கட்டிப்பிடிங்க, வெறுக்காதீங்க.! கட்டிப்பிடி தினத்தை முன்னிட்டு பாஜகவிற்கு வீடியோவை பகிர்ந்த காங்கிரஸ்.!

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் காங்கிரஸ் தலைவர், பாஜக அரசை கடுமையாக விமர்சித்தார். அப்போது வெறுப்பு பிரச்சாரத்தைக் கைவிடுங்கள் என்றும், அனைவரது மீதும் அன்பை வெளிப்படுத்துங்கள் என தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பா.ஜ.க அரசை கடுமையாக விமர்சித்து பேசினார். அப்போது கூறிய காங்கிரஸ் தலைவர் வெறுப்பு பிரச்சாரத்தைக் கைவிடுங்கள் என்றும், அனைவரது மீதும் அன்பை வெளிப்படுத்துங்கள் என்று பேசிய அவர், இறுதியாக மோடி கட்டியணைத்தார். … Read more

துப்பாக்கிச்சூடு சம்பவம் வருத்தமளிக்கிறது தம்பிதுரை..!!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் அனைவருக்கும் துயரமான வருத்தமளிக்கும் சம்பவம் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளார். கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,   துப்பாக்கிச்சூடு சம்பவம் அனைவரின் மனதையும் புண்படுத்தும் வகையில் இருப்பதாகவும், எனவே தான் அதற்கு ஒரு நிவாரணம் தேடும் விதமாக அவர்களுக்கு அரசு உரிய உதவிகளை அரசு வழங்குவதாகக் கூறினார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

தானியங்கி ஆயுதங்கள் ஏன் பயன்படுத்தப்பட்டது..?மு.க.ஸ்டாலின்

ஸ்டெர்லைட் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவு பிறப்பித்தது யார்? என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், போராட்டத்தைக் கலைக்க தானியங்கி ஆயுதங்கள் ஏன் பயன்படுத்தப்பட்டது? எந்த சட்டம் இதை அனுமதிக்கிறது என்று வினவியுள்ளார். துப்பாக்கிச்சூடு நடத்தப்படுவதற்கு முன்னர் மக்களுக்கு ஏன் எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என்று கேட்டுள்ள ஸ்டாலின், படுகாயங்களை தவிர்க்க ரப்பர் மற்றும் பிளாஸ்டிக் குண்டுகளை ஏன் பயன்படுத்தவில்லை என்றும்கேள்வி எழுப்பியுள்ளார். சட்டம் ஒழுங்கை காப்பாற்ற … Read more

தலைவர் முன்னிலையிலே தகராறு!! காங்கிரஸ் ஆலோசனை கூட்டத்தில்!கடும் சண்டை!!

ராமநாதபுரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் ஆலோசனை கூட்டத்தில் தமிழகத் தலைவர் திருநாவுகரசர் முன்னிலையில் மாவட்ட தலைவர்கள் சண்டையிட்டுக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் மாவட்ட தலைவர் குட்லக் ராஜேந்திரன் தற்பொழுது தலைவராக இருக்கும் தேவேந்திரனை, தான் சொன்னதன் அடிப்படையிலேயே மாவட்ட பொறுப்பு வழங்கியதாகவும் கூறினார். இதனால் ஆத்திரமடைந்த தேவேந்திரன் மேடையிலேயே எழுந்து சண்டையிட பாய்ந்தார். இதனைக் கண்ட திருநாவுக்கரசர் அவரை தட்டி இழுத்து அமைதி காக்கும்படி கூறினார். பின்னர் பேசிய திருநாவுக்கரசர் யார் யாருக்கு என்ன பொறுப்பு வழங்க … Read more

காலியான கடையில் கடை திறப்பு விழாவிற்கு சென்ற MLA..!!

