நாளை “நாங்க வேற மாறி” வீடியோ பாடல் வெளியீடு.!

இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியான திரைப்படம் வலிமை. இந்த திரைப்படத்தில் ஹீமாகுரேஷி, கார்த்திகேயா, விஜே பானி, சுமித்ரா ஆகிய பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை தயாரிப்பாளர் போனிகபூர் தயாரித்திருந்தார்.

படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் இசையமைத்திருந்தார். பின்னணி இசை ஜிப்ரான் அமைத்திருந்தார். இந்த திரைப்படம் கடந்த மாதம் 24-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம், ஆகிய மொழிகளில் வெளியானது.

ValimaiPongal

வெளியான நாளில் இருந்து தற்போது வரை ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று மிகப்பெரிய வசூல் சாதனை செய்து வருகிறது. இந்த நிலையில், தற்போது ரசிகர்களுக்கு உற்சாகம் தரும் வகையில், வலிமை படத்தில் இடம்பெறுள்ள நாங்க வேற மாறி வீடியோ பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் உற்சாகத்துடன் பாடலை பார்க்க காத்துள்ளனர்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.