கேரளா 2023 நிகழ்ச்சியை துவங்கி வைத்தார் முதல்வர் பினராயி விஜயன்.! ஒரே மேடையில் கமல், லால், மம்முட்டி.!

Kerala 2023 - CM Pinarayi Vijayan - Kamalhaasan - Mammutty - Mohanlal

கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் இன்று முதல் ஒரு வார காலத்திற்கு ‘கேரளா 2023 (Keraleeyam 2023)’ எனும் நிகழ்வு கொண்டாப்படுகிறது. இந்த ஒரு வார காலம் திருவனந்தபுரத்தில் கேரளா பற்றிய பல்வேறு சிறப்புகளை வெளிப்படுத்தும் பல்வேறு நிகழ்ச்சிகள்,  கருத்தரங்குகள் நடைபெற உள்ளன. கேரளா 2023 (Keraleeyam 2023) விழாவினை அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் துவங்கி வைத்தார். திருவனந்தபுரத்தில் நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சிக்கு பல்வேறு அரசியல் பிரபலங்கள், திரை பிரபலங்கள், தொழிலதிபர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு … Read more

குண்டு வெடிப்பு சம்பவம்: கேரளாவில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம்!

Pinarayi Vijayan Blast

கேரளாவில் குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது. கேரளா மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள களமச்சேரி பகுதியில் கிறிஸ்தவ மத வழிபாட்டுத் தளத்தில், சுமார் 2000 பேர் கலந்து கொண்ட கூட்டத்தில், பயங்கர சத்தத்துடன் அடுத்தடுத்து 3 முறை குண்டுகள் வெடித்ததில் பலி எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது. மேலும், 5 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது எனவும், இந்த குண்டு வெடிப்பில் சிக்கி 52 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் 18 பேர் தீவிர … Read more

கேரளா குண்டுவெடிப்பு: அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அழைப்பு!

pinarayi vijayan

களமச்சேரி குண்டுவெடிப்பு சம்பவத்தை அடுத்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அழைப்புவிடுத்துள்ளார். குண்டுவெடிப்பு  கேரளா மாநிலம் கொச்சி அருகே உள்ள கமலசேரி பகுதியில் கிறிஸ்தவ பிரார்த்தனை கூட்டம் இன்று காலை நடைபெற்றது. 2,000 பேர் கலந்துகொண்ட இந்த கூட்டத்தில் பயங்கர சத்தத்துடன் அடுத்தடுத்து 3 முறை குண்டுகள் வெடித்தது பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இந்த குண்டுவெடிப்பின் சம்பவத்தில் 1 பெண் பரிதாபமாக உயிரிழந்தார் மேலும் 5 பேர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த … Read more

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நபர் தப்பிக்க கேரள முதல்வர் உதவி – ஸ்வப்னா சுரேஷ் குற்றசாட்டு

கேரளா முதல்வர் விஜயன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நபர் தப்பியோட உதவியதாக ஸ்வப்னா சுரேஷ் குற்றசாட்டு. தங்க கடத்தல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஸ்வப்னா சுரேஷ், கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை தொடர்ந்து முன்வைத்து வருகிறார். இந்த நிலையில், கேரளாவில் தங்க கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஸ்வப்னா சுரேஷ், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, சாட்டிலைட் போன் மூலம் பிடிபட்ட ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த ஒருவரை சட்டத்தில் இருந்து தப்பிக்க, முதல்வர் பினராயி விஜயன் … Read more

முல்லை பெரியாறு நீரை திறக்கக்கோரி கேரளா முதல்வர் கடிதம்!