காரைக்குடியில் புதிய நியாயவிலைக்கடையில் பொருட்கள் எதுவும் இல்லாததால், திறப்பு விழாவுக்கு வந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராமசாமி திரும்பிச் சென்றார். சூடாமணிபுரத்தில் நியாய விலைக்கடைக்கு 7 லட்சம் ரூபாய் செலவில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு, அதன் திறப்பு விழாவுக்கு காங்கிரஸ் சட்டமன்ற குழுத் தலைவர் ராமசாமி அழைக்கப்பட்டிருந்தார். விழாவுக்கு வந்த அவர், நியாயவிலைக் கடையில் பொருட்கள் எதுவும் இல்லாததை கண்டு ஆத்திரமடைந்தார். மேலும், அதிகாரிகளும் யாரும் வராததால், அதிருப்தி அடைந்த அவர், புதிய நியாயவிலைக்கடை திறப்பு விழாவை புறக்கணித்து, … Read more

மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா செல்கிறார்!! தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், தொண்டையில் ஏற்பட்ட பாதிப்பால் அவதிப்பட்டார் என்பது எல்லோரும் நன்கு அறிந்தது தான் சமீப காலமாக அவர் பேசுவது யாருக்கும் புரியாத நிலையில் தான் பேசி வந்தார் இந்நிலையில்தொண்டையில் ஏற்பட்ட பாதிப்பிற்காக  அவர் சிங்கப்பூர் சென்று சிகிச்சை பெற்று வந்தார்.இந்த நிலையில் விஜயகாந்த் நாளை மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா செல்கிறார். அவருடன் மனைவி பிரேமலதா உடன் செல்கிறார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு!! திரிணமுல் காங்கிரஸ் கட்சியைகண்டித்து கோவில்பட்டியில் ஆர்ப்பாட்டம்

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தலின் போது திரிணமுல் காங்கிரஸ் கட்சி நடந்து கொண்ட விதத்தை கண்டித்து கோவில்பட்டியில் பயணியர் விடுதி முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேற்கு வங்க மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தலின் போது திரிணமுல் காங்கிரஸ் கட்சி நடந்து கொண்ட விதத்தை கண்டித்து கோவில்பட்டியில் பயணியர் விடுதி முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட குழு உறுப்பினர் விஜயலட்சுமி தலைமை வகித்தார். கிருஷ்ணவேணி முன்னிலை வகித்தார். நகர … Read more

எம்.எல்.ஏக்களுக்கு 150 கோடி பேரம் பேசிய ஆடியோவை வெளியிட்டது காங்கிரஸ்!!

காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு 150 கோடி ரூபாய் தருவதாக  பா.ஜ.க. வின் ஜனார்த்தன் ரெட்டி பேரம் பேசியதாக தொலைபேசி உரையாடல் ஒன்றை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சி நிர்வாகி உக்கரப்பா, முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராய்ச்சூர் தொகுதி எம்.எல்.ஏ பசனகவுடாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக கூறினார். இரு நாட்களாக அவரை தொடர்பு கொண்டு பேசிய ஜனார்த்தனன் ரெட்டி, முதலில் 25 கோடி தருவதாகவும், அடுத்த நாளில் … Read more

கொடைக்கானலில் 57-வது மலர் கண்காட்சி தொடங்கி வைத்தார் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி..!!

மலைகளின் இளவரசி எனப்படும் கொடைக்கானலில் ஒவ்வொரு ஆண்டும் மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 57-வது மலர் கண்காட்சி பிரையண்ட் பூங்காவில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை வகித்து தொடங்கி வைத்தார். பின்னர் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் ரூ.1485 லட்சம் மதிப்பில் கொடைக்கானல் ரோஜா தோட்டம், கொய்மலர்கள் செயல்விளக்க மாதிரி தோட்டத்தை தொடங்கி வைத்தார். அதன்பின் … Read more

நம்பிக்கை வாக்கெடுப்பு கர்நாடகா சட்டசபை வளாகத்தில் பதற்றத்தை தணிக்க 2000 போலீஸ்சார் குவிப்பு..!!

நம்பிக்கை ஓட்டெடுப்பு நடப்பதை முன்னிட்டு கர்நாடகா சட்டசபையான விதான் சவுதாவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று அம்மாநில டி.ஜி.பி.க்கு சுப்ரீம்கோர்ட்டு நேற்று உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து கர்நாடகா போலீஸ் டி.ஜி.பி. நீல்மணி என்.ராஜு மூத்த போலீஸ் அதிகாரிகளுடன் சென்று விதான் சவுதா பகுதிகளை ஆய்வு செய்து பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தார். அவர் உத்தரவின் பேரில் விதான் சவுதா வளாகத்தில் சுமார் 2 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மூன்று வளைய பாதுகாப்பை ஏற்படுத்தி உள்ளனர். … Read more