BSNL செலவை குறைக்க 20,000 ஒப்பந்த ஊழியர்களை நீக்க அந்நிறுவனம் திட்டம்.!

பிஎஸ்என்எல் நிறுவனம் 20,000 ஒப்பந்த ஊழியர்களை நீக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் கூறப்படுகிறது. அரசின் மிகப்பெரிய பொதுத்துறை தொலைதொடர்பு நிறுவனங்களில் ஒன்று பிஎஸ்என்எல். சமீபத்தில் சம்பள செலவுகளை குறைக்க, மத்திய அரசு ஒய்வு வயது நெருங்கியவர்களுக்கு விருப்ப ஓய்வு (விஆர்எஸ்) அளிக்க முடிவு செய்ததை அடுத்து 92,000க்கும் மேற்பட்டோர் விருப்ப ஓய்வு பெற்றனர். தற்போது மீண்டும் ஒப்பந்த பணிகளின் செலவை குறைக்க பிஎஸ்என்எல் நிறுவனம் 20,000 பேரை வீட்டுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாக பிஎஸ்என்எல் ஊழியர் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். … Read more

இந்தியா – சீனா மோதல்! பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி டெண்டரை ரத்து செய்தது!

பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி டெண்டரை ரத்து செய்தது. கல்வான் பள்ளத்தாக்குப்பகுதியில் இந்திய, சீன ராணுவத்தினருக்கு இடையே நடந்த மோதலில் 20 இந்திய ராணுவவீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இந்த சம்பவத்துக்குப்பின் இந்தியாவில், சீனாவுக்கு எதிரான மனநிலை வலுத்து வருகிறது. இந்நிலையில், சீனாவைச் சேர்ந்த 59 செல்போன் செயலிகளுக்கு அதிரடியாக தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டது.  இதனைத்தொடர்ந்து, பிஎஸ்என்எல் 4ஜி தர சேவை மேம்பாட்டுக்கான ஒப்பந்தத்தில் பல்வேறு சீன தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கோரப்பட்டு இருந்த நிலையில், மத்திய … Read more

வாடிக்கையாளர்களுக்கு மீண்டும் சலுகை அளித்த பிஎஸ்என்எல்.!

மே 5ஆம் தேதி வரையில் பி.எஸ்.என்.எல் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு இன்கமிங் கால் இலவசமாக வந்துவிடும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், அத்யாவசிய கடைகள் தவிர மற்ற ரீசார்ஜ் கடைகள் எதுவும் இல்லாததால் பி.எஸ்.என்.எல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய அறிவிப்புகளை தெரிவித்துள்ளனர். ஏற்கனவே தனது வாடிக்கையாளர்களுக்கு ஊரடங்கு முடியும் வரையில் இன்கமிங் கால் வேலிடிட்டி இலவசம் என பி.எஸ்.என்.எல் நிறுவனம் அறிவித்திருந்தது. தற்போது ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் … Read more

BSNL-ஐ தொடர்ந்து வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளை அறிவித்தது ஏர்டெல்.!

கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்கள் மட்டுமே பொதுமக்களுக்கு கிடைக்கும் வகையில் கடைகள் திறந்திருக்கின்றன.  இதனை பொருட்டு அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகை அளித்துள்ளது. அதன்படி, வரும் ஏப்ரல் 20ஆம் தேதி வரை இன்கமிங் கால் இலவசம் எனவும், 10 ருபாய் இலவச டாக்டைமும் கிடைக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் துணை  நிறுவனமான எம்டிஎன்எல் நிறுவனமும் இந்த சலுகையை தெரிவித்துள்ளது. … Read more

ஒரு மாதத்திற்கு இலவச பிராட்பேண்ட் சேவை வழங்கப்படும் – பிஎஸ்என்எல் அதிரடி அறிவிப்பு.!

சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா என்ற கொவிட் 19 வைரஸ் அந்நாட்டை விட்டு சற்று விளங்கியுள்ளது. இந்த வைரஸ் தற்போது இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இதன் விளைவு காரணமாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிவர்களை வீட்டில் இருந்து வேலை பார்க்குமாறு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.  இந்த நிலையில் வீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக ஒரு மாதத்துக்கு இலவச … Read more

நம்பமுடியாத பல சலுகைகளை அறிவித்த பி.எஸ்.என்.எல். நிறுவனம்…

பி.எஸ்.என்.எல். நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு தற்போது  ரூ. 247 விலையில் புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய பிரீபெயிட் சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 3 ஜி.பி. டேட்டா உள்ளிட்டவை 30 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த புதிய சலுகை மட்டுமின்றி பி.எஸ்.என்.எல். ரூ. 998 சலுகையின் வேலிட்டி மாற்றப்பட்டுள்ளது. இத்துடன் பி.எஸ்.என்.எல். ரூ. 1999 சலுகையில் இரோஸ் நௌ சந்தா இரண்டு மாதங்களுக்கு வழங்கப்படுகிறது. இது மார்ச் 10-ம் தேதி முதல் புதிய மாற்றங்கள் அமலான … Read more

ஒரே நாளில் 78,000க்கும் மேற்பட்ட பிஎஸ்என்எல் ஊழியர்கள் விருப்ப ஓய்வு.!

மத்திய அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கிவரும் நிலையில், அதன் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் 1 லட்சத்து 53 ஆயிரத்து 786 பேர் பணியாற்றிய நிலையில், 78569 பேர் இன்று விருப்ப ஓய்வு பெறுகின்றனர். மத்திய அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கிவரும் நிலையில், அதன் ஊழியர்களுக்கு அந்நிறுவனம் விருப்ப ஓய்வு திட்டம் அறிவித்துள்ளது. இதையடுத்து அந்த விருப்ப ஓய்வு பெற ஆயிரக்கணக்கான … Read more

‘இரண்டு புதிய ஆஃபர்’.! 50GB டேட்டா நொடிக்கு 20MB வேகம் பிரபல நிறுவனத்தின் அதிரடி சலுகை..!

பி.எஸ்.என்.எல் நிறுவனம் மாத சலுகை முறையில் ரூ.299, ரூ.491 விலையில் இரண்டு புதிய சலுகைகளை அறிவித்துள்ளது. இந்த சலுகை புதிதாக பிராட்பேண்ட் இணைப்பு மற்றும் பிராட்பேண்ட சேவையை பெற நினைக்கும் லேண்ட்லைன் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பி.எஸ்.என்.எல் நிறுவனம் மாத சலுகை முறையில் ரூ.299, ரூ.491 விலையில் இரண்டு புதிய சலுகைகளை அறிவித்துள்ளது. இந்த சலுகை புதிதாக பிராட்பேண்ட் இணைப்பு மற்றும் பிராட்பேண்ட சேவையை பெற நினைக்கும் லேண்ட்லைன் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி … Read more

பிஎஸ்என்எல் விருப்ப ஓய்வு -78,000-க்கும் மேற்பட்டோர் விருப்ப ஒய்வு கேட்டு விண்ணப்பம் ?

கடந்த சில மாதங்களாகவே பொதுத்துறை நிறுவனங்களான பிஎஸ்என்எல் (BSNL) மற்றும் எம்டிஎன்எல் (MTNL)  நிறுவனங்கள் கடும் நஷ்டத்தில் இயங்கி வருகிறது.இதனை ஈடு செய்யும் விதமாக ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு அளிக்க முடிவு செய்யப்பட்டது.அதன்படி நவம்பர் 4-ஆம் தேதி முதல் ஊழியர்கள் விருப்ப ஒய்வு பெற திட்டம் தொடங்கப்பட்டது.நேற்றுடன் இதற்கான திட்டம் முடிவடைந்தது. இந்த விருப்ப ஒய்வு திட்டத்தின் படி கிட்டத்தட்ட 92700 ஊழியர்களுக்கு மேல் விருப்ப ஓய்வு பெற முடிவு செய்துள்ளனர். பிஎஸ்என்எல் (BSNL) 78300 ஊழியர்களும்,எம்டிஎன்எல் (MTNL) … Read more

BSNL வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி ! 4G சேவை அறிமுகம் !

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார். அப்போது அவர் அரசுக்கு சொந்தமான ‘பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்’ மற்றும் ‘மகாநகர் தொலைபேசி நிகாம் லிமிடெட்’ ஆகிய தொலைத் தொடர்பு நிறுவனங்களை புதுப்பிப்பதற்கான திட்டத்திற்கும் பி.எஸ்.என்.எல் நிறுவனம் 4ஜி சேவையை வழங்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளதாக அறிவித்துள்ளார். அரசு நிறுவனங்களுக்கு 14ஆயிரம் கோடி ரூபாயும், பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு 10 ஆயிரம் … Read more