செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா – தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய நடிகர் சிவகார்த்திகேயனின் மகள் ஆராதனா!

செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில், நடிகர் சிவகார்த்திக்கேயனின் மகள் ஆராதனா தமிழ்த்தாய் வாழ்த்து பாடியுள்ளார்.  மாமல்லபுரத்தில் 12 நாட்களாக நடைபெற்று வந்த 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி, கண்கவர் நிகழ்ச்சிகளுடன் நேரு உள்விளையாட்டு அரங்கில் கோலாகளமாக நிறைவு பெறுகிறது.  இந்த விழாவில், முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த விழாவில் பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெற்றுள்ள நிலையில், நடிகர் சிவகார்த்திக்கேயனின் மகள் ஆராதனா தமிழ்த்தாய் வாழ்த்து பாடியுள்ளார்.

#BREAKING : ரிசர்வ் வங்கி அதிகாரிகள் மீது போலீசில் புகார்!

தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்த ரிசர்வ் வங்கி ஊழியர்கள் மேல் நடவடிக்கை எடுக்க காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார். சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் ஒலிக்கப்பட்ட போது எழுந்து நின்று மரியாதை செலுத்தாமல் ரிசர்வ் வங்கி ஊழியர்கள் அலட்சியம் காட்டியுள்ளதாகவும், தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கும்போது எழுந்து நிற்க வேண்டிய அவசியமில்லை என சென்னை ரிசர்வ் வங்கி அதிகாரிகள் பத்திரிகையாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வீடியோ … Read more

ரிசர்வ் வங்கி அதிகாரிகள் சிலருக்கு என்ன நேர்ந்ததோ தெரியவில்லை, அய்யோ பாவம்! – தயாநிதி மாறன்

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்க மறுத்து வாக்குவாதம் செய்த ரிசர்வ் வங்கி பணியாளர்கள் குறித்து திமுக எம்.பி. தயாநிதிமாறன் கருத்து. சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் ஒலிக்கப்பட்ட போது எழுந்து நின்று மரியாதை செலுத்தாமல் ரிசர்வ் வங்கி ஊழியர்கள் அலட்சியம் காட்டியுள்ளதாகவும், தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கும்போது எழுந்து நிற்க வேண்டிய அவசியமில்லை என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும் சென்னை ரிசர்வ் வங்கி அதிகாரிகள், பத்திரிகையாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டதாகவும் … Read more

பரபரப்பு…தமிழ்த்தாய் வாழ்த்திற்கு எழுந்து நிற்காத ரிசர்வ் வங்கி அதிகாரிகளால் சர்ச்சை!

சென்னை:குடியரசு தின விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்திற்கு ரிசர்வ் வங்கி அதிகாரிகள் எழுந்து நின்று மரியாதை செலுத்தாத விவகாரம் சர்ச்சையானதை அடுத்து,உரிய புகார் அளிக்கும் பட்சத்தில்,வீடியோ ஆதாரங்களை ஆய்வு செய்து, தமிழக அரசின் உத்தரவின்படி விசாரணை நடத்தப்படும் என சென்னை காவல்துறை தகவல். நாட்டின் 73-வது குடியரசு தினத்தை முன்னிட்டு,நாடு முழுவதும் குடியரசு தின விழா இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.அந்த வகையில்,தமிழகத்திலும் இன்று  அரசு சார்பில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில்,சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி … Read more

#BREAKING: தமிழ்த்தாய் வாழ்த்து திருத்தப்பட்டது செல்லும் – உயர்நீதிமன்றம்

தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை கலைஞர் கருணாநிதி திருத்தியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். கடந்த 1970-ஆம் ஆண்டு தமிழ்த்தாய் வாழ்த்தை அப்போதைய முதல்வர் கருணாநிதி திருத்தியது செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய பாடல் வரிகளை குறைத்து தமிழ்தாய் வாழ்த்தாக மாற்றப்பட்டதை எதிர்த்த வழக்கில் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2007ல் மோகன்ராஜ் என்பவர் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து தமிழ்தாய் வாழ்த்தை திருத்தியது செல்லும் என உத்தரவிட்டுள்ளது.

