இன்றைய ஆட்டமும் ரத்தாகுமா.? மழை காரணமாக போட்டி தாமதம் -ஐசிசி அறிவிப்பு..!

மழை காரணமாக போட்டி தாமதமாகும் என ஐசிசி தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

சவுத்தாம்ப்டனில் இந்தியாவிற்கும் நியூசிலாந்திற்கும் இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடைபெற்று வருகிறது. முதல் நாள் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. பின்னர், 2-ஆம் நாள் தனது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 2-ஆம் நாள் ஆட்ட முடிவில் 64.4 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 146 ரன்கள் எடுத்தனர்.

இதைத்தொடர்ந்து, 3-ஆம் நாள் விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 92.1 ஓவரில் 217 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தனர். நியூஸிலாந்து அணியில் கைல் ஜேமீசன் 5 விக்கெட்டை பறித்தார். அதன்பின்னர், களமிறங்கிய நியூசிலாந்து அணி 3-ஆம்நாள் ஆட்ட முடிவில் 101/2 எடுத்து இருந்தனர்.

நேற்று 4 வது நாள் ஆட்டம் மோசமான வானிலை காரணமாக முதல் அமர்வு தாமதமானது. பின்னர் முழு ஆட்டமும் நிறுத்தப்பட்டது. இன்றைய 5-வது நாள் ஆட்டம் குறித்த நேரத்தில் நடைபெறுமா..? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. இந்நிலையில், மழை காரணமாக போட்டி தாமதமாகும் என ஐசிசி தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

இன்று உள்ளூர் நேரப்படி காலை 9 மணி முதல் இரவு 12 மணி வரை அதாவது இந்திய நேரப்படி 1 மணி முதல் மாலை 4 மணி வரை மழை காரணமாக 5 ஆம் நாள் போட்டி பாதிக்கப்படக்கூடும் என உள்ளூர் வானிலை மையம் தகவல் தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan