சிஏஏ விவகார போராட்டம் ..! கைது செய்யும் உத்தரவு நிறுத்திவைப்பு!

இந்தியா முழுவதும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பல இடங்களில் பல போராட்டங்கள்நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருப்பூரில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டவிரோதமாக நடைபெறும் போராட்டங்களை தடுக்க என வழக்கறிஞர் கோபிநாத் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில் இந்த போராட்டத்தால் பொதுமக்கள் பாதிப்பு அடைகின்றனர்.மேலும் போராட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் கட்டாயப்படுத்தி ஈடுபடுவதாகவும் கூறி இருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிமன்றம்  குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக திருப்பூரில் அனுமதியின்றி போராட்டங்கள் … Read more

சிஏஏ விவகாரம்..! அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபடுபவர்களை அப்புறப்படுத்த உத்தரவு!

இந்தியா முழுவதும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பல இடங்களில் பல போராட்டங்கள்நடைபெற்று வருகிறது. இந்நிலையில்  திருப்பூரில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டவிரோதமாக நடைபெறும் போராட்டங்களை தடுக்க என  வழக்கறிஞர் கோபிநாத் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில் இந்த போராட்டத்தால் பொதுமக்கள்  பாதிப்பு அடைகின்றனர்.மேலும் போராட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள்  கட்டாயப்படுத்தி ஈடுபடுவதாகவும் கூறி இருந்தார். இந்த மனுவை நீதிபதி குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக திருப்பூரில் அனுமதியின்றி போராட்டங்கள் நடத்துபவர்களை கைது … Read more

டெல்லி வன்முறை : முடியவில்லை என்றால் பதவி விலகுங்கள் -ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், டெல்லியில் நடைபெற்ற போராட்டங்கள் மத்திய அரசின் intelligence-ன் தோல்வி.இதற்காக மத்திய அரசை கண்டிக்கிறேன்.சிஏஏ சட்டத்தால் இஸ்லாமியர்கள் பாதிக்கப்பட்டால் அவர்களுக்காக முதல்ஆளாக நிற்பேன் என்றுதான் கூறினேன்.   என்ன உண்மையோ அதை சொல்கிறேன். என் பின்னால் பாஜக இருப்பதாக கூறுவது வருத்தமளிக்கிறது.மதத்தை வைத்து அரசியல் செய்வதை வன்மையாகக் கண்டிக்கிறேன். டெல்லி போராட்டத்தை மத்திய அரசு அடக்கவில்லை என்றால் எதிர்காலத்தில் பெரும் பிரச்சனை ஏற்படும். வன்முறை ஒடுக்கவிட்டால் பதவி விலகுங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

#BREAKING: டெல்லி வன்முறை ..! பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு..! ராணுவத்தை வரவழைக்க  கெஜிர்வால் கோரிக்கை .!

டெல்லி வடகிழக்கு பகுதியில் ஏற்பட்டுள்ள வன்முறையை கட்டுக்குள் கொண்டுவர ராணுவத்தை வரவழைக்க  வேண்டும் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜிர்வால் கோரிக்கை வைத்து உள்ளார். டெல்லி வடகிழக்கு பகுதியில் ஏற்பட்ட வன்முறையை டெல்லி போலீசாரால் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை எனவே வன்முறையை கட்டுக்குள் கொண்டுவர ராணுவத்தை வரவழைக்க  வேண்டும் என முதலமைச்சர் அரவிந்த் கெஜிர்வால் உள்துறை அமைச்சர் அமித் ஷா விற்கு கோரிக்கை வைத்து உள்ளார். மேலும் டெல்லியில் ஏற்பட்ட வன்முறையால் பலியானவர்களின் எண்ணிக்கை 18- ஆக இருந்த … Read more

டெல்லி வன்முறை..! உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்வு.!

