கண்டிப்பா மாற்றம் இருக்கு… வெறுப்புக்கு எதிராக நான் வாக்களித்தேன் – பிரகாஷ் ராஜ்

Prakash Raj

Election2024: வெறுப்பு அரசியலுக்கு எதிராக நான் வாக்களித்து உள்ளேன் என்று நடிகர் பிரகாஷ்ராஜ் பேட்டியளித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான இரண்டாம் வாக்குப்பதிவு இன்று 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி, கேரளா, கர்நாடகா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், அசாம், பீகார், சத்தீஸ்கர், மேற்கு வங்கம், ஜம்மு காஷ்மீர் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளில் வாக்குப்பதிவு இன்று தொடங்கியுள்ளது. இதனால் அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் … Read more

பெங்களூரில் 150 அடி தேர் திடீரென சாய்ந்து விபத்து.!

TempleChariotFestival

Bangalore: கர்நாடகாவில் கோயில் திருவிழாவில் மிகப்பெரிய தேர் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.  பெங்களூரு அருகே ஹூஸ்கூர் கிராமத்தில் உள்ள மதுரம்மா தேவி கோயில் தேர் திருவிழாவில் 150 அடி உயர தேர் சாய்ந்து விபத்துக்குள்ளானது. பக்தர்கள் வடம்பிடித்து இழுத்துக் கொண்டிருந்தபோது ஒரு பக்கமாக சாய்வதை பார்த்து பக்தர்கள் உடனடியாக ஓடியதால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. அதிர்ஷ்ட வசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. விபத்து தொடர்பான காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பரபரப்பு…கர்நாடகாவில் முக்கிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்.!

Bomb thread in Chennai Schools

Bomb Threat: கர்நாடக அரசுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. பெங்களூருவின் முக்கிய இடங்களில் உள்ள உணவகங்கள், கோயில்கள், பேருந்துகள் போன்றவற்றில் வெடிகுண்டு வெடிக்கும் அந்த மின்னஞ்சலில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. READ MORE – உயர்நீதிமன்ற நீதிபதி ராஜினாமா..! பாஜகவில் இணையவுள்ளதாக அறிவிப்பு மேலும் அதில், குண்டுவெடிப்பைத் தவிர்க்க ரூ.20 கோடி வேண்டும் என்று கூறப்பட்டிருந்ததாக சொல்லப்படுகிறது. முதலமைச்சர், உள்துறை அமைச்சர், காவல்துறை தலைவர் ஆகியோருக்கு மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது, கர்நாடக போலீஸார் … Read more

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு.! என்ஐஏ வசம் ஒப்படைப்பு.!

NIA

Rameshwaram Cafe – கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பிரபலமாக செயல்பட்டு வரும் உணவகங்களில் ஒன்றான ராமேஸ்வரம் கஃபேவில் கடந்த மார்ச் 1ஆம் தேதி வெடிகுண்டு வெடித்த விபத்தில் 10 பேர் காயமடைந்தனர். சிசிடிவி காட்சிகள் மூலம், 29-30 வயது கொண்ட ஒரு நபர் ஒரு பையை உணவகத்தில் வைத்துவிட்டு பின்னர் அங்கிருந்து சென்றது தெரியவந்தது. Read More – நெருங்கும் தேர்தல்.! மீண்டும் மீண்டும் தமிழகத்தில் பிரதமர் மோடி…  அந்த நபர் அங்கிருந்து சென்ற சில நிமிடங்களில் … Read more

பெங்களூரு: தாயை கொன்றுவிட்டு காவல்நிலையத்தில் சரணடைந்த மகன்!

crime scene

பெங்களூரு: கேஆர் புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பீமியா லேஅவுட்டில் நேற்று காலை 40 வயது (தாய்) பெண் தனது இளம் (வயது 17) மகனால் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உயிரிழந்த பெண் கோலார் மாவட்டம் முல்பாகல் பகுதியைச் சேர்ந்த நேத்ரா என காவல்துறையால் அடையாளம் காணப்பட்டது. தகராறு காரணமாக டிப்ளமோ படித்துவரும் இளைஞன், அவரது தாய் நேத்ராவை இரும்பு கம்பி கொண்டு தலையில் பலமாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதன்பின், காவல் நிலையத்திற்கு சென்று … Read more

