அமித்ஷாவின் திட்டம் இது தான் – நடிகர் பிரகாஷ் ராஜ் காட்டம்!

ஒரே நாடு ஒரே மொழி எனும் திட்டத்தை செயல்படுத்துவது தான் அமித்ஷாவின் நோக்கம் என நடிகர் பிரகாஷ் ராஜ் கூறியுள்ளார்.

ஆங்கிலத்திற்கு மாற்று மொழியாக ஹிந்தியை பேச வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருப்பதற்கு தொடர்ந்து பல அரசியல்வாதிகள் தமது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர்கர் பிரகாஷ் ராஜும் தற்போது தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

அதன்படி இந்தியை எங்கே பேச வேண்டும்? எங்கு கற்க வேண்டும்? என்று நினைக்கிறீர்கள். ஒரே நாடு, ஒரே மொழி எனும் திட்டத்தை செயல்படுத்தவே அமித்ஷா முயற்சிக்கிறார். இந்தி மொழியைக் கொண்டு வருவதால் உங்கள் திட்டம் என்ன? நாட்டில் பல முக்கிய பிரச்சனைகள் இருக்கும்போது ஏன் இதில் கவனம் செலுத்துகிறீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளார்.