பரபரப்பு…தமிழ்த்தாய் வாழ்த்திற்கு எழுந்து நிற்காத ரிசர்வ் வங்கி அதிகாரிகளால் சர்ச்சை!

சென்னை:குடியரசு தின விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்திற்கு ரிசர்வ் வங்கி அதிகாரிகள் எழுந்து நின்று மரியாதை செலுத்தாத விவகாரம் சர்ச்சையானதை அடுத்து,உரிய புகார் அளிக்கும் பட்சத்தில்,வீடியோ ஆதாரங்களை ஆய்வு செய்து, தமிழக அரசின் உத்தரவின்படி விசாரணை நடத்தப்படும் என சென்னை காவல்துறை தகவல். நாட்டின் 73-வது குடியரசு தினத்தை முன்னிட்டு,நாடு முழுவதும் குடியரசு தின விழா இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.அந்த வகையில்,தமிழகத்திலும் இன்று  அரசு சார்பில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில்,சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி … Read more

அவசர உதவி தேவைப்படுவோருக்கு உதவி எண் அறிவிப்பு – சென்னை காவல்துறை

ஊரடங்கின்போது அவசர உதவி தேவைப்படுவோர் உதவி எண்ணை வெளியிட்டுள்ளது சென்னை காவல்துறை. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா மற்றும் ஓமைக்ரான் பாதிப்பு அதிகரித்து வருவதால், இரவுநேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என அமலில் இருந்து வருகிறது. சென்னையில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், அங்கு பல்வேறு நடவடிக்கைகளை சென்னை காவல்துறை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், ஊரடங்கின்போது அவசர உதவி தேவைப்படுவோர் காவல்துறை உதவி எண் 100 மற்றும் 112 … Read more

#BREAKING: இரவுநேர ஊரடங்கு – நள்ளிரவில் 547 வாகனங்கள் பறிமுதல்!

முகக்கவசம் அணியாதது தொடர்பாக 462 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று சென்னை காவல்துறை தகவல். சென்னையில் இரவுநேர ஊரடங்கின்போது விதிகளை மீறியதாக 547 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் நேற்றில் இருந்து இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. கொரோனா மற்றும் ஓமைக்ரான் பரவல் காரணமாக இரவு 10 மணியிலிருந்து அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில், சென்னையில் ள்ளிரவில் 547 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறை கூறியுள்ளது. இதில் … Read more

#BREAKING: ஹெல்ப்லைன் எண்ணை அறிவித்த சென்னை காவல்துறை..!

ஊரடங்கு காலத்தில் உதவியும் தேவைப்படும் பொதுமக்களுக்கு உதவ சென்னை காவல்துறை 14 நாட்களுக்கு 24 * 7 உதவி மையத்தை அமைத்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த இன்று முதல் வருகின்ற 24-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை மாநகர போலீசார் சார்பில் கொரோனா உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் செயல்படும் வகையிலான உதவி மையத்தை தொடர்பு கொள்ள 9498181236, 9498181239 ஆகிய தொலைபேசி எண்களும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, கொரோனா ஊரடங்கு காலத்தில் … Read more

சென்னை கோட்டையில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு.! சிசிடிவி காமிராக்கள்…

சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோட்டையில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வருடந்தோறும் சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள ரயில் நிலையம், பேருந்து நிலையம் உட்பட முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும். அந்தவகையில் இந்த வருடம் கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக ரயில் சேவை, பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இருந்தாலும், ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் ரயில்களில் மோப்ப நாய், வெடிகுண்டு கண்டறியும் கருவிகள் மூலம் நேற்று வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டது. மேலும், … Read more

ஊரடங்கு கண்காணிப்பு பணியில் களமிறக்கப்பட்ட ரோபோக்கள்.! சென்னை போலீசாரின் அசத்தல் ஐடியா.!

சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் ரோபோக்கள் கொண்டு மக்களின் நடவடிக்கைகள் கண்காணிக்கவும், அதன் மூலமே மக்களுடன் உரையாடவும் போலீசார் கண்காணிப்பு ரோபோக்களை களமிறக்கியுள்ளனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து கொண்டே இருக்கிறது. அதிலும் குறிப்பாக தலைநகர் சென்னையில்தான் அதிகளவில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகள் பல பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, அந்த பகுதிகளில் மக்கள் நடவடிக்கைகள் பற்றி தெரிந்து கொள்ள தற்போது சென்னை காவல்துறையினர் புதிய வழியை அறிமுகப்படுத்தியுள்ள. அதன்படி, … Read more

சென்னையில் 90 ரூட் தலைகள் கண்டுபிடிப்பு! வேட்டைஆரம்பம்!

சென்னையில் அண்மைகாலமாக கல்லூரி மாணவர்களிடையே வன்முறை அதிகரித்து, பிரபல ரவுடிகள் போல நடுரோட்டில் பயங்கர ஆயுதங்களுடன் பொதுமக்களை பயமுறுத்தும் வகையில் பிரச்சனை செய்து வருகின்றனர். இது குறித்து பல்வேறு கட்டமாக விசாரணை நடந்து வருகிறது. இது தொடர்பாக முன்னாள் சென்னை கல்லூரி மாணவர்கள், ரூட் தலைகள் என பலரை பற்றி விசாரித்து வருகின்றனர். தற்போது 90 ரூட் தலைகள் சென்னை போலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்னர். அடுத்தகட்டமாக இவர்களையும், இவர்கள் பெற்றோரையும் வரவழைத்து அறிவுரை வழங்க திட்டமிட்டுள்ளனர்.

4 வயது சிறுமி பாலியல் கொலை – முன்னாள் ராணுவ வீரர் மற்றும் அவரது மனைவி கைது

சென்னை ஆவடியில் நான்கு வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் முன்னாள் ராணுவ வீரர் மற்றும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை ஆவடி பகுதியில் வசித்து வரும் 4 வயதே ஆன சிறுமி தன் பெற்றோர் வெளியில் சென்றிருந்த நிலையில் தனியாக அவரது இல்லத்தில் இருந்துள்ளார். அவரது இல்லத்திற்கு பின்புறம் உள்ள இல்லத்தில் வசித்து வருபவர் மீனாட்சி சுந்தரம் . ராணுவத்தில் பணிபுரிந்து ஒய்வு பெற்ற இவர் தன் மனைவியுடன் வசித்து வந்துள்ளார். சிறுமி தனியாக வீட்டில் … Read more

ஜல்லிக்கட்டு போராட்டம் போல் மாணவர்கள் ஒன்று திரண்டு விடக்கூடாது..!!என மெரினா கடற்கரையில் போலீஸ் குவிப்பு..!!

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடி மக்கள் நடத்திய முற்றுகை போராட்டத்தில் போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியதில் 10 பேர் பலியான சம்பவம் தமிழகத்தையே உலுக்கி உள்ளது. நெஞ்சை பதற வைத்த பயங்கர சம்பவம் மக்களின் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து சென்னையில் பல்வேறு அமைப்புகள் போராட்டங்களை அறிவித்துள்ளன. புரட்சிகர மாணவர்கள் அமைப்பினர் கோட்டை முற்றுகை போராட்டத்தை அறிவித்தனர். மேலும் பல மாணவர் சமூக பொது நல அமைப்புகள் மெரினாவில் திரள்வதாக தகவல் … Read more

குற்றவாளிகளுக்கு மட்டும் தான் மனித உரிமையா.? காவலர்களுக்கு இல்லையா.? : நீதிபதி கிருபாகரன் கேள்வி…!!

காவல்துறையினர் பிரச்சினைகளை தீர்க்க நிபுணர் குழு அமைக்க உத்தரவிட்டும் நடவடிக்கை எடுக்காதது ஏன்.?. தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. நிபுணர் குழுவினர் பட்டியலை வரும் 22 ஆம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும். பட்டியலை சமர்பிக்க்கவிட்டால் உள்துறை செயலர் நேரில் ஆஜராக நேரிடும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. உயர் அதிகாரிகள் வீட்டில் எவ்வளவு காவலர்கள் வேலை பார்க்கின்றனர்.?. குற்றவாளிகளுக்கு மட்டும் தான் மனித உரிமையா.? காவலர்களுக்கு இல்லையா.? : நீதிபதி கிருபாகரன் கேள்வி.