பெங்களூருவில் தொடங்கிய பாஜக மாநில செயற்குழு கூட்டம் ..!

bjp

பெங்களூருவில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டம் பெங்களூரு அரண்மனை மைதானத்தில் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெற்றவுள்ளது. கர்நாடக மாநில தலைவர் விஜயேந்திரா தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் மத்திய அமைச்சர் பூபேந்திர யாதவ் கலந்து கொள்ளவதாக பாஜக மாநில பொதுச்செயலாளர் ராஜீவ் ஏற்கனவே தெரிவித்து இருந்தார். இந்நிலையில், பெங்களூரு அரண்மனை மைதானத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் தொடங்கியது. மத்திய அமைச்சர்கள் … Read more

திருச்சி – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து கவிழ்ந்து விபத்து.!

அரசு சொகுசு பேருந்து ஒன்று பெங்களூருவில் இருந்து வருகையில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டுள்ளது. பெங்களூரில் இருந்து அரசு பேருந்து வருகையில்,திருச்சி – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் வளைவில் திரும்புகையில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் நல்லவேளையாக உயிர்ச்சேதம் எதுவும் இதுவரை பதிவாகவில்லை. பேருந்தில் பயணித்த 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.  

1000 சான்றிதழ்கள்.. போலி முதுகலை.. பி.எச்டி பட்டங்கள்… பெங்களூருவில் சிக்கிய மோசடி கும்பல்.!

பெங்களூருவில் ஒரு தொலைதூர கல்வி நிலையத்தில் போலியாக முதுகலை, பிஎச்டி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.  போலி சான்றிதழ் , போலி பட்டம் என்று உலா வந்து, தற்போது புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களின் பெயர்களில் முதுகலை பட்டம், பி. எச்டி பட்டம் வரையில் வந்துவிட்டது.  அதுவும் தொலைதூர கல்வி வழங்கும் ஒரு கல்வி நிலையத்தில் தான்  இந்த மோசடிகள் அரங்கேறியுள்ளன. அங்கு அண்மையில் அரசு அதிகாரிகள் நடத்திய சோதனையில் 1000 போலி சான்றிதழ்கள், முத்திரைகள் ஆகியவை கண்டறியப்பட்டன.  … Read more

டெலிகிராம், வாட்ஸாப் மூலம் புதுப்புது போதை வஸ்துக்கள்… பெங்களூரு மாணவர்கள் அட்டகாசம்.!

போதைப்பொருட்களுக்கு எதிரான சோதனையின் போது பெங்களூருவில் 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் பல்வேறு விதமான போதை வஸ்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.  இந்தியாவில் போதைப்பொருள் கலாச்சாரம் சற்று அதிகரித்து வருவதை காண முடிகிறது. அதற்கு சாட்சியாக முன்பில்லாத அளவுக்கு பல்வேறு இடங்களில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தி போதைப்பொருள்களை கைப்பற்றி சம்பந்தப்பட்டவர்களை கைது செய்தும் வருகின்றனர். இந்த போதை வஸ்துக்களை பயன்படுத்துவது பெரும்பாலும் படிக்கும் மாணவர்களும், படித்த இளைஞர்களும் என்பது வேதனைக்குரிய செய்தியாகும். அப்படித்தான் … Read more

பெங்களூரில் கட்டிட மேற்கூரை இடிந்து விழுந்ததில் 2 தொழிலாளர்கள் பலி, 3 பேர் காயம்

செவ்வாய்க்கிழமை அதிகாலையில் பெங்களூருவின் சில பகுதிகளில் பெய்த கனமழையால், மகாதேவபுராவில் உள்ள ஹூடி வட்டம் அருகே,கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்தனர் மற்றும் மூன்று பேர் காயமடைந்துள்ளனர். “செவ்வாய்கிழமை அதிகாலை 5:30 மணியளவில் சம்பவம் நடந்தாலும், மற்ற தொழிலாளர்கள் அந்த இடத்திற்குச் சென்றபோதுதான் தெரிய வந்தது” என்று போலீஸார் தெரிவித்தனர். “கனமழை பெய்ததால், அவர்கள் தரை தளத்தில் தூங்கினர்,” அப்பொழுதுதான் இந்த விபத்து நடந்ததுள்ளது  என்று போலீசார் மேலும் தெரிவித்தனர்.