பாராலிம்பிக்கில் 5வது தங்கம்.., வரலாற்றில் அதிகம் பதக்கம் வென்ற இந்தியா!

டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பேட்மிண்டனில் இந்தியாவின் கிருஷ்ணா நாகர் தங்கம் வென்றார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் மாற்றுத்திறனாளிகளுக்கான 16ஆவது பாராலிம்பிக் போட்டிகள் இன்றுடன் நிறைவடைகிறது. இன்று காலை நடைபெற்ற பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் ஆடவா் ஒற்றையா் எஸ்எச்.6 பிரிவில் ஹாங்காங் வீரர் மன் காய் சூவை எதிர்கொண்ட இந்தியா வீரர் கிருஷ்ணா நாகர் 2-1 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்று சாதனை படைத்தார். இதன்முலம் டோக்கியோ பாராலிம்பிக்கில் … Read more

#BREAKING: பாராலிம்பிக் வில்வித்தை போட்டியில் வெண்கலம் பதக்கம் வென்ற இந்திய வீரர்!

பாராலிம்பிக் ஆடவர் வில்வித்தை போட்டியில் இந்திய வீரர் ஹர்விந்தர் சிங் வெண்கல பதக்கம் வென்றார். டோக்கியோ பாராலிம்பிக் ஆடவர் வில்வித்தை அரையிறுதியில் தோல்வியடைந்த இந்திய வீரர் ஹர்விந்தர் சிங், வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் விளையாடி பதக்கத்தை வென்றுள்ளார். வெண்கலப் பதக்கப் போட்டியில் ஹர்விந்தர் சிங், தென் கொரியாவின் கிம் மின் சூவை வீழ்த்தியுள்ளார். வில்வித்தையில் வெண்கலம் பதக்கம் வென்றதன் மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. அதன்படி, பாராலிம்பிக் தொடரில் இந்தியா இதுவரை 2 … Read more

பாராலிம்பிக் ஆடவர் வில்வித்தை அரையிறுதியில் இந்திய வீரர் தோல்வி!

டோக்கியோ பாராலிம்பிக் ஆடவர் வில்வித்தை அரையிறுதியில் இந்திய வீரர் ஹர்விந்தர் சிங் தோல்வி. டோக்கியோ பாராலிம்பிக் ஆடவர் வில்வித்தை அரையிறுதியில் தோல்வியடைந்த இந்திய வீரர் ஹர்விந்தர் சிங், வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் விளையாட உள்ளார். வெண்கலப் பதக்கப் போட்டியில் ஹர்விந்தர் சிங், கொரியாவின் கிம் மின் சுவை எதிர்கொள்கிறார் என்பது குறிப்பிடப்படுகிறது.

புதிய ஆசிய சாதனை – வெள்ளி பதக்கம் வென்ற பிரவீன் குமாருக்கு முதல்வர் வாழ்த்து!

பாராலிம்பிக்ஸில் உயரம் தாண்டுதலில் இந்திய வீரர் பிரவீன் குமார் வெள்ளிப் பதக்கம் வென்றதுக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் வாழ்த்து. டோக்கியோ பாராலிம்பிக்ஸில் இன்று நடைபெற்ற ஆண்கள் உயரம் தாண்டுதல் (T64) போட்டியில் இந்தியா சார்பில் 18வயதான பிரிவின் குமார் பங்கேற்றார். இந்த போட்டியில், பிரவீன்குமார் 2.07 மீ உயரம் தாண்டி 2வது இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். பாராலிம்பிக்ஸ் போட்டியில் முதல் முறையாக பங்கேற்ற பிரவீன் குமார், 2.7மீட்டர் உயரம் தாண்டி புதிய ஆசிய சாதனையைப் … Read more

ரசிகர்கள் இல்லாமல் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த விருப்பமில்லை.! – டோக்கியோ 2020 தலைவர் பேச்சு.!

பார்வையாளர்கள் இன்றி, ஒலிம்பிக்  போட்டிகளை நடத்துவதில் எனக்கு விருப்பமில்லை. என, டோக்கியோ 2020 தலைவர் யோஷிரோ மோரி கியோடோ தெரிவித்துள்ளார். இந்த வருடம் சரியாக இம்மாதம் ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கோலாகலமாக தொடங்கியிருக்கும். ஆனால், உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று பரவலால் ஒலிம்பிக் போட்டிகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன. இது குறித்து, டோக்கியோ 2020 (ஜப்பான் நாட்டின் ஒலிம்பிக் போட்டி கமிட்டி) தலைவர் யோஷிரோ மோரி கியோடோ அண்மையில் ஒரு செய்தி சேனலுக்கு தெரிவிக்கையில், ‘ … Read more