சற்று தாமதமானாலும் காவிரி நீர் நிச்சயம் தமிழகத்திற்கு வரும்…!

பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கால தாமதமானாலும் நிச்சயம் காவிரி நீர், தமிழகத்திற்கு வரும் என கூறியுள்ளார். தருமபுரியில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும், காவிரிக்காக போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகி, மாலையிலேயே விடுதலையாகும் மு.க.ஸ்டாலின், காவிரி பிரச்னை தீரும் வரை, சிறையிலிருந்து வெளியே வரமாட்டேன், என கூறத் தயாரா? என்றும், தமிழிசை சவால் விடுத்துள்ளார். 1974-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் இருந்த வழக்கை, தங்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு வந்துவிடக் கூடாது என்பதற்காக, … Read more

தொடர் முழக்கத்தால் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு …!

அதிமுக உள்ளிட்ட கட்சிகள் முழக்கமிட்டதால் மக்களவையில் அமளி ஏற்பட்டது. மத்திய அரசே காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திடுக, தமிழ்நாட்டுக்கு நியாயம் வழங்குக என்று தமிழக எம்.பிக்கள் முழக்கமிட்டனர். தொடர் முழக்கத்தால் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

அடுத்த அதிர்ச்சி செய்தி …!ஃபேஸ்புக்-ஐ தொடர்ந்து வாட்சாப் தகவல்களும் திருட்டு …!

வாட்சாப் தகவல்களும் ஃபேஸ்புக்கைத் தொடர்ந்து, சாட்டிங் விவரங்களும் திருடப்படும் அபாயம் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. Chatwatch எனப்படும் செயலி மூலம், தங்களின் நண்பர்களின் வாட்சப் உரையாடல்கள் உட்பட, Offline, Online Status ஆகியவற்றையும், அவர்கள் எப்போது தூங்கச் செல்கிறார், எப்போது விழிக்கிறார் உட்பட அனைத்து விஷயங்களையும் கணிக்க முடியும் என்று கூறப்படுகிறது. Apple App Store -ல் இருந்து இந்தச் செயலி நீக்கப்பட்ட நிலையில், android play store ல் தற்போது கிடைக்கிறது. இந்த Chatwatch பிரச்சனையை முடிவுக்குக் … Read more

அதிமுக எம்.பி முத்துகருப்பனின் ராஜினாமா கடிதத்தை ஏற்க வாய்ப்பில்லை?காரணம் என்ன ?

மாநிலங்கலவை தலைவர்  அதிமுக எம்.பி முத்துகருப்பனின் ராஜினாமா கடிதத்தை ஏற்க வாய்ப்பில்லை என தகவல் வெளியாகியுள்ளது. மாநிலங்களவை உறுப்பினர் பொறுப்பை ராஜினாமா செய்வதற்கான வழிமுறைகள்: ➤ தனது பதவியை  ராஜினாமா செய்ய விரும்பும் ஒரு நபர் தனது கைப்பட ராஜினாமா கடிதத்தை எழுதி மாநிலங்களவை தலைவருக்கு அனுப்ப வேண்டும். ➤ மாநிலங்களவை தலைவருக்கு கடிதத்தை நேரில் சென்று வழங்கி ராஜினாமாவிற்கான காரணத்தை விளக்க வேண்டும். ➤ ராஜினாமாவை ஏற்பதும் மறுப்பதும் மாநிலங்களவை தலைவரின் தனிப்பட்ட அதிகாரத்திற்கு உட்பட்டது. … Read more

காஞ்சிபுரத்தில் வாழ்வுரிமை கட்சியினர் பானைகளை உடைத்து போராட்டம்!

தமிழக வாழ்வுரிமை கட்சியினர்  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து காஞ்சிபுரத்தில் உள்ள மத்தியசரக்கு மற்றும் சேவை வரிதுறை அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது இரத்தம் போல்சாயம் கலந்த தண்ணீர் பானைகளை உடைத்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான கலந்து கொண்டனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.    

தி.மு.கவினர் கோவையில் தீக்குளிக்க முயற்சி….!போலீசார் தடுத்து நிறுத்தம் ….!

