கன மழையால் வழுக்கும் சாலையில் சறுக்கி செல்லும் பேருந்து வைரலாகும் வீடியோ

பெங்களூரில் கன மழைக்கு மத்தியில் வழுக்கும் சாலையில் சறுக்கிய வோல்வோ பேருந்து. கனமழைக்கு மத்தியில் பெங்களூரு-மைசூரு விரைவு சாலையில் வால்வோ பேருந்து கட்டுப்பாடின்றி சறுக்கி செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே ஒரு டிரக் விபத்துக்குள்ளாகி கிடக்கும் நிலையில், பேருந்து கட்டுப்பாடு இல்லாமல் தாறுமாறாக சறுக்குவதைக் இந்த வீடியோவில் காணலாம். கர்நாடகாவில் ஞாயிற்றுக்கிழமை முதல் பெய்த கனமழையால் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். When u travel in B’lore🔄Mysore new highway Road make … Read more

பெங்களூரில் ஐடி நிறுவனங்கள் மற்றும் வங்கி நிறுவனங்களுக்கு ஒரே நாளில் ₹225 கோடி நஷ்டம்!!

கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால், அவுட்டர் ரிங் ரோடு (ஓஆர்ஆர்) பகுதியில் உள்ள ஐடி நிறுவனங்கள் மற்றும் வங்கி நிறுவனங்களுக்கு ₹225 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக, அவுட்டர் ரிங் ரோடு கம்பெனிகள் சங்கம் (ஓஆர்ஆர்சிஏ) தெரிவித்துள்ளது. ஓஆர்ஆர் இல் உள்ள IT நிறுவனங்கள் ஒவ்வொரு ஆண்டும் $22 பில்லியன் வருவாய் ஈட்டுகின்றன, இது பெங்களூரின் மொத்த IT வருவாயில் 32% ஆகும். ஓஆர்ஆர் இல் உள்ள மோசமான உள்கட்டமைப்பு, இங்கு அமைந்துள்ள … Read more

பேமெண்ட் சேவை நிறுவனத்தில் ஹேக்கர்கள் கைவரிசை.. ரூ.7.38 கோடி திருட்டு!

பெங்களுருவில் பேமெண்ட் கேட்வே நிறுவனமான ரேஸர்பேயில் இருந்து ரூ.7.38 கோடி பணத்தை திருடிய ஹேக்கர்கள். பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பேமெண்ட் சேவை நிறுவனமான ரேஸர்பே-வில் (Razorpay) ஹேக்கர்கள் தங்களது கைவரிசையைக் காட்டி சுமார் 7.3 கோடி ரூபாயை திருடியுள்ளனர். ஹேக்கர்கள் மற்றும் மோசடி வாடிக்கையாளர்கள் சுமார் 831 தோல்வியுற்ற பரிவர்த்தனைகளை அங்கீகரிப்பதற்காக Razorpay மென்பொருளின் அங்கீகார செயல்முறையையே (authorisation process) திருடி சுமார் 7.38 கோடி ரூபாயை திருடியுள்ளனர் என்று பேமெண்ட் கேட்வே நிறுவனம் அளித்த … Read more

மண் வளப் பாதுகாப்பு குறித்து 420 கி.மீ சைக்கிளில் விழிப்புணர்வு பேரணி!

பெங்களூருவில் இருந்து கோவை வருகை: மண் வளப் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக 27 தன்னார்வலர்கள் பெங்களூருவில் இருந்து சுமார் 420 கி.மீ சைக்கிளில் பயணித்து இன்று (ஏப்ரல் 15) கோவை வந்தடைந்தனர். ’பெடல் புஸ்ஸர்ஸ்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த குழுவில் முன்னாள் ராணுவ வீரர்கள், ஐ.டி நிறுவன ஊழியர்கள், மருத்துவ துறையைச் சேர்ந்தவர்கள் என பல தரப்பினர் இடம்பெற்றுள்ளனர். சத்குரு தொடங்கியுள்ள மண் காப்போம் இயக்கத்திற்கு ஆதரவாக இந்த விழிப்புணர்வு பேரணியை அவர்கள் மேற்கொண்டனர். … Read more

ஹிஜாப் வழக்கில் இன்று தீர்ப்பு – 144 தடை;பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை!

