ஜப்பானிலிருந்து செவ்வாய் கிரகத்திற்கு ஏவப்பட்டுள்ள முதல் ஆளில்லா அரபு விமானம்!

ஹோப் எனும் ஆளில்லா அரபு விமானம் ஜப்பானிலிருந்து முதன்முறையாக செவ்வாய் கிரகத்திற்கு ஏவப்பட்டுள்ளது.

ஜப்பானிலிருந்து கடந்த திங்கள் கிழமை ஆளில்லாத ஹோப் எனும் பெயருடைய அரபு விமானம் செவ்வாய் கிரகத்திற்கு ஏவப்பட்டுள்ளது. அரபு மொழியில் அல்-அமல் எனும் பெயருடைய விமானம் காலை 6.58- க்கு திட்டமிட்டபடி ஏவப்பட்டுள்ளது.

ஏவப்பட்டு ஒரு மணிநேரத்திற்கு பிறகு ஆய்வுகூடத்தில் வெற்றியடைந்த மகிழ்ச்சி கொண்டாடப்பட்டுள்ளது. இந்த அரபு விமானம் ஜப்பானில் ஏவப்படுவது இதுவே முதன்முறையாகும்.

author avatar
Rebekal