ஆப்கானிஸ்தான் அணி கேப்டன் பதவியில் இருந்து விலகிய ரஷீத் கான்!

டி20 உலகக் கோப்பைக்கு தங்கள் அணியை அறிவித்த சிறிது நேரத்திலேயே ரஷித் கான் ஆப்கானிஸ்தான் அணி கேப்டன் பதவியில் இருந்து விலகினார். டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் மாதம் 17-ம் தேதி தொடங்கி நவம்பர் 14-ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. இந்த டி20 உலக்கோப்பை தொடரில் பங்கேற்கும் அணி வீரர்களின் பட்டியலை ஒவ்வொரு நாடும் வெளியிட்டு வருகிறது. அந்தவகையில் உலகக் கோப்பை தொடருக்கான ஆப்கான் அணி வீரர்களை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் … Read more

#T20 World Cup 2021: டி20 உலகக் கோப்பைக்கான இங்கிலாந்து அணி வீரர்கள் அறிவிப்பு!

ஐசிசி டி20 உலகக்கோப்பை 2021 தொடருக்கான 15 பேர் கொண்ட இங்கிலாந்து அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஐசிசி ஆண்களுக்கான டி-20 உலகக்கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் 17-ம் தேதி தொடங்கவுள்ளது. இத்தொடர் நவம்பர் 14-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதனால் உலகக்கோப்பையில் பங்கேற்கும் அணிகள் தங்களது வீரர்களை அறிவித்து வருகிறது. நேற்று இந்திய அணியின் வீரர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இங்கிலாந்து அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 23ம் தேதி நடப்பு சாம்பியனான மேற்கிந்திய … Read more

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு அபராதம் – ஐசிசி நடவடிக்கை..!

முதல் டெஸ்டில் ஓவர் வீச அதிக நேரம் எடுத்துக் கொண்டதற்காக இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு அபராதம் விதித்து ஐசிசி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி கடந்த 4-ம் தேதி தொடங்கியது. போட்டி தொடங்கியதிலிருந்து மழையால் போட்டிகள் நடத்தப்பட்டு வந்தன. இந்திய அணி முன்னிலை: முதலில் களமிறங்கிய இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 65.4 ஓவரில் … Read more

2028 ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட்..? ஐசிசி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!

ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் விளையாட்டைச் சேர்ப்பதற்கான முயற்சிகளை செய்து வருவதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அறிவித்துள்ளது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் ஆகஸ்ட் 8 ம் தேதி முடிவடைந்தது. இந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில், இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு மொத்தம் 7 பதக்கங்களை வென்றனர். இதில் சோப்ரா தங்கம் வென்றார், மீராபாய் சானு மற்றும் ரவி தஹியா வெள்ளி, பிவி சிந்து, பஜ்ரங் புனியா, லவ்லினா மற்றும் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி வெண்கலப் பதக்கங்களை … Read more

15 டிகிரி எல்போ விதி; ஐ.சி.சி நிபுணர்கள் இந்த முடிவுக்கு எவ்வாறு வந்தார்கள்? – சக்லைன் முஷ்டாக் கேள்வி..!

15 டிகிரி  எல்போ (முழங்கை) விதி மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும்,ஐ.சி.சி நிபுணர்கள் இந்த முடிவுக்கு எவ்வாறு வந்தார்கள்?  என்று சக்லைன் கேள்வி எழுப்பியுள்ளார். லாகூரில் உள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைமை பயிற்சியாளராகவும்,பாகிஸ்தான் முன்னாள் சுழற்பந்து வீச்சாளருமான சக்லைன் முஷ்டாக்,சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) பந்து வீச்சாளர்களுக்கான, தற்போதுள்ள 15 டிகிரி கை / முழங்கை நீட்டிப்பு விதியை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளார். மேலும்,இது தொடர்பாக அவர் கூறுகையில்: “இந்த விதியானது பவுலர்கள் … Read more

டி20 உலகக்கோப்பை.., ஒரே குரூப்பில் இடம்பெற்ற இந்தியா – பாகிஸ்தான் ..!

