#Breaking:ஜிப்மரில் இந்தி திணிப்பா?- துணை ஆளுநர் தமிழிசை சொன்ன முக்கிய தகவல்!

புதுச்சேரி கோரிமேடு பகுதியில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஜிப்மர் மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு அலுவல் மொழியாக இந்தி மற்றும் ஆங்கிலம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜிப்மர் மருத்துவமனை இயக்குநர் ராகேஷ் அகர்வால் அலுவல் மொழியாக இந்தியை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற சுற்றறிக்கையை வெளியிட்டிருந்தார். இந்த அறிக்கைக்கு புதுச்சேரியில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் தமிழக அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து,புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் இந்தி … Read more

இந்தி மொழி நல்ல மொழி…! இந்தி பேசுபவர்கள் நல்லவர்கள்..! – சுஹாசினி

இந்தி ஒரு நல்ல மொழி. இந்தி பேசுபவர்கள் நல்லவர்கள். அவர்களிடம் பேச இந்தியை கற்றுக் கொள்ள வேண்டும் என நடிகை சுஹாசினி பேட்டி.  மத்திய அமைச்சர் அமித்ஷா இந்தியாவின் இணைப்பு மொழியாக இந்தியை கொண்டு வர வேண்டிய தருணம் இது என பேசி இருந்தது கடும் சர்ச்சையை எழுப்பியது. இந்த நிலையில் இது தொடர்பாக தொடர்ந்து இந்தி மொழி தொடர்பான சர்ச்சை தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் திரைப்பட நடிகையும், இயக்குனர் மணிரத்தினம் அவர்களின் மனைவியுமான சுகாசினி  … Read more

இந்தி பேசாதவர்கள் நாட்டை விட்டு வெளியேறுங்கள் – உபி அமைச்சர் சஞ்சய் சர்ச்சை கருத்து!

அண்மையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா,ஆங்கிலத்திற்கு மாற்றாக நாட்டு மக்கள் அனைவரும் இந்தியை ஏற்க வேண்டும் என்று கூறியிருந்தார்.இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில்,இந்தி மொழி விவாதத்திற்கு மத்தியில்,உத்தரபிரதேச அமைச்சர் சஞ்சய் நிஷாத்,இந்தியை விரும்பாதவர்கள் வெளிநாட்டினர் என்றும், இந்தி பேசாதவர்கள் இந்தியாவை விட்டு வெளியேறி வேறு இடத்தில் குடியேற வேண்டும் என்றும் கூறி புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சஞ்சய் நிஷாத், “இந்தியாவில் வாழ விரும்புபவர்கள் இந்தியை நேசிக்க … Read more

ஹிந்தி தான் தேசிய மொழி.! பாலிவுட் ஹீரோவை அலறவிட்ட தென்னிந்திய கதாநாயகன்.!

கேஜிஎப் திரைப்படத்தின் வெற்றி குறித்து சமீபத்தில் பேசிய சுதீப் ” பான் இந்தியா படம் கன்னடத்தில் எடுக்கப்பட்டதாக கூறினார்கள் அதில் ஒரு சிறிய திருத்தம் செய்ய நான் விரும்புகிறேன். இந்தி இனி தேசிய மொழி அல்ல” என தெரிவித்திருந்தார். .@KicchaSudeep मेरे भाई, आपके अनुसार अगर हिंदी हमारी राष्ट्रीय भाषा नहीं है तो आप अपनी मातृभाषा की फ़िल्मों को हिंदी में डब करके क्यूँ रिलीज़ करते हैं? … Read more

இஸ்ரோவுக்கு இந்தி இனிக்கும், தமிழ் கசக்குமா? – சு.வெங்கடேசன் எம்.பி

இஸ்ரோவுக்கு இந்தி இனிக்கும், தமிழ் கசக்குமா? மகேந்திரகிரி வளாகத்தில் நடந்த எழுத்துத்தேர்வில் தமிழ் புறக்கணிப்பு என சு.வெங்கடேசன் எம்.பி ட்வீட். மகேந்திரகிரி இஸ்ரோ வளாகத்தில் நடந்த எழுத்துத்தேர்வில் தமிழ் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இந்த பாரபட்சத்தை கைவிட வேண்டும் என்றும், தமிழ்வடிவ கேள்வித்தாளுடன் மறுதேர்வு நடத்த வேண்டும் என்றும் சு. வெங்கடேசன் எம்.பி இஸ்ரோ இயக்குனருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், ‘தமிழகத்தில் மகேந்திரகிரியில் இயங்கி வரும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி உந்தும வளாகம், இரண்டு பணி நியமன அறிவிக்கைகளை … Read more