தி.மு.கவினர் இருவர்  கோவையில் தீக்குளிக்க முயற்சி செய்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழகம் முழுவதும் போராட்டம் வலுப்பெற்று வருகிறது. முக்கியமாக தமிழக எதிர்க்கட்சிகள் மத்திய அரசை கண்டித்து தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட பல இடங்களில் தி.மு.கவினர் ஆர்ப்பாட்டம், சாலைமறியலில் ஈடுபட்டுள்ளனர். சென்னை சைதாப்பேட்டையில் எம்.எல்.ஏ சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற சாலைமறியலில் தி.மு.கவினர் பலர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை … Read more

ஏப்ரல்-9ல் மத்திய அரசு மீது தமிழக அரசு தொடர்ந்த வழக்கு விசாரணை…!

உச்ச நீதிமன்றம், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசு மீது தமிழக அரசு தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ஏப்ரல் 9ல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என  தெரிவித்துள்ளது. காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கில் நடுவர் மன்றம் வழங்கிய இறுதித்தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் தமிழகத்துக்கு கர்நாடகம் வழங்க வேண்டிய நீரின் அளவை குறைத்து கடந்த மாதம் 16-ந் தேதி தீர்ப்பு வழங்கியது.அப்போது, 6 வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை … Read more

ஸ்டெர்லைட் விவகாரம் : தூத்துக்குடியில் 1000-க்கும் மேற்பட்டோர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்…!

தூத்துக்குடியில்  1000க்கும் மேற்பட்டோர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தூத்துக்குடியில் உள்ள காப்பர் தயாரிக்கும் ஸ்டெர்லைட் ஆலையால் விவசாயம் பாதிக்கப்படுவதோடு குடிநீரால் அப்பகுதி மக்களும் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தூத்துக்குடியில் இயங்கி வரும் ‘வேதாந்தா’ நிறுவனத்தின் அங்கமான ஸ்டெர்லைட் ஆலையின் 25 ஆண்டு ஒப்பந்தம், அடுத்த ஆண்டு முடிவடைகிறது.ஆலையின் அடுத்த விரிவாக்கத்திற்காக, அந்நிறுவனம் விரிவாக்கப் பணியினை தொடங்கி உள்ளது. ஆலையிலிருந்து வெளியாகும் நச்சுப் புகையால், சுற்றுச்சூழல் பாதிப்பும், சுற்றியுள்ள கிராம மக்களுக்கு, மூச்சுத்திணறல் முதல் … Read more

துணை குடியரசு தலைவரிடம் ராஜினாமா கடிதத்தை அளித்தார் முத்துக்கருப்பன் எம்.பி…!

ராஜ்யசபா எம்.பி.,யாக முத்துக்கருப்பன், தனது ராஜினாமா கடிதத்தை ராஜ்யசபா சபாநாயகரும் துணை குடியரசு தலைவருமான வெங்கைய்யா நாயுடுவிடம் அளித்தார். அதிமுக.,வை சேர்ந்த முத்துக்கருப்பன் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தனது எம்.பி., பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.ராஜ்யசபா எம்.பி.,யாக முத்துக்கருப்பன், தனது ராஜினாமா கடிதத்தை ராஜ்யசபா சபாநாயகரும் துணை குடியரசு தலைவருமான வெங்கைய்யா நாயுடுவிடம் அளித்தார்.   தனது ராஜினாமா கடிதத்தை செய்தியாளர்களிடம் அவர் வாசித்து காட்டினார். பின்னர் பேசிய அவர், எனது பதவி காலம் முடிய இன்னும் … Read more

செயின்ட்.மதர் தெரசா பொறியியல் கல்லூரி மாணவர்கள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரே முற்றுகை போராட்டம்!

தூத்துக்குடியில் செயின்ட்.மதர் தெரசா பொறியியல் கல்லூரி மாணவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரே நின்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தூத்துக்குடியில் உள்ள காப்பர் தயாரிக்கும் ஸ்டெர்லைட் ஆலையால் விவசாயம் பாதிக்கப்படுவதோடு குடிநீரால் அப்பகுதி மக்களும் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தூத்துக்குடியில் இயங்கி வரும் ‘வேதாந்தா’ நிறுவனத்தின் அங்கமான ஸ்டெர்லைட் ஆலையின் 25 ஆண்டு ஒப்பந்தம், அடுத்த ஆண்டு முடிவடைகிறது.ஆலையின் அடுத்த விரிவாக்கத்திற்காக, அந்நிறுவனம் விரிவாக்கப் பணியினை தொடங்கி உள்ளது. ஆலையிலிருந்து வெளியாகும் நச்சுப் … Read more