கர்நாடகா மாநிலத்தில் முன்னதாக அரசுப்பள்ளி ஒன்றில் ஹிஜாப் அணிந்து பள்ளிக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இதனையடுத்து,ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்ததை எதிர்த்து முஸ்லிம் மாணவிகள் போராட்டம் நடத்தினர்.இதனைத் தொடர்ந்து, முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்துவந்தால் நாங்கள் காவித்துண்டு அணிந்து வருவோம்’ என இந்து மாணவ, மாணவிகள் எதிர் போராட்டம் நடத்தினர்.அதன்பின்னர்,ஹிஜாப்புக்கு ஆதரவாக மற்றும் எதிராகவும் போராட்டங்கள் வெடித்தன. இதனையடுத்து,முஸ்லிம் மாணவிகள் சார்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.அந்த வழக்கு விசாரணைக்கு விசாரணை முடியும் வரை ஹிஜாப் … Read more

பரபரப்பு…சிறையில் சொகுசு வசதி – சசிகலா உட்பட 6 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்!

பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்தபோது சொகுசு வசதிகளைப் பெறச் சிறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் சசிகலா,இளவரசி ஆகியோர் மற்றும் லஞ்சம் பெற்ற சிறை அதிகாரிகள் உட்பட 6 பேருக்கு எதிராக கர்நாடகா ஊழல் தடுப்பு படை காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு பெங்களூரு அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்ட சசிகலா 4 ஆண்டுகள் தண்டனைக்காலத்திற்கு பிறகு கடந்த ஆண்டு ஜனவரி மாதம் விடுதலை ஆகி வெளியே வந்தார். இதனையடுத்து, சிறையில் … Read more

ராஜேந்திர பாலாஜியை பிடிக்க பெங்களூரு விரைந்தது தனிப்படை!

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய பெங்களூரு விரைந்தது தனிப்படை. அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய பெங்களூரு விரைந்தது தனிப்படை காவல்துறையினர். ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.3 கோடி பணமோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. ராஜேந்திர பாலாஜி பெங்களுருவில் இருப்பதாக தகவல் வெளியான நிலையில், தனிப்படை விரைந்துள்ளது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரிய ராஜேந்திர பாலாஜியின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி … Read more

#HelicopterCrash:பெங்களூரு அழைத்துச் செல்லப்படும் கேப்டன் வருண் சிங்!

நீலகிரி:ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிருடன் மீட்கப்பட்ட கேப்டன் வருண் சிங் அவர்கள் உயர் சிகிச்சைக்காக பெங்களூரு அழைத்துச் செல்லப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குன்னூர் அருகே நேற்று நடந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில்,அதில் பயணித்த 14 பேரில் முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.மேலும்,விபத்தில் சிக்கி தற்போது உயிரோடு உள்ள ஒரே ராணுவ அதிகாரி கேப்டன் வருண் சிங் 80 சதவிகித காயங்களுடன் வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் … Read more

#IPL 2021: பெங்களூருக்கு எதிரான போட்டியில் 164 ரன்கள் எடுத்த டெல்லி!

ஐபிஎல் தொடரின் இறுதி லீக் ஆட்டத்தில் பெங்களூருக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 5 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்துள்ளது. இன்றைய ஐபிஎல் தொடரின் 56-வது லீக் போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், டெல்லி கேபிடல்ஸ் ஆகிய இரு அணிகள் விளையாடி வருகிறது. அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் ஸ்டேடித்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய டெல்லி அணியின் தொடக்க வீரர்களான … Read more

பெங்களூருவில் இன்றும் நாளையும் தண்ணீர் விநியோகம் தடை – எந்தெந்த பகுதிகளில் தெரியுமா…?

பெங்களூருவில் இன்றும் நாளையும் பழுது பார்க்கும் பணி காரணமாக தண்ணீர் விநியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  பெங்களூருவில் டிரான்ஸ்மிஷன் மெயின் பம்பிங் ஸ்டேஷனில் கசிவுகளைத் தடுப்பதற்கான பழுது பார்க்கும் பணிகள் நடைபெற இருப்பதால் ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கள்கிழமை ஆகிய இரு நாட்கள் தண்ணீர் விநியோகம் தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு நீர் மற்றும் கழிவுநீர் வாரியத்தின் கீழ் உள்ள  காவிரி மூன்றாம் கட்டப் பகுதியான டி.கே. ஹள்ளி பகுதியில் தான் அதிகளவில் தண்ணீர் வழங்குவதில் … Read more