ஜன.5ல் திரிபுராவில் பாஜக தேர்தல் ரதயாத்திரை தொடக்கம்!

திரிபுராவில் ஜன 5-ல் பாஜக தேர்தல் ரதயாத்திரையை தொடங்கி வைக்கிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா. தேர்தல் நடக்கவுள்ள நிலையில், திரிபுராவில் ஜனவரி 5-ல் பாஜக தேர்தல் ரதயாத்திரையை தொடங்கி வைக்கிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா. ரதயாத்திரையில் சுமார் 200 பிரச்சார கூட்டங்களை நடத்தவும் 10 லட்சம் மக்களை சந்திக்கவும் பாஜக திட்டமிட்டுள்ளது. 60 சட்டமன்ற தொகுதிகளை ஒன்றிணைக்கும் வகையில் தர்மாநகரில் துவங்கி ஜனவரி 2 வரை ரதயாத்திரை நடக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

4 ஆண்டுகளில் 626 தமிழக மீனவர்கள் கைது – சு.வெங்கடேசன் எம்பி

வெளியுறவு இணை அமைச்சரின் பதில் அரசின் செயலின்மையையே காட்டுகிறது என சு.வெங்கடேசன் எம்பி பதிவு. இந்த ஆண்டு இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது என சு.வெங்கடேசன் எம்பி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில், கடந்த 4 ஆண்டுகளில் 626 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழக மீனவர்கள் கைது குறித்து சு.வெங்கடேசன் எம்பி கேள்விக்கு வெளியுறவு இணை அமைச்சர் முரளிதரன் பதிலளித்துள்ளார். 99 படகுகள் கைப்பற்றப்பட்டதில் … Read more

தமிழ் மொழி தொன்மையானது – மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு

நீதிமன்றங்களில் மாநில மொழிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் கிரண் ரிஜிஜு பேச்சு. சென்னை அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தின் 12-வது பட்டமளிப்பு விழா நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிய பின் பேசிய மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, தமிழ் மொழி தொன்மையான மொழி. அனைத்து நீதிமன்றங்களில் மாநில மொழிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என கூறினார். மேலும், சாமானியர் புரியும் வகையில் நீதிமன்றங்களில் வழக்காடு மொழியாக மாநில … Read more

#BREAKING: ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு!

ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியம் தீபாவளி போனஸாக வழங்கப்படும் என மத்திய அரசு அறிவிப்பு. ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவித்தது மத்திய அரசு. அதன்படி, ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியத்தை தீபாவளி போனஸாக வழங்க மத்திய அமைச்சரவை கூட்டம் ஒப்புதல் அளித்துள்ளது என்று மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் டெல்லியில் செய்தியாளர் சந்திப்பின்போது அறிவித்தார். தீபாவளி போனஸ் வழங்குவதன் மூலம் 11.27 லட்சம் ரயில்வே ஊழியர்கள் பயன்பெறுவார்கள். 11.27 லட்சம் ரயில்வே ஊழியர்களுக்கு … Read more

#BREAKING: மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு! – அமைச்சர் அறிவிப்பு

மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு வழங்க அமைச்சரவை கூட்டம் ஒப்புதல் என அமைச்சர் அனுராக் தாகூர் அறிவிப்பு. மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு வழங்க பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டம் ஒப்புதல் அளித்துள்ளது. ஜூலை 2022 முதல் கணக்கிட்டு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் அறிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய மத்திய அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், டெல்லி, … Read more

#BREAKING: பாஜகவில் இணைந்தார் பஞ்சாப் முன்னாள் முதல்வர்!

பஞ்சாப் மாநிலம் முன்னாள் முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் சிங், பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங், மத்திய அமைச்சர்கள் நரேந்திர சிங் தோமர், கிரண் ரிஜிஜு, பாஜக தலைவர் சுனில் ஜாகர் மற்றும் பாஜக பஞ்சாப் தலைவர் அஸ்வனி சர்மா ஆகியோர் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். பாஜகவில் இணைந்ததை தொடர்ந்து, தனது கட்சியான பஞ்சாப் லோக் காங்கிரஸை-யும் (பிஎல்சி) பாஜகவுடன் இணைத்துள்ளார் கேப்டன் அமரீந்தர் சிங். நாட்டின் சரியான … Read more

அக்.11 முதல் உலகக்கோப்பை மகளிர் கால்பந்து போட்டி – மத்திய அமைச்சர் அறிவிப்பு

மகளிர் கால்பந்து உலகக் கோப்பை போட்டியை இந்தியாவில் நடத்துவதற்கு மத்திய அமைச்சரை ஒப்புதல். 17 வயதுக்குட்பட்ட மகளிர் கால்பந்து உலகக் கோப்பை போட்டியை இந்தியாவில் நடத்துவதற்கான உத்தரவாதங்களில் கையெழுத்திட மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்துக்கு பின் டெல்லியில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் அறிவித்தார். அதன்படி, U-17 மகளிர் உலகக் கோப்பை கால்பந்து போட்டி அக்டோபர் 11 முதல் 30 வரை … Read more

இது நடந்தால் டிக்கெட் விலை 30% குறையும் – மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

மின்சாரத்தில் இயங்கும் பேருந்துகளுக்கு மாறினால் டிக்கெட் விலை 30% குறையும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேச்சு. ரூ.2,300 கோடி மதிப்பிலான ஐந்து வழி சாலைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதற்காக மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவில் பேசிய மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, பொதுப் போக்குவரத்து அமைப்பில் டீசல் பயன்பாட்டைக் குறைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். மாநில போக்குவரத்து கழகங்கள், மின்சாரத்தில் இயங்கும் பேருந்துகளுக்கு … Read more

இந்தியாவில் அக்டோபருக்குள் 5ஜி சேவை.. முதலில் இந்த 13 முக்கிய நகரங்களில் தான்!

5ஜி அலைக்கற்றை ஏலத்தில் அரசு பெற்ற மொத்த மதிப்பான ரூ.1,50,173 கோடியில் 58.65% ஏலம் எடுத்தது ரிலையன்ஸ் ஜியோ. இந்தியா தனது முதல் 5ஜி அலைக்கற்றை ஏலத்தை கடந்த 7 நாட்களாக நடத்தி முடித்திருந்தது. மிகவும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த 5ஜி ஏலம் நேற்று நிறைவு பெற்றது. இதில், ரூ.1,50,173 கோடிக்கு 5ஜி அலைக்கற்றை ஏலம் விடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்த ஏலத்தின் இறுதியில் 4 நிறுவனங்கள் ரூ.1,50,173 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளதாகவும், ரிலையன்ஸ் … Read more

#JustNOW: மின்சார டிராக்டர், லாரிகள் விரைவில் அறிமுகம் – மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

விரைவில் மின்சாரத்தில் இயங்கும் டிராக்டரை அறிமுகப்படுத்த உள்ளதாக மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவிப்பு. மகாராஷ்டிரம் மாநிலம் புனேவில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, மின்சார ஸ்கூட்டர்கள், கார்கள், பேருந்துகள் போன்று, மின்சார டிராக்டர், லாரிகள் விரைவில் அறிமுகம் செய்யப்பட்டு, பயன்பாட்டிற்கு வரும் என தெரிவித்தார். எத்தனால், மெத்தனால் போன்று, மின்சாரமும் மாற்று எரிசக்தியாக பெருமளவில் பயன்படுத்தப்படும். எரிபொருள் தேவையில் தன்னிறைவை அடைவதோடு, நாட்டில் சுற்றுசூழலுக்கு … Read more