மீண்டும் ஜப்பானில் புதிய தொழில்நுட்பத்துடன் வெளியாகப்போகும் சூப்பர் ஸ்டாரின் ‘முத்து’!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் முத்து. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து இருந்த அனைத்து பாடல்களும் பெரும் வெற்றி பெற்றன. இப்படத்தில் மீனா ஹீரோயினாக நடித்திருந்தார். இப்படம் தமிழில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பை பெற்றது.

குறிப்பாக ஜாப்பான் மொழியில் டப் செய்யப்பட்டு அங்கும் ரிலீஸ் செய்யப்பட்டது. இப்படம் அங்கும் மாபெரும் வெற்றியடைந்தது. அதற்க்கு பிறகு ரஜினிக்கு ஜப்பானிலும் ரசிகர் மன்றங்கள் அமைந்தன. இந்நிலையில் அதே முத்து படம் 4K தொழில்நுட்பத்துடன் மீண்டும் தயாராகி ஜப்பானில் ரிலீசாக உள்ளது. இதனை வெளியிடும் குழு இன்று ரஜினியை சந்தித்து சென்றனர். மீண்டும் முத்துவை வரவேற்க ரஜினி ரசிகர்கள் தயாராகி விட்டனர்.

source : cinebar.in

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment