கடன் செயலியின் முகவர்களின் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட தம்பதி!!

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள ராஜமுந்திரியைச் சேர்ந்த தம்பதியினர் நேற்று கடன் செயலியின் முகவர்களின் தொல்லையால் தற்கொலை செய்துகொண்டனர். துர்காராவ் மற்றும் ரம்யா லட்சுமி தம்பதியினர் வெவ்வேறு கடன் செயலிகளில் கடன் பெற்றதாகவும், அந்தத் தொகையைத் திருப்பிச் செலுத்த முடியாததால், லோன் ஏஜென்ட்கள் தங்கள் மார்பிங் செய்யப்பட்ட நிர்வாண புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொள்வதாகக் கூறி அவர்களை மிரட்டத் தொடங்கினர் என்று போலீசார் தெரிவித்தனர். ஆந்திரப் பிரதேச முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் … Read more

#Justnow:கரையைக் கடந்த அசானி புயல்;ஆனால் கனமழை,60 கிமீ வேகத்தில் காற்று – வானிலை மையம்!

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 8 ஆம் தேதி அசானி புயலாக வலுப்பெற்றது.அதன்பின்னர் வடமேற்கு வங்கக்கடல் பகுதியை நோக்கி நகர்ந்து வந்து ஆந்திராவின் மசிலிப்பட்டணத்திற்கு அருகே நிலை கொண்டிருந்தது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்து. அதன்பின்னர்,அசானி புயலானது திசை மாறி ஒடிசா கடலோரத்தை நோக்கி நகர்ந்து இன்று காலைக்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுவிழக்கும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.இதனால்,வடக்கு ஆந்திரா மாவட்டங்களில் கனமழை … Read more

#BREAKING: ஆந்திராவில் செம்மரம் வெட்டியதால் 7 தமிழர்கள் கைது!

சித்துர் பகுதியில் செம்மரம் வெட்டுவதாக தமிழகத்தை சேர்ந்த 7 பேரை கைது செய்த ஆந்திர காவல்துறை. ஆந்திர மாநிலம் சித்துரில் வாகன தணிக்கையில் ரூ.3 கோடி மதிப்பிலான செம்மர கட்டைகளை பறிமுதல் செய்யப்பட்டு, 7 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். செம்மரம் வெட்டியதாக தமிழகத்தை சேர்ந்த 7 பேரை கைது செய்த ஆந்திர காவல்துறையினர், 3 வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர். சித்துர் பகுதியில் செம்மரம் வெட்டுவதாக அம்மாநில வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனைத்தொடர்ந்து அப்பகுதியில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் … Read more

பரபரப்பு…பொதுத்தேர்வில் முறைகேடு – 42 ஆசிரியர்கள் கைது!

கொரோனா தொற்றுநோய் காரணமாக பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இரண்டு ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்த நிலையில், தற்போது ஆந்திராவில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 27 முதல் நடத்தப்படுகின்றன. இந்நிலையில்,10 ஆம் வகுப்பு ஆண்டுத் தேர்வில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக ஆந்திரப் பிரதேசம் முழுவதும் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 42 ஆசிரியர்கள் ஆந்திர பொதுத் தேர்வுகள் (முறைகேடுகள் மற்றும் நியாயமற்ற வழிமுறைகள்) சட்டம், 1997 இன் கீழ் கைது செய்யப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். முதல் நாளில் தேர்வு … Read more

ஆந்திர பிரதேசம் : கணவர் முன்பு கர்ப்பிணி பெண்ணை கடத்தி கூட்டு பலாத்காரம் செய்த கும்பல் ..!

ஆந்திர பிரதேசம் மாநிலத்திலுள்ள பாபட்லா மாவட்ட ரயில் நிலையத்தில் கணவன் முன்னிலையில் கர்ப்பிணி பெண் கடத்தப்பட்டு கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கடந்த சனிக்கிழமை இரவு குண்டூரில் இருந்து கிருஷ்ணா மாவட்டத்திற்கு தனது கணவர் மற்றும் மூன்று பிள்ளைகளுடன் ரயில் நிலையத்தில் அமர்ந்திருந்த கர்ப்பிணிப் பெண்ணிடம் குடிபோதையில் வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் தகராறு செய்துள்ளது. அப்பொழுது கணவர் அவர்களை தடுக்க முற்பட்டபோது, 3 பேரும் சேர்ந்து கணவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். அதன்பின் … Read more

ஆந்திர மாநில YSRC தலைவர் கொலை .., 3 போலீசார் காயம்..!

