‘இரண்டு புதிய ஆஃபர்’.! 50GB டேட்டா நொடிக்கு 20MB வேகம் பிரபல நிறுவனத்தின் அதிரடி சலுகை..!

‘இரண்டு புதிய ஆஃபர்’.! 50GB டேட்டா நொடிக்கு 20MB வேகம் பிரபல நிறுவனத்தின் அதிரடி சலுகை..!

  • பி.எஸ்.என்.எல் நிறுவனம் மாத சலுகை முறையில் ரூ.299, ரூ.491 விலையில் இரண்டு புதிய சலுகைகளை அறிவித்துள்ளது.
  • இந்த சலுகை புதிதாக பிராட்பேண்ட் இணைப்பு மற்றும் பிராட்பேண்ட சேவையை பெற நினைக்கும் லேண்ட்லைன் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பி.எஸ்.என்.எல் நிறுவனம் மாத சலுகை முறையில் ரூ.299, ரூ.491 விலையில் இரண்டு புதிய சலுகைகளை அறிவித்துள்ளது. இந்த சலுகை புதிதாக பிராட்பேண்ட் இணைப்பு மற்றும் பிராட்பேண்ட சேவையை பெற நினைக்கும் லேண்ட்லைன் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ரூ.299 பிராட்பேண்ட் சலுகையில் 50GB டேட்டா நொடிக்கு 20Mb வேகத்தில் இணைய சேவை வழங்கப்படுகிறது. 50GB டேட்டா தீர்ந்தவுடன் டேட்டா வேகம் 1Mb-ஆக குறைக்கப்பட்டுவிடும்.

மேலும் அனைத்து நெட்வொர்க் எண்களுக்கும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கப்படுகிறது. இந்த சலுகை 6 மாத வேலிடிட்டி கொண்டிருக்கிறது. அதன் பின்னர் ரூ.399 சலுகையை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தலாம் இதில் தினமும் 2GB டேட்டா நொடிக்கு 8Mb வேகத்தில் வழங்கப்படுகிறது.

அதை தொடர்ந்து ரூ.491 பிராட்பேண்ட் சலுகையில் 120GB டேட்டா நொடிக்கு 20Mb வேகத்தில் வழங்கப்படுகிறது. முந்தைய சலுகையை போன்றே டேட்டா தீர்ந்ததும் நொடிக்கு 1Mb-ஆக குறைக்கப்படும். மேலும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கப்படுகிறது. இந்த சலுகை 6 மாதத்திற்கு வழங்கப்படுகிறது. அதன் பின்னர் வாடிக்கையாளர்கள் ரூ.499 சலுகையை பயன்படுத்தலாம். இதில் தினமும் 3GB டேட்டா வழங்கப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube