என்ஜின் கோளாறு தரையிறக்கம் செய்யப்பட்ட இண்டிகோ விமானம்…???

ஜதராபாத்தில் இருந்து ராய்ப்பூர் செல்லும் இண்டிகோ விமானம் 6E 334 ஜதராபாத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்தில் என்ஜின் கோளாறு காரணமாக இண்டிகோ விமானம் தரையிறக்கம் செய்யப்பட்டது.

ஆந்திராவில் படுகொலை செய்யபட்ட தமிழக மலைவாழ் மக்களுக்கு நீதி கேட்டு போராட்டம்…!!

மலை வாழ் மக்களை பாதுகாக்க கோரியும் ஆந்திராவில் படுகொலை செய்யபட்ட தமிழக மலைவாழ் மக்களுக்கு நீதி கேட்டும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் மலைவாழ் மக்கள் இளைஞர் சங்கம் சார்பில் சேலத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநில செயலாளர்  எஸ்.பாலா மற்றும் மலைவாழ் மக்கள் இளைஞர் சங்கத்தின் மாநில செயலாளர்  பிரவீன்குமார் உள்ளிட்டு ஏராளமான வாலிபர்கள் பங்கெடுத்தனர்.

சந்திர கிரகணத்தையொட்டி வரும் 31 ஆம் தேதி திருப்பதி ஏழுமலையான் கோயில் மூடல்…!!

சந்திர கிரகணத்தையொட்டி வரும் 31 ஆம் தேதி திருப்பதி ஏழுமலையான் கோயில் மூடப்படுகிறது. அன்று காலை 11 மணி முதல் இரவு 10.30 மணி வரை கோயில் நடை மூடப்படும்என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திவ்ய தரிசனம் மற்றும் மூத்தகுடிமக்களுக்கான தரிசனமும் 31ஆம் தேதி அன்று ரத்து செய்யப்படுகிறது என திருப்பதி தேவஸ்தானத்தால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

"இந்து என்பது மதம் அல்ல; வாழ்வியல் நெறி" – இந்து மதம் குறித்து புகழ்ந்த துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு பின்னணி என்ன…??

“இந்து என்பது மதம் அல்ல; வாழ்வியல் நெறி” எனஆந்திர மாநிலத்தில் உள்ள  திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தபின் இந்திய துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். இதுவரையில் இந்தியாவில் துணை குடியரசு தலைவர்கள் யாரும் இப்படி ஒரு தனிப்பட்ட மதத்தினை பற்றி பேசியதே கிடையாது.இப்போதுதான் முதல் முறையாக வெங்கையா நாயுடு பேசியுள்ளார். மதச்சார்பற்ற இந்தியாவை இது கேள்வி எழுப்பும் வகையில் உள்ளது.

ஆந்திராவில் டிப்பர் லாரியின் டயர் வெடித்து சாலையில் இருந்த தடுப்பு சுவரில் மோதியதில் 8 பேர் பலி; 10 காயம்

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் அருகே டிப்பர் லாரியின் டயர் வெடித்து சாலையில் இருந்த தடுப்பு சுவரில் மோதி விபத்து ஏற்பட்டது.இந்த விபத்தின் காரணமாக கூலி தொழிலாளர்கள் சுமார் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் காயமடைந்த 10க்கும் மேற்பட்டவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

29வது ஆண்டு விஜயவாடா புத்தக பெருவிழாவை முதல்வர் மற்றும் துணைகுடியரசு தலைவர் துவக்கி வைத்தார்கள்…!

ஆந்திர மாநிலத்தின் விஜயவாடாவில்ஆண்டுதோரும் நடைபெற்று வரும் விஜயவாடா புத்தக விழாவின் 29வது பதிப்பு ஆண்டு பெருவிழாவை ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திர பாபு நாயுடு உடன் சேர்ந்து இந்தியாவின் துணை குடியரசுத் தலைவர் வெங்கைய்யா நாயுடு துவக்கி வைத்தார்.