#BREAKING: சுதந்திர தினத்தன்று விடுமுறை இல்லை – உபி அரசு அதிரடி அறிவிப்பு

உத்தரபிரதேச மாநிலத்தில் சுதந்திர தினத்தன்று விடுமுறை இல்லை என அம்மாநில அரசு அறிவிப்பு. இந்த முறை உத்தரபிரதேச மாநிலத்தில் நாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தன்று விடுமுறை இல்லை என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.  சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. அதாவது, ஆகஸ்ட் 15-ஆம் தேதியில் (75வது சுதந்திர தினம்) பள்ளிகள், … Read more

முதலமைச்சர் மாநில இளைஞர் விருது – இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டுகோள்.!

முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள். இதுதொடர்பாக விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவர் த.மோகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழகத்தில் சமுதாய வளர்ச்சிக்கு சிறப்பாக சேவையாற்றும் இளைஞர்களது பணியை அங்கீகரிக்கும் வகையில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று முதலமைச்சர் மாநில இளைஞர் விருது வழங்கப்பட்டு வருகிறது. 15 முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. … Read more

நெல்லை ஆட்சியரிடம் நற்சான்றிதழ் பெற்ற கடமை தவறாமல் பணியாற்றிய காவல்துறை ஆய்வாளர் மகேஸ்வரி!

நெல்லை ஆட்சியரிடம் நற்சான்றிதழ் பெற்ற கடமை தவறாமல் பணியாற்றிய காவல்துறை ஆய்வாளர் மகேஸ்வரி. நெல்லை மாவட்ட ஆயுதப்படையில் காவல் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் மகேஸ்வரி. இவர் இந்த ஆண்டு பாளையங்கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் நடைபெற்ற காவல்துறையினரின் அணிவகுப்பு இவருடைய தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில், இவரது தந்தை திண்டுக்கல் மாவட்டத்தில் முதல் நாள் இரவே உயிரிழந்தார். இது தெரிந்தும் அதிகாரிகள் யாரிடமும் இந்த தகவலை தெரிவிக்காமல், கடமை தவறாமல் சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் … Read more

நாம் இனி உச்சரிக்க வேண்டிய மந்திரம் vocal for local – பிரதமர் மோடி

நாம் இனி உச்சரிக்க வேண்டிய மந்திரம் vocal for local. நாடு முழுவதும் இன்று 74-வது சுதந்திர தினவிழா கொண்டாடப்படுகிறது. மோடி செங்கோட்டையில், 7-வது முறையாக தேசிய கொடியை ஏற்றி மக்களுக்கு உரையாற்றி வருகிறார். அவர் பேசுகையில், கொரோனா காலத்தில்  இந்தியாவில் அந்நிய முதலீடுகள் அதிகரித்துள்ளன என்றும், உலகின் மிகப்பெரிய நிறுவனங்கள் இந்தியா மீது நம்பிக்கை வைத்துள்ளன என்றும், நமது சீர்திருத்தங்களால் பல நாடுகள் நம் மீது நம்பிக்கையை அதிகரித்துள்ளன என்றும் தெரிவித்துள்ளார். உள்ளூர் தயாரிப்புகளுக்கு குரல் … Read more

1,000 நாட்களில் 6,00,000 கிராமங்களில் கண்ணாடி இழைகள் கேபிள்.. மோடி.!

74 ஆவது சுதந்திர தின விழாவையொட்டி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடியை ஏற்றி பின்னர், மோடி ஆற்றிய உரையாற்றி வருகிறார். அப்போது பேசிய அவர், 1.5 லட்சம் கிராமங்கள் கண்ணாடி இழைகள் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. அடுத்த 1,000 நாட்களில் ஆறு லட்சம் கிராமங்கள் கண்ணாடி இழைகள் கேபிள் மூலம் இணைக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.  

சற்று நேரத்தில் கொத்தளத்தில் கொடியேற்ற உள்ள தமிழக முதல்வர்..!

