தஞ்சை தேர் விபத்து – இன்று விசாரணையை தொடங்குகிறார் வருவாய்த்துறை முதன்மை செயலாளர்!

தஞ்சை தேர் விபத்து குறித்து இன்று விசாரணையை தொடங்குகிறார் வருவாய்த்துறை முதன்மை செயலாளர். தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் கடந்த 27-ஆம் தேதி அதிகாலை சித்திரை திருவிழாவையொட்டி நடைபெற்ற தேர்த் திருவிழாவின்போது மின்சாரம் பாய்ந்த ஏற்பட்டதால், 11 பேர் பலியான நிலையில், 14 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து, அவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் நிவாரண உதவிகளையும் அறிவித்தது. … Read more

#Breaking:கோடநாடு வழக்கு – நீதிபதி திடீர் பணியிடமாற்றம்! !

நீலகிரி மாவட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 ஆம் ஆண்டு  கொலை,கொள்ளை சம்பவம் நிகழ்ந்தது.இது தொடர்பான வழக்கு உதகை நீதிமன்றத்தில் விசாரனையில் உள்ள நிலையில்,திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் வழக்கு விசாரணை தீவிரம் அடைந்தது. அதன்படி,இந்த வழக்கு தொடர்பாக சயான் மற்றும் வாளையாறு மனோஜ் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டு,அனைவரும் தற்போது ஜாமீனில் வெளியே உள்ளனர். அதே சமயம்,கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் இதுவரை கைது செய்யப்பட்டவர்கள் உள்பட 202 … Read more

#JustNow: டிடிவி தினகரனிடம் அமலாக்கத்துறை மீண்டும் விசாரணை!

இரட்டை இலை சின்னத்தை பெற சட்டவிரோதமாக லஞ்சம் கொடுக்க முயன்ற விவகாரத்தில் டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்பு அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் இன்று ஆஜரானார். இந்த வழக்கு தொடர்பாக சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், தினகரன் அமலாக்கத்துறை அலுவலகத்தில் மீண்டும் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். அந்தவகையில் டெல்லி அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் ஏற்கனவே, கடந்த 12-ஆம் தேதி ஆஜராகி விளக்கமளித்த நிலையில், இன்றும் அவரிடம் … Read more

#BREAKING: 2வது நாள் விசாரணை – சசிகலாவிடம் கேட்கப்பட்ட கேள்விகள்!

சிறையில் இருந்த காலத்தில் கோடநாடு பங்களாவின் பொறுப்பு இருந்தது என சசிகலாவிடம் தனிப்படை போலீசார் கேள்வி. கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக சென்னை தி.நகரில் உள்ள வீட்டில் வி.கே.சசிகலாவிடம் இரண்டாவது நாளாக இன்று மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அப்போது சசிகலாவிடம் தனிப்படை போலீசார் கேட்கப்பட்ட கேள்விகள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, சிறையில் இருந்த காலத்தில் கோடநாடு மங்களாவின் பொறுப்பு யாரிடம் இருந்தது என்றும் … Read more

கோடநாடு வழக்கு – சசிகலாவிடம் 2வது நாளாக விசாரணை தொடங்கியது!

கோடநாடு எஸ்டேட் தொடர்பான ஆவணங்கள் மற்றும் முக்கிய கேள்விகளுக்கு சசிகலா பதில். கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக வி.கே.சசிகலாவிடம் இரண்டாவது நாளாக விசாரணை தொடங்கியுள்ளது. நேற்று சுமார் 6 மணிநேரம் விசாரித்த நிலையில், சென்னை தி.நகரில் உள்ள வீட்டில் இன்றும் சசிகலாவிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையிலான தனிப்படை விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணையில் கோடநாடு எஸ்டேட் தொடர்பான ஆவணங்கள் மற்றும் முக்கிய கேள்விகளுக்கு சசிகலா … Read more

#JustNow: கோடநாடு வழக்கு – அதிமுக நிர்வாகியிடம் விசாரணை!

கோடநாடு வழக்கு தொடர்பாக அம்மா பேரவை கோவை மாவட்ட இணை செயலாளர் அனுபவ் ரவியிடம் விசாரணை. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் இதுவரை கைது செய்யப்பட்டவர்கள் உள்பட 202 பேரிடம் விசாரணை என்பது தொடர்ந்து நடைபெற்றிருக்கிறது. இந்த நிலையில், இன்று கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் அம்மா பேரவை கோவை மாவட்ட இணை செயலாளர் அனுபவ் ரவியிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக பல்வேறு சாட்சியங்களிடம் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அதிமுக பிரமுகர் … Read more

#BREAKING: இலங்கையை சேர்ந்த 2 மீனவர்களிடம் விசாரணை!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே இலங்கையை சேர்ந்த 2 மீனவர்களை பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது கடலோர காவல்படை. முல்லைத்தீவு பகுதியை சேர்ந்த சுதாகர் (26), ரோஷன் (30) ஆகியோரை பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. இருவரும் எல்லை தாண்டி மீன்பிடிக்க வந்தார்களா? என்று விசாரணை நடைபெற்று வருவதாகவும், நடுக்கடலில் படகு பழுதானதால் அதிராம்பட்டினம் வந்து சேர்ந்ததாக மீனவர்கள் தெரிவித்தாகவும் தகவல் கூறப்படுகிறது.

பஞ்சாப் முன்னாள் முதல்வரிடம் அமலாக்கத்துறை விசாரணை!

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பஞ்சாப் முன்னாள் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியிடம் அமலாக்கப்பிரிவு விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. சட்டவிரோத மணல் குவாரி முறைகேடு தொடர்பாக சரண்ஜித் சிங்கிடம் 5 மணி நேரம் அமலாக்கப்பிரிவு போலீசார் விசாரித்துள்ளனர். மணல் குவாரி முறைகேடு தொடர்பாக சரண்ஜித் சிங் உறவினர் புபிந்தர் சிங் ஹனியை அமலாக்கப்பிரிவு கைது செய்துள்ளது. இருவருக்கும் உள்ள தொடர்பு குறித்தும் விசாரணை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

பையில் துப்பாக்கியுடன் போலீசாரிடம் பிடிபட்ட 19 வயது சிறுமி ..!

உத்தரபிரதேச மாநிலம் மெயின்புரி பகுதியை சேர்ந்த 19 வயது இளம்பெண் பையில் கைத்துப்பாக்கியுடன் பிடிபட்டுள்ளார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறது. அந்த வீடியோவில் போலீஸ் அதிகாரிகள் இளம்பெண்ணின் சட்டைப்பையில் இருந்து துப்பாக்கியை எடுத்து, அவரிடம் விசாரணை நடத்துவது காண்பிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் பெண் பாலியல் வன்கொடுமை – சிபிசிஐடி விசாரணை நிறைவு!

விருதுநகர் பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் சிபிசிஐடி விசாரணை நிறைவு பெற்றது.  விருதுநகர் பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் சுமார் 6 மணி நேரம் சிபிசிஐடி போலீசார் நடத்திய விசாரணை நிறைவு பெற்றது. சமூக நலத்துறை அலுவலகத்தில் இளம்பெண்ணிடம் எஸ்பி முத்தரசி, டிஎஸ்பி வினோதினி நேரில் விசாரணை நடத்தினர். வன்கொடுமை சம்பவம் குறித்து, வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இளம்பெண் பலாத்கார வழக்கு ஆவணங்கள் நேற்று சிபிசிஐடி வசம் … Read more