பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீரர்கள் பட்டியல் – ஐசிசி அறிவிப்பு..!

ஆண்கள் மற்றும் பெண்கள் கிரிக்கெட்டில் பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீரர்களை ஐசிசி  இன்று அறிவித்துள்ளனர். பிப்ரவரியில் ஆடவர் பிரிவில் பிப்ரவரி மாதத்தின் சிறந்த வீரர் பரிந்துரை பட்டியலில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வீரர் விருத்தியா அரவிந்த், இந்திய வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் நேபாளத்தின் திபேந்திர சிங் ஐரி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

பெண்கள் பிரிவில் நியூசிலாந்து ஆல்-ரவுண்டர் அமெலியா கெர், இந்தியாவின் மூத்த நட்சத்திரம் மிதாலி ராஜ் மற்றும் ஆல்-ரவுண்டர் தீப்தி ஷர்மா ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

விருத்தியா அரவிந்த்:

கடந்த மாதம் ஓமானில் நடைபெற்ற ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை தகுதிச் சுற்று ஏ போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் இளம் நட்சத்திரமாக விருத்யா அரவிந்த் இருந்தார். பத்தொன்பது வயதான அரவிந்த், இந்த ஆண்டு நடைபெறும் ICC ஆடவர் T20 உலகக் கோப்பை 2022 க்கு UAE தகுதி பெறுவதில் முக்கியப் பங்கு வகித்தார்.

அவர் விளையாடிய ஐந்து போட்டிகளில் 267 ரன்கள் எடுத்தார். ஓமனுக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் அவர் 67 பந்துகளில் 97* ரன்கள் எடுத்தார். அடுத்த மூன்று ஆட்டங்களில் 40, 84*, 46 ரன்கள் எடுத்தார்.  இவர் சென்னையில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஷ்ரேயாஸ் ஐயர்:

பிப்ரவரி மாதத்தில் ஷ்ரேயாஸ் ஐயர்  இலங்கைக்கு எதிரான டி20தொடரில் சூர்யகுமார் யாதவுக்கு காயம் ஏற்பட்டதால் இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் ஷ்ரேயாஸ் ஐயர்  3-வது இடத்தில் களமிறங்கினார். அவர் மூன்று டி20 போட்டிகளில் ஆட்டமிழக்காமல் மூன்று அரைசதங்களை அடித்து 204 ரன்கள் எடுத்தார். இதனால், தொடரின் நாயகன் விருது பெற்றார்.

தீபேந்திர சிங் ஐரி: 

ஓமானில் நடந்த ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை தகுதிச் சுற்று ஏ போட்டியில் நேபாளத்தின் மூன்றாவது இடத்தைப் பிடித்ததில் திபேந்திர சிங் ஐரி முக்கியமானவர். ஓமன், யுஏஇ மற்றும் அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடினார். அவர் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டார். இந்த போட்டியின் போது 159 ரன்கள் மற்றும் 6 விக்கெட்டுகளை எடுத்தார்.

அமெலியா கெர்: 

ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கு முன்னதாக இந்தியாவுக்கு எதிரான ஒருநாள்  தொடரில் நியூஸிலாந்து அணிக்காக அதிக ரன்கள் எடுத்தவர் மற்றும் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர் ஆவார். ஐந்து ஒருநாள் போட்டிகளில் 353 ரன்கள் எடுத்தார். இதில் மூன்று அரைசதங்கள் மற்றும் சதம் அடங்கும். பந்து வீச்சில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஐந்து போட்டிகளில் இரண்டில் ஆட்டநாயகனாகவும் , தொடர் நாயகன் விருதையும் பெற்றார்.

Amelia Kerr

மிதாலி ராஜ்: 

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்தியாவுக்காக சிறப்பாக விளையாடிய  சிலரில் மிதாலி ராஜும் ஒருவர். அவர் இந்தியாவுக்காக 232 ரன்கள் எடுத்தார். அதில் மூன்று அரைசதங்கள் விளாசினார்.

தீப்தி சர்மா:

நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் தீப்தி சர்மா பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டார். அவர் இந்த ஒருநாள் தொடரில் 10 விக்கெட்டுகளை எடுத்தார்.  மேலும்,  ஐந்து போட்டிகளில் 116 ரன்களை குவித்தார்.

author avatar
murugan