நேற்று முன்தினம் டெல்லியில்  குடியுரிமை திருத்த சட்ட ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்களிடையே மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் நேற்று 13  பேர் உயிரிழந்தனர்.தற்போது மேலும் 5 பேர் உயிரிழந்தாக கூறியதால் பலியானவர்களின் எண்ணிக்கை 18- ஆக உயர்ந்துள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக பல மாநிலங்களில் பெரும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.கடந்த சில மாதங்களாக டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றனர். இந்த 2 … Read more

குடியுரிமை திருத்த சட்டதிற்கு இஸ்லாமியர்கள் சவப்பெட்டி சுமந்து எதிர்ப்பு.!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வாத்தியாப்பள்ளி அருகே திரண்ட ஏராளமான இஸ்லாமியர்கள் குடியுரிமை திருத்த சட்டதிற்கு எதிர்ப்பு தெரிவித்து  போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சவப்பெட்டி ஏந்தியும் இஸ்லாமியர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். மத்­திய அரசு கொண்டு வந்த தேசிய குடி­யு­ரிமை சட்ட திருத்த மசோ­தாவை எதிர்த்து நாடு முழு­வ­தும் பல்­வேறு அமைப்பினர் மற்றும் முஸ்­லீம் அமைப்­பி­னர் தினமும் போராட்­டங்­க­ளில் ஈடு­பட்டு வருகின்றனர். இந்நிலையில் கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே உள்ள வாத்தியாப்பள்ளி அருகே திரண்ட ஏராளமான இஸ்லாமியர்கள் குடியுரிமை … Read more

பாகிஸ்தான் வெல்க என்று முழக்கமிட்ட பெண் ! தேசத்துரோக வழக்கில் கைது,14 நாட்கள் நீதிமன்றக் காவல்

பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று  முழக்கமிட்ட பெண் தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டு 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  கர்நாடக மாநிலம் பெங்களூருவில்  குடியுரிமை திருத்த சட்டத்திற்கு  எதிர்ப்பு தெரிவித்து பேரணி நடைபெற்றது.இந்த பேரணியில்,அகில இந்திய மஸ்ஜிதே இத்திஹாதுல் முஸ்லிமீன் தலைவர் அசாதுதீன் ஒவைசி பங்கேற்றார்.இந்த பேரணியில் திடீரென பெண் ஒருவர் ஏறி மைக்கில் ,” பாகிஸ்தான் ஜிந்தாபாத்”(பாகிஸ்தான் வெல்க ) என்று முழக்கமிட்டார்.அந்த சமயத்தில் மேடையில் இருந்த ஓவைசி மேடையில் இருந்த அந்த … Read more

தூத்துக்குடியில் சற்று நேரத்தில் தொடங்க உள்ள மனித சங்கிலி போராட்டம் .!

சமீபகாலமாக மத்திய அரசின் குடியுரிமை சட்டம் , தேசிய மக்கள் பதிவேடு மற்றும் தேசிய குடியுரிமை பதிவேடு சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இன்று தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து சுமார் 2000 பேர் மனித சங்கிலி போராட்டத்தில் கலந்து கொள்ள உள்ளன. சமீபகாலமாக மத்திய அரசின் குடியுரிமை சட்டம் , தேசிய மக்கள் பதிவேடு மற்றும் தேசிய குடியுரிமை பதிவேடு சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றனர். இந்த … Read more

மாணவர்கள் மீது குண்டுவீசுவோம் -சர்ச்சையாக பேசிய ஹெச்.ராஜாவை கைது செய்யக்கோரி புகார்

போராடும் மாணவர்கள் மீது குண்டுவீசுவோம் என்று பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச்.ராஜா பேசினார். இந்த விவகாரத்தில் ஹெச்.ராஜாவை கைது செய்ய வேண்டும் என்று புகார் அளிக்கப்பட்டுள்ளது.   பாகிஸ்தான்,வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து மத அடிப்படையிலான துன்புறுத்தல்களால் வெளியேறி,இந்தியாவில் தஞ்சமைடைந்த முஸ்லிம்கள் அல்லாத பிற சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கும் வகையில் மத்தியில் உள்ள பாஜக அரசு குடியுரிமை திருத்த மசோதாவை கொண்டுவந்தது.இந்த சட்டம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றம் செய்யப்பட்ட நிலையில் குடியரசு … Read more

கேரள அரசு செய்ததை தமிழக அரசும் செய்ய வேண்டும்- மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப்பெற கோரி கேரள சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவந்தார் பினராயி விஜயன். தீர்மானம் கொண்டு வந்துள்ளது வரவேற்கத்தக்கது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  நேற்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் அனைத்து கட்சிக்கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் குடியுரிமை  திருத்த சட்டதிற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு  வர முடிவு செய்யப்பட்டது.  இதனையடுத்து இன்று குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப்பெற கோரி கேரள சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவந்தார் பினராயி விஜயன்.இதற்கு ஆதரவாக 138 … Read more