சென்னையில் உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் தீ விபத்து!பி.எஸ்.என்.எல் சேவை பாதிப்பு

சென்னையில் உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சென்னை   மண்ணடியில்  பி.எஸ்.என்.எல் அலுவலகம் உள்ளது.இன்று காலை அங்கு தீ விபத்து ஏற்பட்டது.இந்த அலுவலகத்தில் உள்ள நான்கு தளங்களிலும் தீ பரவியுள்ளது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டனர்.மேலும்  இந்த தீ விபத்தானது மின் கசிவு காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் தீவிபத்தில் சர்வர்கள் சேதமடைந்துள்ளதால் சென்னையில் உள்ள திருவெற்றியூர்,துறைமுகம் மற்றும் பூக்கடை பகுதிகளில் பி.எஸ்.என்.எல் சேவை பாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆடி சலுகையாக பிஎஸ்என்எல் அறிவித்த அதிரடி அறிவிப்பு!

ஆடி மாத சலுகையாக பிஎஸ்என்எல் நிறுவனம் புதிய ஆஃப் ரை அறிமுகம் செய்து உள்ளது. ரூ .1,188-க்கு ரீசார்ஜ் செய்தால் ஒரு ஆண்டுக்கு அளவில்லா அழைப்புகளும் ,தினமும் 5 ஜிபி டேட்டா என பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவித்து உள்ளது. மருதம் திட்டத்தின் கீழ் ரூ .1,188-க்கு ரீசார்ஜ் செய்தால் ஒரு ஆண்டுக்கு அளவில்லா அழைப்புகளும் , தினமும் 5 ஜிபி டேட்டா மற்றும் 1,200 இலவச எஸ்எம்எஸ்-யும் வழங்கப்படும் என கூறியுள்ளது. இந்த சலுகை குறுகிய காலம் … Read more

நிதிநெருக்கடியில் பிஎஸ்என்எல் நிறுவனம்! மத்திய அரசு கைகொடுக்குமா?

பிஎஸ்என்எல் நிறுவனம் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. இந்த நிதி நெருக்கடியின் காரணமாக, அந்த நிறுவனத்தில் வேலை செய்யும் வேலையாட்களுக்கு ஜூன் மாத ஊதியத்தை கூட கொடுக்க முடியாத அளவுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, இந்த நிறுவனம் ஜூன் மாத ஊதியம் கொடுக்கவும், இந்நிறுவனம் தொடர்ந்து இயங்கவும் உடனடியாக 850 கோடி ரூபாய் தேவைப்படுவதாக மத்திய அரசிடம் கோரிக்கை  வைத்துள்ளது. மேலும், இந்நிறுவனம் தொடர்ந்து சீராக இயங்குவதற்கு 13 ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படுவதாக தெரிவித்துள்ளது. … Read more

தரைவழி இணைப்பு பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு இலவச இணையதள வசதி பி.எஸ்.என்.எல். அறிவிப்பு !!!

இந்த வசதியை பெறுவதற்கு இணைப்பு கட்டணம் எதுவும் தேவையில்லை. இந்த சலுகையின் மூலம் தினமும்  5 ஜி.பி. டேட்டாக்களை பதிவிறக்கம் செய்யலாம். 18003451504 என்ற எண்ணில் அழைத்து இந்த இணையதள வசதியை பெற்றுக்கொள்ளலாம். அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல். தனது வாடிக்கை யாளர்களுக்கு அதிரடி சலுகைகளை அறிவித்து வருகிறது. இந்நிலையில்  தரைவழி இணைப்பு பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு இலவச இணையதள வசதியை நேற்று அறிமுகம் செய்தது. தரைவழி இணைப்பு பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு இந்த இலவச அதிவேக பிராட்பேண்ட் வசதியை … Read more

லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வந்து இறங்கும் பிஎஸ்என்எல்(BSNL)..! என்ன ஸ்பெஷல்னு தெரியுமா?

பலவித இணைய சேவைகள் இன்றளவில் இருந்தாலும் சிறப்பான சேவையை தருவோரை தான் மக்கள் பெரிதும் நாடுகின்றனர். ஒரு சில இணைய சேவைகள் சிறப்பான முறையில் மக்களுக்கு உதவுகின்றன. ஆனால்,சில சேவைகள் அந்த அளவிற்கு தரமான சேவைகளை நமக்கு தருவதில்லை. அதே போன்று நகரத்தில் இருக்க கூடிய மக்களுக்கு மட்டும் சேவையை வழங்குவதும் சரியல்ல. கிராம மக்களுக்கும் சென்றடையும் வகையில் இந்த சேவையை வழங்கினால் அதுவே மிக சிறப்பான நிறுவனமாகும். இப்படிப்பட்ட வகையில் மக்களின் மனதில் நீங்கா இடத்தை … Read more

ஏர்செல்லை போல முடங்கும் நிலையில் பிஎஸ்என்எல்!!ரூ.31.287 கோடி நஷ்டம்!!

பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் மூடு விழாவை நோக்கி செல்கிறது. ரூ.50 ஆயிரத்துக்கும் அதிகமான கடன் நெருக்கடி காரணமாக முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்செல் தேசிய கடன் தீர்ப்பாயத்தில் திவால் மனுத் தாக்கல் செய்தது. இதை அந்த தீர்ப்பாயமும் ஏற்றுக்கொண்டது. இதையடுத்து ஏர்செல் வாடிக்கையாளர்கள் வேறு தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு மாறிக்கொள்ள தொலைத்தொடர்பு ஒழுங்கு நிறுவனமான டிராய் கால அவகாசம் அளித்தது. இதில் ஏர்செல் வாடிக்கையாளர்கள் லட்சக்கணக்கானோர் தங்கள் செல்போன் எண்ணை போர்டல் முறையில் பிஎஸ்என்எல், ஏர்டெல் நிறுவனத்துக்கு மாறினர். தற்போது … Read more

வடிக்கையாளர்களை கவர புதிய திட்டங்களுடன் களமிறங்கும் பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட்….!!! வாடிக்கையாளர்களுக்கு கிடைத்த வாழ்வு…!!! புதிய சலுகைகள் அறிவிப்பு…!!!

 இந்தியஅசு பொதுத்துறை  நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிட்டெட் எனும் பி.எஸ்.என்.எல். நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த ரூ.399 சலுகை தற்போது  மாற்றப்பட்டுள்ளது. அதன்படி ரூ.399 சலுகையில் பயனர்களுக்கு தினமும் 3.21 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது.முன்னதாக கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் பி.எஸ்.என்.எல். நிறுவனம் ரூ.399 விலை சலுகையை அறிவித்தது. இச்சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், இலவச பிரத்யேக ரிங் பேக் டோன் உள்ளிட்டவை 74 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்குகிறது. இதன்படி பயனர்களுக்கு மொத்தம் … Read more

பி.எஸ்.என்.எல்லில் 4ஜி சேவை தொடங்குவதற்கான பாதி செலவை ஏற்க மத்திய அரசு முடிவு..!!

பி.எஸ்.என்.எல். நிறுவனம் 4ஜி சேவையை தொடங்குவதற்கான செலவின் பாதித் தொகையை ஏற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள், 5ஜி சேவையை தொடங்கும் பணிகளில் ஆயத்தமாகி வருகின்றன. அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் இன்னும் 3ஜி சேவையை மட்டுமே வழங்கி வருகிறது. இதனால், தனியார் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை எளிதாக கவர்ந்து செல்கின்றன. இந்நிலையில், 4ஜி சேவையை பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டுக்கான பெரும் தொகையை அந்நிறுவனத்தால் தனியாக செலுத்த முடியாது என்பதால், … Read more

ஜியோக்கு போட்டியாக அதிரடி சலுகைகளை அறிவித்துள்ள ஏர்டெல், பிஎஸ்என்எல், வோடோஃபோன்!!!

இந்திய தொலைதொடர்பு கட்டுபாட்டுதுறையான (TRAI) சமீப்த்தில் ஓர் அறிவிப்பை அறிவித்துள்ளது. அதன்படி, மாதம்.குறைந்தபட்சம் குறிப்பிட்ட தொகையை ரீசார்ச் செய்யாத வாடிக்கையாளர்களின் இன்கம்மிங் கால்களை நிறுத்தியுள்ளதாக வந்த புகாரின் பெயரில், இனி அந்த.மாதிரி முன்னறிவிப்பின்றி செய்யகூடாது என்றும், இன்கம்மிங்கை கட் செய்யும் முன் 75 நாட்களுக்கு முன்னரே எஸ்எம்எஸ் மூலம் தெரிவிக்க வேண்டும் என்று கூறியது. இன்று பிஎஸ்என்எல், ஏர்டெல், வோடபோன் ஆகிய நிறுவனங்கள் புதிய ஆஃபர்கள் அறிவித்துள்ளன. அதன்படி, பிஎஸ்என்எல் தனது புதிய வாடிக்கையாளர்களுக்கு 299 ரூபாய்கு … Read more

நாகர்கோவில் பி.எஸ்.என்.எல் அலுவலர்கள் போரட்டம்..

நாகர்கோவில் பிஎஸ்என்எல்   ஒப்பந்த ஊழியர்களுக்கு  ஏப்ரல் மாதச் சம்பளம் வழங்காத ஒப்பந்ததாரரை கண்டித்தும், இஎஸ்ஐ, பி.எப் முறையாக  அமல்படுத்தாத  ஒப்பந்தாரரை  கண்டித்தும், இதுபோன்ற ஒப்பந்த தாரர்கள் மீது  நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும்,  பிஎஸ்என்எல் ஊழியர்கள் சங்கம் மற்றும்  தமிழ்நாடு தொலைத் தொடர்பு சங்கம் ஆகியன இணைந்து, ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தை நாகர்கோவில் பிஎஸ்என்எல் பொதுமேலாளர் அலுவலகம் முன்பு  நடத்தினார்கள்.