வராக்கடனா ? வஜாக்கடனா? பதில் சொல்லுங்கள் நிர்மலா சீதாராமன் அவர்களே..! – சு.வெங்கடேசன் எம்.பி

su venkatesan MP

கடந்த 9 ஆண்டுகளில் வராக் கடன் ரூ 10.42 லட்சம் கோடி. இதே காலத்தில் வசூலிக்கப்பட்ட வராக்கடன் ரூ 1.61 லட்சம் கோடி மட்டுமே. மீதம் 8.79 லட்சம் கோடி என்ன ஆனது? என மத்திய நிதியமைச்சருக்கு சு.வெங்கடேசன் எம்.பி கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்.பி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நாடாளுமன்றத்தில் வங்கிக் கடன்கள் பற்றி நான் எழுப்பி இருந்த கேள்விக்கு ஒன்றிய நிதி இணையமைச்சர் பகவத் காரத் பதில் அளித்துள்ளார். 2014-15 இல் இருந்து … Read more

தேர்வுத் தேதியை மாற்றி சென்னை மாணவர்களுக்கு நியாயம் வழங்குங்கள் – சு.வெங்கடேசன் எம்.பி

M.Pvenkatesan

தமிழ்நாட்டில் கடந்த 2, 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் தாக்கிய ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக 48  ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெருமழை  பெய்துள்ளது. இதனால் சென்னை மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ள நிலையில், அவர்களது இயல்பு வாழ்க்கை கேள்விக்குறியாகியாகியுள்ளது. இந்த நிலையில், மழை பாதிப்பு காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், மாணவர்களின் நலன் கருதி, அண்ணா, திருவள்ளூர், சென்னை உள்ளிட்ட பல்கலைக்கழக தேர்வுகளும் … Read more

காலக்கெடு என்பது கண்துடைப்பு தானா? – சு.வெங்கடேசன் எம்.பி

கல்வி அமைச்சக வழிகாட்டல்கள் பின்பற்றப்படுகிறதா என்பதை சமூக நீதி அமைச்சகம் கண்காணிக்க வேண்டும் என்று சு.வெங்கடேசன் எம்.பி ட்வீட்.  இடஒதுக்கீட்டு காலி இடங்களை நிரப்ப அரசு சொன்ன ஓராண்டு கெடு முடிந்தது. ஆனால் ஐ.ஐ.டி / மத்திய பல்கலைக் கழக பேராசிரியர் பணி நியமனத்தில் 1400 க்கும் மேற்பட்ட இடங்கள் நிரப்பப்படவில்லை என சு.வெங்கடேசன் எம்.பி ட்வீட் செய்துள்ளார். மேலும், மத்திய பல்கலைக்கழகங்கள் 20 % இடங்களை கூட நிரப்பவில்லை. காலக்கெடு என்பது கண்துடைப்பு தானா? உயர்கல்வி … Read more

உங்கள் கூற்று சாப்பாடு பற்றியதல்ல…! சனாதனம் பற்றியது அமைச்சரே..! – சு.வெங்கடேசன் எம்.பி

இது ஆச்சாரத்தின் பால்நின்று வெளிப்படுத்தும் அடையாளம் என நிர்மலா சீதாராமன் பேச்சு குறித்து சு.வெங்கடேசன் எம்.பி ட்வீட்.  மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள், நாடாளுமன்றத்தில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி கண்டு நாடாளுமன்றத்தில் உள்ள சிலர் பொறாமைபடுகின்றனர். பொருளாதாரம் வளர்ந்து வருவது எதிர்க்கட்சியினருக்கு பிரச்சினை ஏற்படுகிறது. பொருளாதார வளர்ச்சியை கண்டு பெருமைப்படாமல் நகைச்சுவையாக எடுத்துக் கொள்கின்றனர் என்றும், நான் ‘வெங்காயம்’ சாப்பிட மாட்டேன். ஆனால் வெங்காயம் சாப்பிடுபவர்களின் பிரச்சனைகளுக்காகவும் பேசுகிறேன் என்றும் தெரிவித்திருந்தார். இதுகுறித்து சு.வெங்கடேசன் அவர்கள் … Read more

இந்த அறிவிப்பு தகவல்தொழில் நுட்ப வளர்ச்சியின் அடுத்த கட்ட பாய்ச்சலுக்கான வித்து – சு.வெங்கடேசன் எம்.பி

மதுரையில் இரண்டாவது தகவல் தொழில்நுட்ப பூங்கா” அமைக்கப்படும் என்கிற முதல்வரின் அறிவிப்புக்கு நன்றி தெரிவித்து சு.வெங்கடேசன் எம்.பி ட்வீட்.  மதுரை தனியார் விடுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ‘தோள் கொடுப்போம் தொழில்களுக்கு’ தெற்கு மண்டல மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில், மதுரையில் டைடல் நிறுவனம் மற்றும் மாநகராட்சி இணைந்து ‘டைடல் பார்க்’ அமைக்கிறது. மாட்டுத்தாவணி பகுதியில் 2 கட்டமாக தொடங்கப்படும் திட்டத்திற்கு, முதல் கட்டமாக ₹600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்.பி … Read more