#JustNow: இந்தி திணிப்பை தமிழக பாஜக அனுமதிக்காது – மாநில தலைவர் அண்ணாமலை

இணைப்பு மொழியாக தமிழ் இருக்க வேண்டும் என்ற ஏ.ஆர் ரகுமான் கருத்தை பாஜக வரவேற்கிறது என அண்ணாமலை பேட்டி. சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய பல்கலைகலைக்கழகங்களுக்கான நுழைவுத்தேர்வு 2010-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. திமுக, காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில்தான் நுழைவுத் தேர்வு கொண்டுவரப்பட்டது. பிற மாநிலங்களைவிட தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை அதிகமாக உள்ளது. பெட்ரோல், டீசல் விலைக்கான வாட் வரியை தமிழக அரசு குறைக்காதது ஏன் என கேள்வி எழுப்பினார். இதனைத்தொடர்ந்து … Read more

அமித்ஷாவின் திட்டம் இது தான் – நடிகர் பிரகாஷ் ராஜ் காட்டம்!

ஒரே நாடு ஒரே மொழி எனும் திட்டத்தை செயல்படுத்துவது தான் அமித்ஷாவின் நோக்கம் என நடிகர் பிரகாஷ் ராஜ் கூறியுள்ளார். ஆங்கிலத்திற்கு மாற்று மொழியாக ஹிந்தியை பேச வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருப்பதற்கு தொடர்ந்து பல அரசியல்வாதிகள் தமது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர்கர் பிரகாஷ் ராஜும் தற்போது தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். அதன்படி இந்தியை எங்கே பேச வேண்டும்? எங்கு கற்க வேண்டும்? என்று நினைக்கிறீர்கள். ஒரே … Read more

அமித்ஷா கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது – பாமக நிறுவனர் ராமதாஸ்

அனைத்து மாநில மக்களின் விருப்பங்களும், உணர்வுகளும் மதிக்கப்பட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் பதிவு. ஆங்கிலத்திற்கு பதிலாக ஹிந்தி மொழியை பேச வேண்டுமென மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியது குறித்து, பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், மாநிலங்களுக்கு இடையிலான தொடர்பு மொழியாக இந்திய மொழியான இந்தி தான் இருக்க வேண்டும். ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்தி வர வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இதன் … Read more

அரியணையில் யார் உட்காருவது ஆங்கிலமா? இந்தியா? – சு..வெங்கடேசன் எம்.பி

தந்திரங்களை தாய்மொழி கொண்டு மக்கள் வெல்வார்கள் என சு..வெங்கடேசன் எம்.பி ட்வீட். டெல்லியில் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37-வது கூட்டத்தில் அமித் ஷா உரையாற்றினார். அப்போது பேசிய அவர், இந்தியைத்தான் ஆங்கிலத்துக்கு மாற்றாக கருத வேண்டும். உள்ளூர் மொழிகளை அல்ல. இந்தியாவில் தேசிய மொழி இல்லை என்றாலும், ஹிந்திதான் நாட்டின் அதிகாரபபூர்வ மொழியாகும் என தெரிவித்துள்ளார். இவரது பேச்சு சர்ச்சையை எழுப்பியுள்ள நிலையில், இதுகுறித்து அரசியல் தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த … Read more

அமித்ஷாவின் பேச்சை வன்மையாக கண்டிக்கிறோம் – விசிக தலைவர் திருமாவளவன் ட்வீட்

ஒரேநாடு- ஒரேமொழி எனும் ஃபாசிசப் போக்கை வலுவாக திணிப்பதற்குரிய ஆபத்தான முயற்சி என திருமாவளவன் ட்வீட். ஆங்கிலத்திற்கு மாற்றாக நாட்டின் ஒருமைப்பாட்டிற்கான மொழியாக ஹிந்தியை மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும் வெவ்வேறு மாநிலங்களில் உள்ள மக்கள் ஆங்கிலத்திற்கு பதிலாக ஹிந்தி மொழியை பேச வேண்டுமெனவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியது குறித்து அரசியல் தலைவர்கள் பலர் தங்களது கண்டங்களை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் தனது … Read more