#BREAKING: 2வது நாள் விசாரணை – சசிகலாவிடம் கேட்கப்பட்ட கேள்விகள்!

சிறையில் இருந்த காலத்தில் கோடநாடு பங்களாவின் பொறுப்பு இருந்தது என சசிகலாவிடம் தனிப்படை போலீசார் கேள்வி.

கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக சென்னை தி.நகரில் உள்ள வீட்டில் வி.கே.சசிகலாவிடம் இரண்டாவது நாளாக இன்று மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அப்போது சசிகலாவிடம் தனிப்படை போலீசார் கேட்கப்பட்ட கேள்விகள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, சிறையில் இருந்த காலத்தில் கோடநாடு மங்களாவின் பொறுப்பு யாரிடம் இருந்தது என்றும் கோடநாடு பங்களா கண்காணிப்பை யாரிடம் கொடுத்தீர்கள் என சசிகலாவிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது. சிசிடிவி கண்காணிப்பு பணியை தற்கொலை செய்துகொண்ட தினேஷ்குமார் எத்தனை நாட்களாக பணியை மேற்கொண்டார் என்றும் கேட்கப்பட்டுள்ளது.

மேலும், ஜெயலலிதா மறைந்த பிறகுகோடநாடு பங்களாவில் சிசிடிவி கேமராக்கள் செயல்படாதது குறித்து முன்கூட்டியே தெரியுமா? என்றும் கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் நடந்த பிறகு மேலாளர் நடராஜன் முதலில் யாரிடம் தகவல் கூறினார் என தெரியுமா என்று சசிகலாவிடம் கேள்வி எழுப்பப்பட்டு, தனிப்படை தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்