அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் அமலாக்கத்துறை மனு!

SENTHIL BALAJI

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான பணமோசடி வழக்கில் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்துள்ளது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த ஜூன் மாதம் அமலாக்கத்துறையினர் கைது செய்த நிலையில், தற்போது புழல் சிறையில் இருந்து வருகிறார். செந்தில் பாலாஜியின் உடல்நிலை பாதிப்பு காரணமாக அவருக்கு ஜாமீன் வழங்கக்கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இரு மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து ஜாமீன் கோரி சென்னை … Read more

டிடிவி தினகரன் திவாலானவர்! அமலாக்கத்துறையின் நோட்டீஸ் ரத்து – சென்னை ஐகோர்ட் உத்தரவு!

TTV Dhinakaran

அம்மா மக்கள்  முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் திவாலானவர் என அறிவித்து அமலாக்கத்துறை பிறப்பித்த நோட்டீசை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை, திவாலானவர் என அறிவித்து அமலாக்கத்துறை பிறப்பித்த நோட்டீசை ரத்து செய்த தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து அமலாக்கத்துறை தரப்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம். அமமுக பொதுச்செயலாளரும், முன்னாள் எம்பியுமான டிடிவி தினகரன், கடந்த 1995-96 காலகட்டத்தில் வெளிநாட்டில் … Read more

ஜாமீன் மறுப்பு.. உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு! இன்றுடன் முடிகிறது செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல்!

Senthil balaji case hc

திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அவரது நீதிமன்ற காவலும் இன்றுடன் முடிவடைகிறது. எனவே, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த ஜூன் மாதம் அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். இதன்பின் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். நீதிமன்ற காவலை தொடர்ந்து, 5 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் எடுத்து செந்தில் … Read more

திமுக எம்பி ஆ.ராசாவின் இடத்திற்கு அமலாக்கத்துறை சீல்!

ARasa

திமுக எம்பியும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசாவின் 15 அசையா சொத்துக்களை முடக்குவதாக நேற்று அமலாக்கத்துறை தெரிவித்தது. கோவை ஷெல்டர்ஸ் புரமோட்டர்ஸ் நிறுவனம் ஆ.ராசாவின் பினாமி எனக்கூறி சொத்துக்களை முடக்கியுள்ளதாக X தளத்தில் அமலாக்கத்துறை தெரிவித்திருந்தது. மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராக ஆ.ராசா இருந்தபோது 15 அசையா சொத்துக்கள் பினாமி பெயரில் நடத்தி வந்ததாக குற்றச்சாட்டப்பட்டுள்ளது. அதன்படி, சட்டவிரோத பண பரிவர்த்தனை தடை சட்டப்படி,  திமுக எம்பி ஆ.ராசாவின் 15 அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை கையகப்படுத்தியுள்ளது. வருமானத்துக்கு … Read more

ஆதாரம் இருக்கு.. எங்களையும் இணைத்துக்கொள்ளுங்கள்! அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கில் அமலாக்கத்துறை மனு!

Anitha Radhakrishnan

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் முறைகேடாக ரூ.60 கோடி சொத்து சேர்த்ததற்கு ஆதாரம் இருக்கிறது என அமலாக்கத்துறை தூத்துக்குடி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. திமுக ஆட்சியின் போது வருமானத்துக்கு அதிகமாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை கடந்த 2006ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தது. இந்த வழக்கு தூத்துக்குடி முதன்மை குற்றவியல் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதையடுத்து, அனிதா ராதாகிருஷ்ணன் மீது மாநில லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த … Read more

செந்தில் பாலாஜி வழக்கில் அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு!

senthil balaji and ED

ஜாமீன் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கில் அமலாக்கத்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜி புழல் சிறையில் இருந்து வருகிறார். இவ்வழக்கில் இருந்து ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்திருந்த இரு மனுக்களை சமீபத்தில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த சமயத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீரென உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. சிறைத் துறை மருத்துவர்கள் பரிந்துரையின் பேரில், அவர் சென்னை … Read more

#BREAKING: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான வழக்கை விசாரிக்க தடை!

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக அமலாக்கத்துறை விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை. சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக அமலாக்கத்துறை விசாரணை நடத்த இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2001-06ல் அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்ட விரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை வழக்கு பதிவை எதிர்த்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மனு … Read more

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஜாபர் சேட் மனைவியின் சொத்துக்கள் முடக்கம்!

சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் ஜாபர் சேட் மனைவியின் சொத்துக்களை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை. முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஜாபர் சேட்டின் ரூ.14.23 கோடி சொத்துக்களை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதாவது, வீட்டு வசதி வாரியத்தில் முறைகேடாக நிலம் ஒதுக்கீடு செய்த விவகாரத்தில், ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி ஜாபர் சேட் மனைவி பர்வீன், துர்கா சங்கர் மற்றும் உதயகுமார் ஆகியோருக்கு சொந்தமான மொத்தம் ரூ.14.23 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. பண … Read more

அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் அமலாக்கத்துறை விசாரணை!

ஜாபர் சேட்டுக்கு வீடு ஒதுக்கீடு செய்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் அமலாக்கத்துறை விசாரணை. தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். முன்னாள் காவல்துறை அதிகாரி ஜாபர் சேட்டுக்கு வீடு ஒதுக்கீடு செய்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் 4 மணி நேரமாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கடந்த மாதம் ஜாபர் சேட்டிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்திய நிலையில், அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் விசாரணை நடத்தி உள்ளது. கடந்த 2006-ஆம் ஆண்டு தமிழக … Read more

#BREAKING: சட்டவிரோத பணப்பரிமாற்றம் தடை சட்டம் செல்லும் – உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

அமலாக்கத்துறையின் நடவடிக்கைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டம் (PMLA) செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்றம் தடுப்பு சட்டத்தின் முக்கியமான சட்டப்பிரிவுகளை உறுதிப்படுத்தியது உச்சநீதிமன்றம். அதன்படி, சட்டவிரோத பணபரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் யாரையும் அமலாக்கத்துறை கைது செய்யலாம் என்றும் சட்டவிரோத பணப்பரிமாற்றம் வழக்கில் உடனே கைது செய்ய அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளது எனவும் நீதிபதி தெரிவித்தார். அமலாக்கத்துறையின் நடவடிக்கைக்கு எதிராக மெகபூபா, கார்த்திக் சிதம்பரம் உள்ளிட்ட பலர் … Read more