டி20 உலகக்கோப்பை போட்டியில் விளையாடும் 12 அணிகள் இரு பிரிவுகளாக பிரித்து ஐசிசி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் நடைபெறவிருந்த டி20 உலகக் கோப்பை கொரோனா காரணமாக  ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஓமான் ஆகிய இடங்களில் நடைபெறுகிறது. அக்டோபர் 17 ஆம் தேதி டி20 உலகக் கோப்பை போட்டி நடைபெறுகிறது. நவம்பர் 14 ஆம் தேதி போட்டி நிறைவடைகிறது. இந்நிலையில், டி20 உலகக்கோப்பை போட்டியில் விளையாடும் 12 அணிகள் இரு பிரிவுகளாக பிரித்து ஐசிசி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. … Read more

அக்.17 முதல் டி20 உலகக்கோப்பை போட்டி- ஐசிசி அறிவிப்பு..!

டி 20 உலகக் கோப்பை போட்டி அக்டோபர் 17-ஆம் தேதி முதல் நவம்பர் 14-ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்தியாவில் நடைபெற இருந்த டி20 உலகக் கோப்பை போட்டியானது ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு மாற்றப்படுவதாக நேற்று  பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி அறிவித்தார். இந்நிலையில், ஐசிசி  டி20 உலகக் கோப்பை போட்டி முதலில் இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், கொரோனா இரண்டாவது அலையால் ஏற்பட்டபாதிப்பை கருத்தில் கொண்டு போட்டி … Read more

இந்த ஆண்டு T20 உலக கோப்பை தொடர் எங்கு நடைபெறுகிறது தெரியுமா..?

T20 உலக கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெறும் என பி.சி.சி.ஐ தெரிவித்துள்ளது.  இந்தியாவில் கொரோனா தொற்று காரணமாக, இந்த ஆண்டு, T20 போட்டியானது ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெறும் என பி.சி.சி.ஐ தெரிவித்துள்ளது. டி20 உலக கோப்பை தொடரானது வருகிற அக்டோபர் 17-ஆம் தேதி துவங்கி, நவம்பர் 14ஆம் தேதி நிறைவடையும். இதுதொடர்பாக,இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) இன்னும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ஐ.சி.சி) அதிகாரப்பூர்வமாக கடிதம் … Read more

இன்றைய ஆட்டமும் ரத்தாகுமா.? மழை காரணமாக போட்டி தாமதம் -ஐசிசி அறிவிப்பு..!

மழை காரணமாக போட்டி தாமதமாகும் என ஐசிசி தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. சவுத்தாம்ப்டனில் இந்தியாவிற்கும் நியூசிலாந்திற்கும் இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடைபெற்று வருகிறது. முதல் நாள் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. பின்னர், 2-ஆம் நாள் தனது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 2-ஆம் நாள் ஆட்ட முடிவில் 64.4 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 146 ரன்கள் எடுத்தனர். இதைத்தொடர்ந்து, 3-ஆம் நாள் விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் … Read more

ஐ.சி.சி 50 ஓவர் மற்றும் டி-20 உலகக் கோப்பை போட்டிகளில் மாற்றம் – ஐ.சி.சி அறிவிப்பு..!

ஐ.சி.சி 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியை 14 அணிகளுக்கு விரிவுபடுத்துவதாகவும் ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை  டி-20 உலக கோப்பை போட்டிகள் நடத்தப்படும் என்றும் இன்டர்நேஷனல் கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) வாரியம் அறிவித்துள்ளது. பொதுவாக ஐ.சி.சி 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியானது 10 அணிகளுக்கிடையே நடைபெறும்.அதைப்போன்று,டி 20 உலகக் கோப்பை போட்டியானது 16 அணிகளுக்கிடையே நடைபெறும். இந்நிலையில்,ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை மற்றும் ஆண்கள் டி 20 உலகக் கோப்பை விரிவாக்கப்பட வேண்டும் மற்றும் … Read more