ஆந்திர மாநிலத்தில் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று ஆந்திர மாநிலத்தை சேர்ந்த துவாரகா பகுதியில் உள்ள ஜி கொத்தபள்ளி என்னும் கிராமத்தை சேர்ந்த யுவஜன ஸ்ராமிகா ரைத்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஒருவர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்திற்கு அதே கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ தலாரி வெங்கட ராவ் என்பவர் தான் காரணம் என உள்ளூர் மக்கள் அவரை … Read more

பயங்கர தீ விபத்து:6 பேர் பலி;வேதனையளிக்கிறது – பிரதமர் மோடி இரங்கல்!

ஆந்திர மாநிலம் எலுரு தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல். ஆந்திர பிரதேச மாநிலம்,ஏலூரில் உள்ள அக்கிரெட்டிகுடேமில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.மேலும்,முதல்வர் மற்றும் ஆளுநரின் அறிக்கையின்படி,தீ விபத்தில் மொத்தம் 13 பேர் காயமடைந்தனர் மற்றும் 6 பேர் இறந்தனர் என்று கூறப்படுகிறது. இதனையடுத்து,நைட்ரிக் அமிலம்,மோனோமெதில் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக ஏலூர் எஸ்பி ராகுல் தேவ் சர்மா தெரிவித்திருந்தார்.இதனைத் தொடர்ந்து,ஆந்திர … Read more

டீசல் விலை உயர்வு எதிரொலி:அரசுப் பேருந்து கட்டணம் ரூ.10 வரை உயர்வு – அரசு அறிவிப்பு!

இந்தியாவில் நாளுக்கு நாள் பெட்ரோல்,டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில்,டீசல் விலை உயர்வின் காரணமாக ஆர்டிசி பேருந்து கட்டணத்தை உயர்த்த ஆந்திர மாநில அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக,ஆந்திர மாநில அரசு சாலை போக்குவரத்து கழக இயக்குநர் துவாரகா திருமலா ராவ்,ஊடகங்களுக்குப் பேட்டியளித்தபோது கூறியதாவது: “கடந்த இரண்டு ஆண்டுகளில் ஆந்திரா மாநில அரசுப் பேருந்து கழகம் பல நிதிச் சிக்கல்களை எதிர்கொண்டது.தினசரி 61 லட்சம் பேர் தங்கள் இடங்களை அடைய அரசுப் பேருந்து … Read more

சென்னைக்கு அருகே நள்ளிரவில் நில அதிர்வு – நில அதிர்வுக்கான தேசிய மையம் தகவல்!

சென்னைக்கு வடக்கே 100 கி.மீ தொலைவில் திருப்பதி அருகே 3.6 ரிக்டர் அளவிலான இலேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக தகவல். சென்னைக்கு வடக்கே 100 கி.மீ தொலைவில் திருப்பதி அருகே 3.6 ரிக்டர் அளவிலான இலேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாகவும்,ஆந்திரா மாநிலம் திருப்பதிக்கு வடகிழக்கில் 85 கிமீ தொலைவில் நள்ளிரவு 1.10 க்கு இந்த நில அதிர்வு உணரப்பட்டதாகவும் இந்திய நில அதிர்வுக்கான தேசிய மையம் தகவல் தெரிவித்துள்ளது. An earthquake of magnitude 3.6 occurred … Read more

ஆற்றிற்குள் பேருந்து கவிழ்ந்து விபத்து – 9 பேர் பலி!

ஆந்திராவில் ஆற்றில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளாக்கியதில் 9 பேர் பலியாகியுள்ளனர். ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மேற்கு கோதாவரி பகுதியில் அரசு பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. ஏலூர் அருகேயுள்ள பாலத்தைக் கடந்த பொழுது, பேருந்து கவிழ்ந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த விபத்தில் 5 பெண்கள் உள்பட 9 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.