#Breaking:பாராலிம்பிக் வீரர் மாரியப்பன் தங்கவேலுவுக்கு அரசு வேலை – முதல்வர் வழங்கிய பணி ஆணை!

மாரியப்பன் தங்கவேலுவுக்கு அரசு வேலைக்கான பணி ஆணையை முதல்வர் ஸ்டாலின் வழங்கியுள்ளார். டோக்கியோ பாராலிம்பிக்கில் மாற்றுத்திறனாளிகளுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் வெள்ளி வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுக்கு குரூப் 1 பிரிவில் அரசு வேலைக்கான பணி ஆணையை முதல்வர் ஸ்டாலின் வழங்கியுள்ளார். அதன்படி,தமிழ்நாடு காகித ஆலையின் மார்க்கெட்டிங் பிரிவில் மாரியப்பனுக்கு துணை மேலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.  

பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு..!

பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. டோக்கியோ பாராலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற மாரியப்பன் சொந்த ஊருக்கு வந்த நிலையில் அவருக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. மாரியப்பன் தொடந்து இரண்டாவது முறையாக பாராலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றுள்ளார். தற்போது நடந்து முடிந்த பாராலிம்பிக் போட்டியில், உயரம் தாண்டுதலில் 1.86 மீட்டர் தாண்டி வெள்ளி பதக்கம் வென்றார். தற்போது இவரது சொந்த ஊரான சேலம் அருகே உள்ள பெரிய வடகம்பட்டிக்கு திரும்பியுள்ள … Read more

தங்கம் மற்றும் வெள்ளி பதக்கம் வென்ற இந்திய வீரர்களுக்கு பரிசுத்தொகை அறிவிப்பு…! – ஹரியானா அரசு

பாராலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கம் வென்ற இந்திய வீரர்களுக்கு பரிசுத்தொகை அறிவிப்பு  ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16-வது  பாராலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது.  இந்நிலையில், டோக்கியோ பாராலிம்பிக்கில் 50 மீட்டர் துப்பாக்கிசூடுதல் போட்டியின் ஒரே பிரிவில் இந்திய வீரர் மணீஷ் நர்வாலுக்கு தங்க பதக்கமும், சிங்ராஜுக்கு வெள்ளி பதக்கமும் கிடைத்துள்ளது. இந்த துப்பாக்கிசூடுதல் போட்டியில் தங்கம் வென்றுள்ள மணீஷ் நர்வால் 218.2 புள்ளிகளுடன் பாராலிம்பிக்கில்  படைத்துள்ளார்.  மேலும், ஏற்கனவே 10 … Read more

#BREAKING: பாராலிம்பிக் வில்வித்தை போட்டியில் வெண்கலம் பதக்கம் வென்ற இந்திய வீரர்!

பாராலிம்பிக் ஆடவர் வில்வித்தை போட்டியில் இந்திய வீரர் ஹர்விந்தர் சிங் வெண்கல பதக்கம் வென்றார். டோக்கியோ பாராலிம்பிக் ஆடவர் வில்வித்தை அரையிறுதியில் தோல்வியடைந்த இந்திய வீரர் ஹர்விந்தர் சிங், வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் விளையாடி பதக்கத்தை வென்றுள்ளார். வெண்கலப் பதக்கப் போட்டியில் ஹர்விந்தர் சிங், தென் கொரியாவின் கிம் மின் சூவை வீழ்த்தியுள்ளார். வில்வித்தையில் வெண்கலம் பதக்கம் வென்றதன் மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. அதன்படி, பாராலிம்பிக் தொடரில் இந்தியா இதுவரை 2 … Read more

அரசு வேலை கேட்டு முதல்வரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன் – மாரியப்பன்

அடுத்த ஒலிம்பிக்கில் கண்டிப்பாக தங்க பதக்கம் வென்று வருவேன் என ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற மாரியப்பன் நம்பிக்கை. டோக்கியோ பாராலிம்பிக்கில் உயரம் தாண்டுதல் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற பிறகு டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மாரியப்பன், பதக்கம் வென்ற மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த முறை தங்கத்தை எதிர்பார்த்து சென்றேன். ஆனால், மழை பெய்ததால் சற்று இடையூறு ஏற்பட்டது. அதனால், வெள்ளி பதக்கம் வென்றதாக தெரிவித்தார். அடுத்த ஒலிம்பிக்கில் கண்டிப்பாக தங்க பதக்கம் வென்று வருவேன். … Read more

#BREAKING: துப்பாக்கி சுடுதலில் அவனி லெகாரா மேலும் ஒரு பதக்கம்..!