முல்லை பெரியாறு அணையில் இருந்து திறந்து விடக்கோரி முதல்வர் ஸ்டாலினுக்கு, கேரளா அரசு கடிதம். முல்லை பெரியாறு அணையில் இருந்து நீரை திறக்கக் கோரி முதல்வர் முக ஸ்டாலினுக்கு, கேரளா முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார். முல்லை பெரியாறு அணை 137 அடியை கடந்த நிலையில், படிப்படியாக நீரை இப்போதிலிருந்தே திறக்க கோரிக்கை வைத்துள்ளார்.  தண்ணீரை திறக்கும் 24 மணிநேரத்திற்கு முன்னர் அறிவிப்பு கொடுக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார். நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழையை … Read more

உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கேரள முதலமைச்சர் கண்டனம்!

இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியை திணிக்க மத்திய அரசு முயற்சி செய்து வருவதாக கேரள முதலமைச்சர் குற்றசாட்டு. ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்தியை ஏற்குமாறு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதற்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார். நாட்டின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டுக்கு எதிரான வகையில் அமித் ஷாவின் கருத்து உள்ளது என குற்றசாட்டியுள்ளார். புதிய கல்வி கொள்கை மூலம் இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியை திணிக்க மத்திய அரசு முயற்சி செய்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். மத்திய … Read more

மரங்களை வெட்ட அனுமதி : கேரள முதல்வருக்கு தமிழக முதல்வர் நன்றி …!

பேபி அணைக்கு கீழே உள்ள 15 மரங்களை வெட்டுவதற்கு அனுமதி வழங்கியதற்கு கேரள முதல்வருக்கு நன்றி தெரிவித்து தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், முல்லைப் பெரியாறு அணையில் உள்ள பேபி அணைக்கு கீழே உள்ள பதினைந்து மரங்களை வெட்டுவதற்கு கேரள வனத் துறை அனுமதி வழங்கியுள்ளது குறித்து நீர்வளத் துறை அதிகாரிகள் மூலம் தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகத் தெரிவித்துள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், பேபி அணை மற்றும் மண் அணையை வலுப்படுத்த … Read more

23 – ஆம் தேதி வரை கேரளாவில் முழு ஊரடங்கு நீட்டிப்பு – முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு

கொரோனாவின் தீவிரத்தை மேலும் கட்டுப்படுத்தும் விதமாக வருகிற 23-ஆம் தேதி வரையில் முழு ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதாக கேரளா முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநில அரசுகள் தங்கள் மாநிலத்தில் உள்ள மக்களை பாதுகாப்பதற்காகவும், நோயின் தீவிரத்தை கட்டுப்படுத்துவதற்கும் கடந்த சில நாட்களாக முழு ஊரடங்கு அறிவித்துள்ளது. இந்நிலையில், கேரளாவில் கொரோனாவின் தாக்கம் அதிகம் உள்ளதால் … Read more

எங்களுக்கே ஆக்ஸிஜன் தேவை அதிகம் உள்ளது, பிற மாநிலங்களுக்கு கொடுக்க முடியாது- கேரள முதல்வர்!

கேரள மாநிலத்திற்கு ஆக்சிஜன் தேவை அதிகம் உள்ளதால் பிற மாநிலங்களுக்கு ஆக்சிஜன் கொடுப்பது சாத்தியமற்றது என கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் தனது தீவிரத்தை அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. குறிப்பாக கொரோனாவால் உயிரிழப்பவர்களை விட, தற்போதெல்லாம் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக உயிரிழப்போரின் எண்ணிக்கை தான் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில் கேரள மாநிலத்திலும் கொரோனாவின் தாக்கம் மிக அதிக அளவில் … Read more

கேரளாவில் முழு ஊரடங்கு…! அனைவருக்கும் இலவச உணவு….! – முதல்வர் பினராயி விஜயன்

கேரளாவில் முழு ஊரடங்கு நாட்களில், அனைத்து குடும்பங்களுக்கும் மற்றும் பணியாளர்களுக்கும் இலவசமாக உணவு வழங்கப்படும்.  இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து ஒவ்வொரு மாநிலங்களிலும் அம்மாநில அரசுகள் பல புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தி உள்ளது. இந்நிலையில் கேரளாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வரும் நிலையில், இன்று முதல் … Read more