ஜில் நியூஸ்; 7 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு.!

தமிழகத்தில் 7 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் வட தமிழகத்தில் 7 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப் மேலும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.

கோவை, நீலகிரி, வேலூர், திண்டுக்கல், காஞ்சிபுரம், நாமக்கல், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஏழு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று கூறப்படுகிறது.

மேலும் சென்னை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.