டிஜிட்டல் சுகாதார திட்டத்தின் மூலம் ஒவ்வொரு நபருக்கும் ஐடி, அடையாள எண் உருவாக்கப்பட்டு அட்டை தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் அவர்கள் … Read more

மக்களுக்கு மருத்துவ அடையாள எண் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி..!

தேசிய டிஜிட்டல் சுகாதார திட்டத்தை டெல்லியில் இருந்து காணொலியில் பிரதமர் தொடங்கி வைத்தார். பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கடந்த ஆண்டு சுதந்திர தின உரையில் மின்னணு மருத்துவ திட்டம் நாடு முழுவதும் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவித்திருந்தார். இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டிருந்தார். அந்த பதிவில், இந்திய மருத்துவ துறையில் புதிய அத்தியாயம் எழுதப்பட உள்ளது. நவீன மின்னணு தொழில்நுட்பங்கள் வாயிலாக மருத்துவ சேவைகளை மக்கள் எளிதாக பெற … Read more

மக்களை தேடி மருத்துவம் திட்டம் மூலம் நேற்று வரை 13,247 பேர் பயனடைந்துள்ளனர் – சுகாதாரத்துறை!

மக்களை தேடி மருத்துவம் திட்டம் மூலம் நேற்று வரை 13,247 பேர் பயனடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மக்களை தேடி மருத்துவம் எனும் திட்டத்தை தற்போது தமிழக அரசு புதிதாக தொடங்கியுள்ளது. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் மக்களை தேடி மருத்துவ திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒரு கோடி மக்களுக்கு வீடு தேடி மாத்திரை மருந்துகள் வழங்கும் இந்த திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி கிருஷ்ணகிரியில் துவங்கி வைத்தார். … Read more