இதுவே முதல்முறை.. 5 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக கோலிக்கு வந்த சோதனை!

5 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக ஒருநாள் தரவரிசை பட்டியலில் முதல் 2 இடங்களிலிருந்து விராட் கோலி வெளியேறினார். ஐசிசி இன்று சர்வதேச ஒருநாள் போட்டி பேட்டர்களுக்கான சமீபத்திய தரவரிசையை வெளியிட்டது. இதில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி 811 ரேட்டிங்-யுடன் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டார். 5 ஆண்டுகளில் முதல் முறையாக விராட் கோலி ஒருநாள் போட்டி பேட்டர்களுக்கான தரவரிசை பட்டியலில் முதல் 2 இடங்களை விட்டு வெளியேறுவது இதுவே முதல்முறை. சமீப காலமாக … Read more

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு – கைரன் பொல்லார்டு திடீர் அறிவிப்பு!

வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல்ரவுண்டரான பொல்லாடு தன்னுடைய ஓய்வு முடிவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக வெஸ்ட் இண்டீஸ் அணி வீரரான கைரன் பொல்லார்டு அறிவித்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல்ரவுண்டரான பொல்லாடு தன்னுடைய ஓய்வு முடிவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். இந்த நிலையில், 34 வயதாகும் பொல்லாடின் 15 ஆண்டுகால கிரிக்கெட் பயணம் தற்போது நிறைவு பெற்றுள்ளது. கடந்த 2007-ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் போட்டியில் முதன்முதலாக வெஸ்ட் … Read more

பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீரர்கள் பட்டியல் – ஐசிசி அறிவிப்பு..!

ஆண்கள் மற்றும் பெண்கள் கிரிக்கெட்டில் பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீரர்களை ஐசிசி  இன்று அறிவித்துள்ளனர். பிப்ரவரியில் ஆடவர் பிரிவில் பிப்ரவரி மாதத்தின் சிறந்த வீரர் பரிந்துரை பட்டியலில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வீரர் விருத்தியா அரவிந்த், இந்திய வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் நேபாளத்தின் திபேந்திர சிங் ஐரி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். பெண்கள் பிரிவில் நியூசிலாந்து ஆல்-ரவுண்டர் அமெலியா கெர், இந்தியாவின் மூத்த நட்சத்திரம் மிதாலி ராஜ் மற்றும் ஆல்-ரவுண்டர் தீப்தி ஷர்மா ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். விருத்தியா … Read more

#ICCTESTRANKING: ஆல்ரவுண்டர் தரவரிசையில் இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா முதலிடம்!

முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி – ஆட்டநாயகன் படத்தை வென்ற ஜடேஜா: இந்தியாவுக்கு வந்துள்ள இலங்கை அணி தற்போது இரண்டு போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்தியா – இலங்கை இடையேயான முதல் டெஸ்ட் போட்டி மெஹாலியில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு நிறைவுபெற்றது. மெஹாலியில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த டெஸ்ட் போட்டியில் … Read more

சர்வதேச தரவரிசைப் பட்டியலில் கோலி 2-வது , ரோஹித் 3-வது.!

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான பேட்ஸ்மேன் சர்வதேச தரவரிசைப் பட்டியலில்   விராட்கோலி 2-வது இடத்திலும், ரோஹித் சர்மா 3-வது இடத்திலும் தொடர்ந்து உள்ளனர். தென் ஆப்பிரிக்கா சுற்று பயணம் மேற்கொண்ட இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. அதில் தென் ஆப்பிரிக்கா அணி 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்நிலையில், சர்வதேச ஒருநாள் போட்டியின் வீரர்கள் தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம்  873 புள்ளிகளிடன் 1-வது … Read more

2021ம் ஆண்டுக்கான ஐசிசி ஆண்கள் டெஸ்ட் அணி அறிவிப்பு – 3 இந்திய வீரர்களுக்கு இடம்!