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் தமிழக ராணுவ வீரர் மரணம் – சு.வெங்கடேசன் எம்.பி ட்வீட்

ஜம்மு காஷ்மீரில் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், தமிழக வீரர் லட்சுமணன் உயிரிழந்த நிலையில், சு.வெங்கடேசன் எம்.பி இரங்கல்.  ஜம்மு காஷ்மீர், ரஜோரி அருகே 25 கி.மீ தொலைவில் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்ட நிலையில், 3 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த தாக்குதலில் ஏராளமான ராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் ராணுவ முகாம் மீது … Read more

ஒன்றிய அரசுக்கு குஜராத்தான் கண்ணு – சு.வெங்கடேசன் எம்.பி

ஒன்றிய அரசுக்கு குஜராத்தான் கண்ணு. அந்த கண்ணுக்கு வெண்ணெய். தமிழ்நாட்டிற்கு சுண்ணாம்பு என சு.வெங்கடேசன் எம்.பி ட்வீட்.  கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவில் உள்ள மாநிலங்களின் விளையாட்டு உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக மத்திய விளையாட்டு துறை நிதி ஒதுக்கியுள்ளது.  இத்திட்டத்தின் கீழ் 33 மாநிலங்களுக்கு 2754.28 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் விளையாட்டு உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக மத்திய விளையாட்டு துறை தமிழகத்திற்கு குறைவான நிதி ஒதுக்கியுள்ளதாக குற்றசாட்டுகள் எழுந்துள்ளது. அதன்படி, தமிழகத்திற்கு ரூ.33 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.  … Read more

நல்லகண்ணுக்கு தகைசால் தமிழர் விருது – சு.வெங்கடேசன் எம்.பி ட்வீட்

தகைசால் தமிழர் விருது பெறவுள்ள நல்லகண்ணுவுக்கு வாழ்த்து தெரிவித்து சு.வெங்கடேசன் எம்.பி ட்வீட்.  தமிழக அரசின் தகைசால் தமிழர் விருதுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு தேர்வு செய்யப்பட்டுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. தகைசால் தமிழர் விருது சுதந்திர தின விழாவில் வழங்கப்பட உள்ளது. அதன்படி, சுதந்திர தின விழாவில் ஆர்.நல்லக்கண்ணுக்கு விருது வழங்கி முதலமைச்சர் முக ஸ்டாலின் கவுரவிக்க உள்ளார். இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்.பி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘சுதந்திர போராட்ட வீரரும் … Read more

இடதுசாரிகள் ஜனநாயகத்தின் காவலர்கள்! இதிலும் கடைசி குஜராத்தான்..! – சு.வெங்கடேசன் எம்.பி

இடதுசாரிகள் ஜனநாயகத்தின் காவலர்கள்! இந்தியாவிலேயே அதிக நாட்கள் சட்டமன்றம் கூடிய மாநிலம் கேரளம் என சு.வெங்கடேசன் எம்.பி ட்வீட்.  2021-ஆம் ஆண்டில் இந்தியாவிலேயே அதிக நாட்கள் சட்டமன்றம் கூடிய மாநிலம் கேரளா என ஒரு நாளிதழில் இடம் பெற்றுள்ளது. இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்.பி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இடதுசாரிகள் ஜனநாயகத்தின் காவலர்கள்! இந்தியாவிலேயே அதிக நாட்கள் சட்டமன்றம் கூடிய மாநிலம் கேரளம் (61), இதிலும் கடைசி குஜராத்தான் (24). ஒரு மசோதா நிறைவேற குஜராத் எடுத்துக் கொள்ளும் … Read more

இந்தி வெறியர்களால் பிற்பிக்கப்பட்டுள்ள உத்தரவு – சு.வெங்கடேசன் எம்.பி

ரயில் நிலையங்களில் உள்ள விசாரணை மற்றும் உதவி மையங்களின் பெயர்களை “சஹ்யோக்” என்று மாற்ற ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளதற்கு, சு.வெங்கடேசன் எம்.பி கண்டனம்.  இந்தியா முழுவதும் ரயில் நிலையங்களில் உள்ள விசாரணை மற்றும் உதவி மையங்களின் பெயர்களை “சஹ்யோக்” என்று மாற்ற ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளதற்கு கண்டனம் தெரிவித்து சு.வெங்கடேசன் எம்.பி ட்வீட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘இந்தியா முழுவதும் ரயில் நிலையங்களில் உள்ள விசாரணை மற்றும் உதவி மையங்களின் பெயர்களை “சஹ்யோக்” என்று மாற்ற … Read more