நாங்கள் அதிகாரத்திற்கு வரும் போது தமிழ்த்தாய் வாழ்த்தை மாற்றுவோம் – சீமான்

நாங்கள் அதிகாரத்திற்கு வரும் போது தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை மாற்றுவோம் என்று சீமான் பேச்சு. தமிழ்தாய் வாழ்த்து பாடலை தமிழக அரசின் மாநில பாடலாக முதலமைச்சர் முகா ஸ்டாலின் அறிவித்து, அதற்கான அரசாணையை வெளியிட்டார். இதற்கு பலரும் தமிழக அரசுக்கு பாராட்டுகள் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், செய்தியாளர் சந்திப்பில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நாங்கள் அதிகாரத்திற்கு வரும் போது தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை மாற்றுவோம் என்றும் வேறு பாடல் இருக்கும் எனவும் … Read more

ராஜேந்திர பாலாஜி தலைமறைவாக இருக்கிறார் என யார் சொன்னது? – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

ராஜேந்திர பாலாஜி தலைமறைவாக இல்லை என்று முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி. சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார், தமிழுக்கு எந்த தொண்டும் ஆற்றாமல் தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக அறிவித்துள்ளது திமுக அரசு. உண்மையிலேயே தமிழுக்கு தொண்டாற்றியது எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் தான் என்று தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து, ராஜேந்திர பாலாஜி தலைமறைவாக இருக்கிறார் என யார் சொன்னது? என்று செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தார். அவர் தலைமறைவாக இல்லை என்றும் அவருக்கு … Read more

#BREAKING: தமிழ்த்தாய் வாழ்த்து மாநில பாடலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..!

தமிழ்த்தாய் வாழ்த்து தமிழ்நாடு அரசின் மாநில பாடலாக அறிவித்து முதலமைச்சர் அரசாணை வெளியீடு.  இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அன்னைத் தமிழ் மொழியைப் போற்றிடும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாடப்படுவதை ஒருங்கிணைத்து, நெறிமுறைப்படுத்த வேண்டிய நிலையில், கீழ்க்கண்ட வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என தற்போது. அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 1. மனோன்மணியம் சுந்தரனார் இயற்றிய கீழ்க்கண்ட வரிகளைக் கொண்ட தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் தமிழ்நாடு அரசின் மாநிலப் பாடலாக அறிவிக்கப்படுகிறது. தமிழ்த்தாய் வாழ்த்தின் கீழ்க்கண்ட வரிகள் 55 வினாடிகளில் முல்லைப்பாணி … Read more

தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் – தமிழக அரசு புதிய உத்தரவு..!

அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதத்தை பயிற்சி பெற்றவர்களை கொண்டு பாட வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. சமீபகாலமாக அரசு விழாக்களில், தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் ஆகியவை பதிவுசெய்யப்பட்ட கருவிகள் வாயிலாக இசைக்கப்படுவதாகவும், இதனால் விழாவில் பங்கேற்போர் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கும்போது, உதட்டளவில் கூட பாடுவதில்லை. மேலும், எவ்வித தேசப்பற்றோ அல்லது தமிழ் உணர்வோ இல்லாமல் எந்திரகதியில் எழுந்து நிற்பதாகவும், எந்த நோக்கத்திற்காக தமிழ்த்தாய் வாழ்த்தும், தேசிய கீதமும் இசைக்கப்படுகிறதோ, … Read more

“தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவதை உறுதி செய்க” – ஐஐடி இயக்குநருக்கு அமைச்சர் பொன்முடி கடிதம்!

தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவதை உறுதி செய்ய வலியுறுத்தி சென்னை ஐஐடி இயக்குநருக்கு அமைச்சர் பொன்முடி கடிதம் எழுதியுள்ளார். கடந்த நவ.20 ஆம் தேதியன்று நடைபெற்ற சென்னை ஐஐடி பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.இதற்கு தமிழ் ஆர்வலர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில்,சென்னை ஐஐடி யில் இனி வரும் காலங்களில் பட்டமளிப்பு விழா உட்பட அனைத்து நிகழ்ச்சிகளிலும் “தமிழ் தாய் வாழ்த்து” பாடப்படுவதை உறுதி செய்யுமாறு ஐஐடி இயக்குனர் பேராசிரியர் பாஸ்கர் … Read more