ரசிகர்கள் இல்லாமல் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த விருப்பமில்லை.! – டோக்கியோ 2020 தலைவர் பேச்சு.!

பார்வையாளர்கள் இன்றி, ஒலிம்பிக்  போட்டிகளை நடத்துவதில் எனக்கு விருப்பமில்லை. என, டோக்கியோ 2020 தலைவர் யோஷிரோ மோரி கியோடோ தெரிவித்துள்ளார். இந்த வருடம் சரியாக இம்மாதம் ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கோலாகலமாக தொடங்கியிருக்கும். ஆனால், உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று பரவலால் ஒலிம்பிக் போட்டிகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன. இது குறித்து, டோக்கியோ 2020 (ஜப்பான் நாட்டின் ஒலிம்பிக் போட்டி கமிட்டி) தலைவர் யோஷிரோ மோரி கியோடோ அண்மையில் ஒரு செய்தி சேனலுக்கு தெரிவிக்கையில், ‘ … Read more

கொரோனா வைரஸ் சிகிச்சைக்கான புதிய மருந்தை அங்கீகரித்த ஜப்பான்.!

கொரோனா தடுப்பு மருந்தாக ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் மருந்து பட்டியலில் டெக்ஸாமெதாசோன் ( Dexamethasone ) எனும் தடுப்பு மருந்தை பயன்படுத்த ஜப்பான் நாட்டு அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தை குறைக்க உலக நாடுகள் போராடி வருகின்றன. பல்வேறு நாடுகளில் ஆராய்ச்சியாளர்கள், கொரோனாவுக்கு மருந்து கணடறிய தீவிர ஆராய்ச்சியில் உள்ளனர். இந்நிலையில், பிரிட்டனில், அண்மையில் கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சைக்காக டெக்ஸாமெதாசோன் ( Dexamethasone ) எனும் மருந்தை பயன்படுத்தியுள்ளது. இந்த தடுப்பு மருந்தை … Read more

ஜப்பானிலிருந்து செவ்வாய் கிரகத்திற்கு ஏவப்பட்டுள்ள முதல் ஆளில்லா அரபு விமானம்!

ஹோப் எனும் ஆளில்லா அரபு விமானம் ஜப்பானிலிருந்து முதன்முறையாக செவ்வாய் கிரகத்திற்கு ஏவப்பட்டுள்ளது. ஜப்பானிலிருந்து கடந்த திங்கள் கிழமை ஆளில்லாத ஹோப் எனும் பெயருடைய அரபு விமானம் செவ்வாய் கிரகத்திற்கு ஏவப்பட்டுள்ளது. அரபு மொழியில் அல்-அமல் எனும் பெயருடைய விமானம் காலை 6.58- க்கு திட்டமிட்டபடி ஏவப்பட்டுள்ளது. ஏவப்பட்டு ஒரு மணிநேரத்திற்கு பிறகு ஆய்வுகூடத்தில் வெற்றியடைந்த மகிழ்ச்சி கொண்டாடப்பட்டுள்ளது. இந்த அரபு விமானம் ஜப்பானில் ஏவப்படுவது இதுவே முதன்முறையாகும்.

ஜப்பானில் வெள்ளம் காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 66 ஐ எட்டியுள்ளது!

ஜப்பானில் அதிக மழை பொழிவில் ஏற்பட்ட வெள்ளத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது. ஜப்பானில் அண்மையில் பெய்த கனமழையால் அங்கு அதிகப்படியகியான வெள்ளப்பெருக்கு வந்ததுடன், அநேக மக்களும் பாதிக்கப்பட்டனர். பொருளாதாரங்கள் அணைத்து சீர்குலைந்த நிலையில் உள்ளது ஜப்பான். இந்நிலையில், இதுவரை வந்த வெள்ளப்பெருக்கு அழிவில் நேற்று அதாவது வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி 66 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 16 பேர் காணாமலும் போயுள்ளனர். இன்னும் கனமழைக்கு வாய்ப்புகள் உள்ளதால் காணாமல் போனவர்களை தேடும் பணியில் தீவிரம் … Read more

ஜப்.,கப்பல்கள் வருகை மகிழ்ச்சி !எதிர்போம்! சீனாவை-சூலுரை

லடாக்  எல்லைப்பகுதியில் அத்துமீறி நிலைமையை மாற்றும் சீனாவின் முயற்சியை கடுமையாக எதிர்ப்போம் என்று ஜப்பான் தெரிவித்துள்ளது. இது குறித்து இந்தியாவுக்கான ஜப்பான் துாதர், சடோஷி சுசூகி, தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியுள்ளதாவது: லடாக்கில், எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில், நிலைமையை மாற்றும் சீனாவின் முயற்சியை, ஜப்பான் கடுமையாக எதிர்க்கும். எல்லையில் அமைதியை ஏற்படுத்த, இந்தியா எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு எல்லாம் ஜப்பான் முழுமையாக ஆதரவு அளிக்கும்.லடாக் எல்லைப் பிரச்னை பற்றி, இந்திய வெளியுறவு செயலர், ஹர்ஷ் வர்த்தன் ஷ்ரிங்லாவுடன் … Read more

ஜப்பானுக்குள் நுழைய இந்தியா உள்பட 11 நாடுகளுக்கு தடை!

