கொரோனா வைரஸ் சிகிச்சைக்கான புதிய மருந்தை அங்கீகரித்த ஜப்பான்.!

கொரோனா தடுப்பு மருந்தாக ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் மருந்து பட்டியலில் டெக்ஸாமெதாசோன் ( Dexamethasone ) எனும் தடுப்பு மருந்தை பயன்படுத்த ஜப்பான் நாட்டு அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தை குறைக்க உலக நாடுகள் போராடி வருகின்றன. பல்வேறு நாடுகளில் ஆராய்ச்சியாளர்கள், கொரோனாவுக்கு மருந்து கணடறிய தீவிர ஆராய்ச்சியில் உள்ளனர்.

இந்நிலையில், பிரிட்டனில், அண்மையில் கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சைக்காக டெக்ஸாமெதாசோன் ( Dexamethasone ) எனும் மருந்தை பயன்படுத்தியுள்ளது. இந்த தடுப்பு மருந்தை பயன்படுத்திய நோயாளிகள் விரைவில் குணமடைந்ததாகவும், அந்த மருந்தை பயன்படுத்தியவர்களின் இறப்பு விகிதம் குறைந்து வருவதாகவும் அந்நாட்டு மருத்துவ குழு தெரிவித்துள்ளது.

இதனை அடுத்து, ஜப்பான் நாட்டு மருத்துவ குழு தற்போது கொரோனா தடுப்பு மருந்தாக ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் தடுப்பு மருந்து பட்டியலில்,  ரெம்டெசிவர் (Remdesivir)  மருந்துடன் டெக்ஸாமெதாசோன் ( Dexamethasone ) தடுப்பு மருந்தையும் பயன்படுத்த அந்நாட்டு அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதாம். இதனை ஜப்பான் நாட்டு ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டுள்ளன.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.