74-ஆவது சுதந்திர தினத்தையொட்டிமுதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமைச் செயலக கோட்டை கொத்தளத்தில் இன்று கொடியேற்றுகிறார். காலை 8.45 மணிக்கு தேசியக்கொடியை ஏற்றி வைத்து சுதந்திர தின விழாவில்  உரையாற்ற உள்ளார். அதன் பின்னர் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருதுகள் வழங்கப்படும்.  இந்த ஆண்டுக்கான டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் பெயரிலான விருது, துணிவு மற்றும் சாகசச் செயலுக்கான கல்பனா சாவ்லா விருது, மாற்றுத்திறனாளிகளின் நலனுக்கு சேவையாற்றியவர் விருது , பெண்கள் நலனுக்காக உழைத்தவர்களுக்கான விருது போன்ற விருதுகள் வழங்கப்படும். … Read more

இன்று தனது 74வது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது ‘சுதந்திர’ இந்தியா.!

1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தியா, ஆங்கிலேய அரசின் அதிகாரத்திடம் இருந்து சுதந்திரம் பெற்றது. உலகின் மிகப்பெரிய சுதந்திர ஜனநாயக நாடாக உருவெடுத்து இன்றுடன் 73ஆண்டுகள் நிறைவடைந்து 74வது சுதந்திர ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது சுதந்திர இந்தியா. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா தனது 74 ஆவது சுதந்திர தினத்தை இன்று கொண்டாடுகிறது. அடிமைப்பட்டு கிடந்த இந்திய மக்களுக்கு ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் கிடைத்த நாள் இன்று. இந்த சுதந்திரத்திற்காக பல லட்சக்கணக்கானோர் தங்கள் உயிரை … Read more

சுதந்திர தினவிழாவின் சிறப்பம்சங்கள்!

சுதந்திர தினவிழாவின் சிறப்பம்சங்கள். இந்தியாவில் சுதந்திர தினவிழாவானது ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 15- தேதி கொண்டாடப்படுகிறது. சுதந்திர தினவிழா என்பது, பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து, 1947-ம் ஆண்டு, ஆகஸ்ட்-15ம் நாள் விடுதலையானதை கொண்டாடும் வண்ணமாக ஒவ்வொரு வருடமும் இந்த விழா கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், இந்திய பிரதமர் அவர்கள், டெல்லியில் உள்ள செங்கோட்டையில், இந்திய தேசிய கோடியை ஏற்றி மக்களுக்கு உரையாற்றுவார். மேலும், இந்த நிகழ்வின் போது, சுதந்திர போராட்ட தியாகிகள் நினைவுகூரப்பட்டு அவர்களுக்கு மரியாதை செலுத்தப்படுவதோடு, பிரதமர் சென்ற … Read more

சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் இன்று ஒத்திகை!

நாளை மறுநாள் சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறுகிறது. நாடு முழுவதும் நாளை மறுநாள் சுதந்திர தின விழா கொண்டாடப்பட இருக்கின்ற சூழ்நிலையில், ஏற்கனவே கொரானா வைரஸ் காரணமாக உலகமே ஸ்தம்பித்த நிலையில் இருக்கிறது. இந்நிலையில் கொண்டாட்டங்கள், கலைநிகழ்ச்சிகள், சுற்றுலாக்கள் என அனைத்திற்குமே தடை விதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் சுதந்திர தின விழா அரசு உத்தரவிட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் டெல்லி செங்கோட்டையில் நடைபெற உள்ளது. வருகிற 15-ஆம் தேதி சனிக்கிழமை அன்று காலை டெல்லி … Read more

சுதந்திர தினத்தையொட்டி கூகுள் வெளியிட்டுள்ள சிறப்பு டூடுல்

சுதந்திர தினத்தையொட்டி கூகுள் நிறுவனம் டூடுல் வெளியிட்டு சிறப்பித்துள்ளது. இந்தியாவில் 73 -வது சுதந்திர தினம்  சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.இன்று காலை செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசிய கோடியை ஏற்றினார்.இதன் பின் அவர் உரையாற்றினார்.முப்படைகளின் அணிவகுப்பும் நடைபெற்றது. ஒவ்வொரு சிறப்பு நிகழ்வுகளுக்கும் கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுல் ஒன்றை வெளியிடும்.அந்த வகையில் இந்தியாவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு கூகுள் நிறுவனம் டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த டூடுளில் இந்தியாவின் பாரம்பரியங்களை உணர்த்தும் வகையில் டூடுல் வெளியிட்டு … Read more