கொரோனா அச்சத்தால் இந்தியாவையும் சேர்த்து 11 நாடுகளை தங்கள் நாட்டுக்குள் வர அனுமதி மறுத்துள்ள ஜப்பான்.  உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதல் இன்னும் குறைந்த பாடில்லை. 50 லட்சத்து 50 ஆயிரத்தை கடந்துவிட்டது. இந்நிலையில், அதிகமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் கூட கொரோனா அலை ஓயவில்லை.  இந்நிலையில், அதிகம் பாதிக்கப்பட்ட 10 நாடுகளில் 10 வது நாடக இந்தியா அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை கடந்துள்ளது. ஜப்பானுக்கும் தற்பொழுது விமான சேவை மற்றும் இயல்பு நிலை … Read more

பெண் பிள்ளைக்கு ‘வேண்டாம்’ என பெயரிட்ட பெற்றோர்! இன்று பலராலும் ‘வேண்டும்’ என பயன்படுத்தப்படும் சாதனை மாணவி!

திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை அருகில் உள்ள நாராயணபுரம் கிராமத்தில் வசிப்பவர்கள், தங்களுக்கு தொடர்ந்து பெண் குழந்தை பிறந்தால், மூன்றாவது பிறக்கும் பெண் குழந்தைக்கு ‘வேண்டாம்’ என பெயர் சூட்டுவார்களாம். அப்படி பெயர் சூட்டினால் தான் அவர்களுக்கு நான்காவதாக ஆண் குழந்தை பிறக்கும் என்பது அந்த கிராமத்து மக்களின் நம்பிக்கை. இந்நிலையில்,  அந்த கிராமத்தை சேர்ந்த அசோகன், கௌரி என்ற தம்பதியினருக்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தை உள்ள நிலையில், மூன்றாவதாக பிறந்த பெண்குழந்தைக்கு ‘வேண்டாம்’ என பெயரிட்டுள்ளனர். இந்நிலையில், … Read more

ஹீல்ஸிற்கு எதிராக போர்க்கொடி தூக்கிய ஜப்பான் நாட்டுப் பெண்கள்! காரணம் என்ன?

தற்காலத்தில் பெண்களின் நவீன வகை காலணியாக ஹீல்ஸ் காலணி வகைகள் உள்ளது. இந்த காலணிகளை உலகில் அதிகமான பெண்கள் விரும்புகிறார்கள். அதில் பல வண்ண மாடல்கள் இருப்பதாலும், தங்களை உயரமாக காட்டிக் கொள்ளவும் பெண்கள் இதனை வெகுவாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால் சில உடல் ரீதியாக பிரச்சினைகள் வந்தாலும் பெண்கள் தற்போதும் அதிகம் விரும்பி அணிந்து வருகின்றனர். இந்நிலையில் ஜப்பான் நாட்டுப் பெண்கள் தங்களது அலுவலகங்களில் ஹீல்ஸ் அணிய கட்டாயப்படுத்துவதாக கூறி அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். … Read more

மீண்டும் ஜப்பானில் புதிய தொழில்நுட்பத்துடன் வெளியாகப்போகும் சூப்பர் ஸ்டாரின் ‘முத்து’!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் முத்து. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து இருந்த அனைத்து பாடல்களும் பெரும் வெற்றி பெற்றன. இப்படத்தில் மீனா ஹீரோயினாக நடித்திருந்தார். இப்படம் தமிழில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக ஜாப்பான் மொழியில் டப் செய்யப்பட்டு அங்கும் ரிலீஸ் செய்யப்பட்டது. இப்படம் அங்கும் மாபெரும் வெற்றியடைந்தது. அதற்க்கு பிறகு ரஜினிக்கு ஜப்பானிலும் ரசிகர் மன்றங்கள் அமைந்தன. இந்நிலையில் அதே முத்து படம் 4K … Read more

கடலில் மூழ்கி காணாமல் போன தீவு..அதிர்ச்சியில் ஜப்பான்..!!

ஜப்பான் எப்போதும் கடுமையான பூகம்பங்கள், சுனாமி என்று கடும் இயற்கைச் சீற்றங்களை, தேசியப் பேரிடர்களை அடிக்கடி சந்தித்து வரும் நாடு என்பது நன்கு அறியப்பட்ட ஒன்றே. இந்நிலையில் வடக்கு ஜப்பானில் உள்ள சிறிய தீவு ஒன்று காணாமல் போயுள்ளது ஜப்பான் அதிகாரிகளிடத்தில் அதிர்ச்சியையும் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.இதனையடுத்து இந்தத் தீவு கடல்நீரில் மூழ்கிவிட்டதா என்று ஆய்வு மேற்கொள்ள ஜப்பான் முடிவெடுத்துள்ளது. இந்தத் தீவின் பெயர் இசாம்பே ஹனகிட்ட கொஜிமா 1987-ல் கண்டுபிடிக்கப்பட்டது, ஆனால் இது எவ்வளவு பெரிய தீவு … Read more