2021-ஆம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் அணியை (லெவன்ஸ்) தேர்வு செய்து சர்வதேச கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. நடப்பாண்டில் டெஸ்ட் உள்ளிட்ட அனைத்து சர்வதேச போட்டிகளில் சிறந்து விளங்கியவர்களை ஆண்டு தோறும் தேர்வு செய்து ஐ.சி.சி அறிவித்து வருவது வழக்கமான ஒன்று. அதன்படி, 2021-ஆம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் அணியை (லெவன்ஸ்) தேர்வு செய்து சர்வதேச கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. 2021 ஆம் ஆண்டிற்கான ஐ.சி.சி. தேர்வு செய்துள்ள 11 பேர் கொண்ட அணியில், ஒரு ஆஸ்திரேலிய வீரர், … Read more

T20 போட்டிக்கு புதிய ரூல்ஸ்- ஐசிசி அறிவிப்பு..!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) டி20 போட்டிகளுக்கான புதிய விதிகளை அறிவித்துள்ளது. பொதுவாக டி20 போட்டியில் 90 நிமிடங்கள் நிறைவடையும்போது பந்து வீசும் அணி 20-வது ஓவரைத் தொடங்கியிருக்க வேண்டும். அப்படி விதியை கடைபிடிக்காத அணிக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. இந்நிலையில், ஐசிசி புதிய விதியை அறிவித்துள்ளது. அதன்படி, ஒரு அணி நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கு பிறகு பந்து வீசினால் மீதமுள்ள ஓவர்களில் ஒரு பீல்டர் இன்னர் சர்க்கிளுக்கு வெளியே நிற்க முடியாது. அவர் இன்னர் சர்க்கிளுக்குள் நிற்க வேண்டும் … Read more

ICC U19 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு!

ஐசிசி U-19 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்களை அறிவித்த பிசிசிஐ. 19 வயதிற்குட்பட்டோருக்கான #WorldCup2022 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீஸில் ஜனவரி 14-ஆம் தேதி தொடங்குகிறது. இந்த நிலையில், ஐசிசி U-19 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்களை பிசிசிஐ அறிவித்துள்ளது. யாஷ் துல் தலைமையிலான இளம்படையில் தமிழக வீரர் மனோவ் பாரக் இடம்பிடித்துள்ளார் என்பது குறிப்பிடப்படுகிறது. இந்திய அணியின் முதல் போட்டி ஜன.15-ம் தேதி தென்னாப் பிரிக்கா … Read more

T20 World Cup 2021:பேட்டிங்கில் தடுமாறிய ஆப்கானிஸ்தான் – நியூசிலாந்து அணிக்கு 125 ரன்கள் இலக்கு!

ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. டி20 உலக கோப்பைக்கான போட்டிகள் கடந்த சிலநாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.அந்த வகையில்,குரூப் “பி”யை பொறுத்தவரை பாகிஸ்தான் அணி ஏற்கனவே அரையிறுதிக்கு முன்னேறிய நிலையில்,மீதமுள்ள ஒரு இடத்திற்கு இந்தியா, நியூசிலாந்து, ஆஃப்கானிஸ்தான் அணிகள் போட்டி போட்டு வருகின்றன. இந்த நிலையில்,இன்று அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் மைதானத்தில் நியூசிலாந்து, ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி மதியம் 3.30 க்கு தொடங்கி … Read more

#T20WorldCup2021:கப்டில் காட்டடி – ஸ்காட்லாந்து அணிக்கு 173 ரன்கள் இலக்கு!

நியூசிலாந்து அணி20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்துள்ளது.இதனால்,ஸ்காட்லாந்து அணிக்கு 173 ரன்கள் இலக்கு. டி20 உலகக் கோப்பை போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில்,குரூப் 2 இல் உள்ள நியூசிலாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியானது,துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று மதியம் 3.30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி,டாஸ் வென்ற ஸ்காட்லாந்து அணி பந்து வீச முடிவு செய்தது.இதனால்,நியூசிலாந்து அணி பேட்டிங் இறங்கியது.தொடக்க வீரர்களாக களமிறங்கிய … Read more