50 மீட்டர் ரைபிள் பிரிவில் இந்திய வீராங்கனை அவனி லெகாரா வெண்கல பதக்கம் வென்றார். டோக்கியோ பாராலிம்பிக் 50 மீட்டர் ரைபிள் பிரிவில் இந்திய வீராங்கனை அவனி லெகாரா வெண்கல பதக்கம் வென்றார். 50மீட்டர் துப்பாக்கிச்சுடுதலில் 445.9 புள்ளிகளுடன் 3வது இடம் பிடித்து வெண்கலம் வென்றார். இதனால் இந்தியாவிற்கு 12-வது பதக்கம் உறுதியானது. ஏற்கனவே அவனி லெகாரா 10 மீட்டர் ரைபிள் துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. நடப்பு டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் இந்தியா … Read more

பாராலிம்பிக் 10 மீ ஏர் பிஸ்டல்;பதக்க வாய்ப்பை இழந்த இந்தியாவின் ரூபினா பிரான்சிஸ்..!

பாராலிம்பிக் 10 மீ ஏர் பிஸ்டல் எஸ்எச் 1 இறுதிப் போட்டியில் இந்தியாவின் ரூபினா பிரான்சிஸ் பதக்க வாய்ப்பை இழந்தார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16வது பாராலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.அதன்படி, இன்றுகாலை நடைபெற்ற 10 மீட்டர் ஏர் பிஸ்டல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா வீராங்கனை ரூபினா பிரான்சிஸ் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். இந்நிலையில்,அதன்பின்னர் நடைபெற்ற பி 2 மகளிர் 10 மீ ஏர் பிஸ்டல் எஸ்எச் 1 இறுதிப் போட்டியில்  ரூபினா … Read more

“பாராலிம்பிக்கில் சுமித் அண்டில் சாதனை;நாட்டிற்கு பெருமை” – பிரதமர் மோடி வாழ்த்து..!

பாராலிம்பிக் ஈட்டி எறிதலில் சுமித் அன்டில் தங்கப் பதக்கம் வென்றதற்காக பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். டோக்கியோ பாராலிம்பிக்ஸ் ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் சுமித்,பாராலிம்பிக்கில் இதுவரை இல்லாத அளவிற்கு 68.55 மீட்டர் தூரம் ஈட்டி எரிந்து புதிய உலக சாதனை படைத்துள்ளார். இதனால்,டோக்கியோ பாராலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் சுமித் அண்டில் தங்கம் பதக்கம் வென்றார். ஏற்கனவே, மகளிர் 10 மீட்டர் ஏர்ரைபிள் துப்பாக்கி சுடுதல் இறுதிப்போட்டியில் இந்தியாவை சேர்ந்த வீராங்கனை … Read more

‘பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு பொன்னான நாள்’ – தங்கம் வென்ற சுமித்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து…!

டோக்கியோ பாராலிம்பிக்கில் ஆடவர் ஈட்டி எறிதல் போட்டியில் தங்க பதக்கம் வென்ற சுமித்-க்கு முதல்வர் வாழ்த்து.  டோக்கியோ பாராலிம்பிக்கில் இந்தியாவின் சுமித் அண்டில், ஆடவர் ஈட்டி எறிதல் போட்டியில் அதிகபட்சமாக 68.55 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து உலக சாதனை படைத்ததை தொடர்ந்து, தங்கம் பதக்கம் வென்றார். இவர் 66.95, 68.08, 68.55 மீட்டர் கணக்கில் தன் சாதனையை ஒரே போட்டியில் 3 முறை முறியடித்து, தனி சாதனை படைத்துள்ளார். இவருக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் … Read more

அதிர்ச்சி…பாராலிம்பிக் வட்டு எறிதலில் வெண்கலம் வென்ற வினோத் குமாருக்கு நேர்ந்த சோகம்.!

பாராலிம்பிக் வட்டு எறிதலில் வெண்கலம் வென்ற வினோத் குமாரின் பதக்கம் திரும்ப பெறப்பட்டுள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 16வது பாராலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது.அதன்படி,நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான எஃப் -52 வட்டு எறிதல் போட்டியில் இந்தியா வீரர் வினோத் குமார் பங்கேற்று,முதல் முயற்சியில் 17.46 மீட்டர் தூரம் வீசினார்.அதன்பின்னர் இரண்டாவது முயற்சியில் 18.32 மீட்டர் தூரமும், மூன்றாவது முயற்சியில் 17.80 மீட்டர் தூரமும் வீசினார். இதனைத் தொடர்ந்து,நான்காவது முயற்சியில் 19.12 மீட்டர் தூரமும், ஐந்தாவது முயற்சியில் அதிகபட்சமாக … Read more