தஞ்சை பெரிய கோயிலில் சித்திரை பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

thanjai periya koyil

Chithirai Festival: தஞ்சை பெரிய கோயிலில் சித்திரை பெருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. பிரசித்திபெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலில் சித்திரை பெருவிழா கோலாகலமாக இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. மாமன்னர் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரைப் பெருவிழா 18 நாட்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில் இந்தாண்டுக்கான சித்திரை பெருவிழா இன்று தஞ்சாவூர் பெரிய கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதன்படி, கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு மங்கள … Read more

சாமானியர்கள் முதல் தொழிலதிபர்கள் வரை.. தஞ்சை, நெய்வேலியில் இருந்து விமான சேவை!

air service

தஞ்சையில் விமானப்படை தளத்தில் இருந்து சென்னை, பெங்களூருவுக்கு பயணிகள் விமான சேவை அடுத்த மாதம் தொடங்கப்படும் என்று தனியார் விமான நிறுவனம் அறிவித்துள்ளது. சிறுநகரங்களை இணைக்கும் உதான் திட்டத்தின் கீழ் தஞ்சையில் இருந்து முதற்கட்டமாக  20 இருக்கைகளுடன் விமான சேவை தொடங்கப்படுகிறது. 1990-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட தஞ்சை – சென்னை விமான சேவை பயணிகள் வருகையின்றி நிறுத்தப்பட்டது. இந்த நிலையில், அடுத்த மாதம் தஞ்சையில் விமான சேவை தொடங்கப்படுகிறது. ஓடுபாதை உட்பட அனைத்து அம்சங்களும் தயார் நிலையில் … Read more

ராஜ ராஜ சோழனின் 1038வது சதய விழா.! தஞ்சை பெரிய கோவிலில் கோலாகல கொண்டாட்டம்.! 

1038 Sadhaya Vizha

இன்று தஞ்சை பெரிய கோவிலில் 1038வது சதய விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. தஞ்சை பெரிய கோவிலை கட்டிய ராஜ ராஜ சோழன், தான் சோழ தேசத்து மன்னனாக முடிசூட்டிக்கொண்ட ஐப்பசி மாதம் சதய நட்சத்திர தினத்தில் இந்த சதய விழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. இதே போல ஐப்பசி மாத சதய நட்சத்திரத்தில் தான் ராஜ ராஜ சோழன் பிறந்தார் என்றும் குறிப்புகள் தெரிவிக்கின்றன. கி.பி.985ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தில் முடிசூட்டிக்கொண்ட அருண்மொழி வர்மன் … Read more

தஞ்சை, திருவாரூரில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

புயல் எச்சரிக்கை காரணமாக தஞ்சை மற்றும் திருவாரூரில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு. புயல் எச்சரிக்கை காரணமாக தஞ்சை மாவட்டத்தில் தஞ்சாவூர் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவிட்டார். இதுபோன்று, மழை மற்றும் புயல் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

தஞ்சை பெரிய கோவிலின் பிரமாண்ட சதய விழா தொடக்கம்.! ராஜராஜ சோழனுக்கு மரியாதை.!

ராஜராஜ சோழன் முடிசூட்டி நாளை குறிப்பிடும் வகையில் தஞ்சை பெரிய கோவிலில் இன்றும் நாளையும் நடைபெறும் சதய விழா தொடங்கியுள்ளது.  தஞ்சாவூர் பெரிய கோவில் என அளிக்கப்படும் தஞ்சை பெருவுடையார் கோவிலை கட்டிய சோழ மன்னன் ராஜராஜ சோழன் முடிசூட்டி நாளை சதய விழாவாக ஆண்டுதோறும் பிரமாண்டமாக தஞ்சை பெரிய கோவிலில் கொண்டாடப்பட்டு வருகிறது. 1037வது சதய விழா இன்றும் நாளையும் கொண்டாடப்படுகிறது. இன்று ராஜராஜ சோழன் பற்றிய கருத்தரங்கு நடைபெற்று வருகிறது. அடுத்து நடன நிகழ்ச்சி, … Read more

தஞ்சை தேர் விபத்து – நேரில் சென்று நிவாரணம் வழங்கிய ஓபிஎஸ்!

தஞ்சை தேர் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் நேரில் ஆறுதல். தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் கடந்த 27-ஆம் தேதி அதிகாலை சித்திரை திருவிழாவையொட்டி நடைபெற்ற திருவிழாவின்போது,  சப்பரம் மீது மின்சாரம் பாய்ந்ததால் 11 பேர் பலியான நிலையில், 14 பேர் காயமடைந்தனர். இந்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு பிரதமர், முதல்வர் மற்றும் அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து, நிவாரண உதவிகளும் அறிவிக்கப்பட்டது. அந்தவகையில், தேர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு அதிமுக … Read more

தஞ்சை தேர் விபத்து – இன்று விசாரணையை தொடங்குகிறார் வருவாய்த்துறை முதன்மை செயலாளர்!

தஞ்சை தேர் விபத்து குறித்து இன்று விசாரணையை தொடங்குகிறார் வருவாய்த்துறை முதன்மை செயலாளர். தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் கடந்த 27-ஆம் தேதி அதிகாலை சித்திரை திருவிழாவையொட்டி நடைபெற்ற தேர்த் திருவிழாவின்போது மின்சாரம் பாய்ந்த ஏற்பட்டதால், 11 பேர் பலியான நிலையில், 14 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து, அவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் நிவாரண உதவிகளையும் அறிவித்தது. … Read more

#Shocking:22 வயது இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை – 4 பேர் கைது!

தமிழகத்தில் இளம்பெண்கள் மீது கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யும் சம்பவம் அவ்வப்போது அரங்கேறி வருகிறது.அந்த வகையில்,விருதுநகர்,வேலூர்,கடலூர் ஆகிய மாவட்டங்களில் அண்மையில் நடைபெற்ற கூட்டுப்பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்நிலையில்,தஞ்சை அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர் தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு வணிக நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.பொதுவாக, அவர் பணி முடித்து விட்டு புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்தில் தனது சொந்த ஊருக்கு செல்வது வழக்கம்.இந்த … Read more

#BREAKING: தேர் விபத்து; திமுக சார்பில் ரூ.2 லட்சம் நிவாரணம் – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

தஞ்சை தேர்பவனி விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு திமுக சார்பில் தலா ரூ.2 லட்சம் நிவாரணம். இதுதொடர்பாக திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் அதிகாலை நடைபெற்ற தேர்த் திருவிழாவில் மின் விபத்து ஏற்பட்டதால், 11 பேர் பலியான நிலையில், 14 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், இம்மின் விபத்தில் இறந்த 11 குடும்பங்களுக்கு தலா 2 லட்ச ரூபாய் … Read more

#BREAKING: சட்டப்பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் தஞ்சை தேர் விபத்து நிகழ்ந்துள்ளது என எடப்பாடி பழனிசாமி குற்றசாட்டு. தமிழக சட்டப்பேரவையில் தஞ்சை தேர் விபத்து குறித்து அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தது. அப்போது, திருவிழா காலங்களில் போதிய பாதுகாப்பு இல்லை என குற்றச்சாட்டி அதிமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தஞ்சாவூரில் நடைபெற்ற சம்பவம் மிகுந்த வேதனைக்குரியது. 11 … Read more