ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம்.! விரக்தியில் இந்திய கிரிக்கெட் வீரர் ஹனுமா விஹாரி.!

Hanuma Vihari : கடந்த திங்கள்கிழமை (பிப்ரவரி 26,2024) அன்று இந்தூரில் நடைபெற்ற ரஞ்சி டிராபியின் காலிறுதி போட்டியில் மத்தியப் பிரதேச அணியிடம், ஆந்திரா அணி தோல்வியடைந்தது. இதை தொடர்ந்து ஆந்திர கிரிக்கெட் வாரியத்தில் மிகப்பெரிய குழப்பம் நிலவியது. ஆந்திர அணியின் முன்னாள் கேப்டனும், இந்திய அணியன் டெஸ்ட் போட்டிகளின் நட்சத்திர வீரருமான ஹனுமா விஹாரி ஆந்திர கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து தானாகவே ராஜினாமா செய்ததுடன் ஆந்திர அணியிலிருந்தும் வெளியேறி உள்ளார். Read More :- … Read more

புஷ்பா பாணியில் கடத்தல்.! பொலேரோவில் சிக்கிய 130கிலோ கஞ்சா.!

புஷ்பா பட பாணியில் காரின் மேற்கூரையில் 130 கிலோ கஞ்சா கடத்தி 2 பேர் சிறப்பு அமலாக்கத்துறையினரிடம் சிக்கியுள்ளனர்.  தெலுங்கு படமான புஷ்பா எனும் திரைப்படத்தில் நாயகன் அல்லு அர்ஜுன் சட்டவிரோதமாக மரக்கட்டைகளை கடத்துவதற்கு வெவ்வேறு பாணிகளை கையாளுவார். அதில் ஒன்று வாகனத்தில் மரக்கட்டைகளை கடத்துவது போல காட்சி படுத்தப்பட்டு இருக்கும். கிட்டத்தட்ட அதே பாணியில் அண்மையில் சில கடத்தல் சம்பவங்கள் நடைபெற்று அதனை, போலீசார் லாவகமாக பிடித்துள்ளனர். அப்படித்தான், அண்மையில், 130 கிலோ அளவில் கடத்தப்பட … Read more

8 கோடி மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் மற்றும் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட அம்மன் கோவில்.. வைரலாகும் புகைப்படங்கள்..

நீண்ட காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் பாரம்பரியம்.. 8 கோடி மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் மற்றும் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட கோவில்! மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பல அழகான கோவில்களை நாம் பார்த்திருப்போம். ஆனால் 135 ஆண்டுகள் பழமையான வாசவி கன்யகா பரமேஸ்வரி தேவியின் கோவிலில் நீண்ட காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் பாரம்பரிய நிகழ்வு ஒன்று பொதுவானதாக இல்லாமல் நம்மை ஆச்சரியப்படுத்தும் வகையில் உள்ளது. ஆந்திராவில் உள்ள இந்த கோவில் தசராவின் போது தங்கம் மற்றும் பணத்தால் அலங்கரிக்கப்பட்டு பார்ப்பவர்களின் கண்களை … Read more

ஆந்திராவில் பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர் அருகே பறந்த கருப்பு பலூன்கள்; 4 காங்கிரஸ் கட்சியினர் கைது

ஆந்திர மாநிலம் பீமாவரத்தில் நடைபெற்ற சுதந்திரப் போராட்ட வீரர் அல்லூரி சீதாராம ராஜுவின் 125-வது பிறந்தநாள் விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி அங்கு சென்றுள்ளார். இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில், பழம்பெரும் சுதந்திரத்தின் 30 அடி வெண்கலச் சிலையை அவர் திறந்து வைத்தார். ஆந்திராவில் விஜயவாடாவில் பிரதமர் நரேந்திர மோடியின் ஹெலிகாப்டர் அருகே கருப்பு பலூன்கள் பறக்கவிடப்பட்டதை அடுத்து  4 காங்கிரஸ் கட்சியினர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் மேலும் சிலரை கைது செய்ய … Read more

அப்படிப்போடு…ஊழல் புகார் – புதிய செயலியை அறிமுகப்படுத்திய ஆந்திரா முதல்வர்!

ஆந்திரப் பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, ஊழல் தடுப்புப் பணியகத்தால்(ஏசிபி) உருவாக்கப்பட்ட ‘14400’ செயலியை(ACB mobile app 1440) மக்களுக்காக அறிமுகப்படுத்தியுள்ளார்.அதன்படி,மாநிலத்தில் உள்ள அரசு அதிகாரிகளுக்கு எதிரான ஊழல் தொடர்பான புகார்களைப் பதிவு செய்யவும்,முழு ஆதார ஆதாரங்களை நீதிமன்றத்தில் வழங்கவும் இந்த செயலி தொடங்கப்பட்டுள்ளது.குறிப்பாக,ஊழல் தொடர்பான புகார் அளிக்க மக்களுக்கு உதவும் வகையில் இந்த அதிநவீன செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன்படி,நவீன தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் மக்கள் புகார்களைப் பதிவு செய்வதற்கும் வெளிப்படைத்தன்மையைப் பேணுவதற்கும் ஏசிபி … Read more

#Justnow:கரையைக் கடந்த அசானி புயல்;ஆனால் கனமழை,60 கிமீ வேகத்தில் காற்று – வானிலை மையம்!

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 8 ஆம் தேதி அசானி புயலாக வலுப்பெற்றது.அதன்பின்னர் வடமேற்கு வங்கக்கடல் பகுதியை நோக்கி நகர்ந்து வந்து ஆந்திராவின் மசிலிப்பட்டணத்திற்கு அருகே நிலை கொண்டிருந்தது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்து. அதன்பின்னர்,அசானி புயலானது திசை மாறி ஒடிசா கடலோரத்தை நோக்கி நகர்ந்து இன்று காலைக்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுவிழக்கும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.இதனால்,வடக்கு ஆந்திரா மாவட்டங்களில் கனமழை … Read more

பரபரப்பு…பொதுத்தேர்வில் முறைகேடு – 42 ஆசிரியர்கள் கைது!

கொரோனா தொற்றுநோய் காரணமாக பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இரண்டு ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்த நிலையில், தற்போது ஆந்திராவில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 27 முதல் நடத்தப்படுகின்றன. இந்நிலையில்,10 ஆம் வகுப்பு ஆண்டுத் தேர்வில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக ஆந்திரப் பிரதேசம் முழுவதும் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 42 ஆசிரியர்கள் ஆந்திர பொதுத் தேர்வுகள் (முறைகேடுகள் மற்றும் நியாயமற்ற வழிமுறைகள்) சட்டம், 1997 இன் கீழ் கைது செய்யப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். முதல் நாளில் தேர்வு … Read more

வேலை வாங்கி தருவதாக கூறி பலாத்காரம் செய்த நபர் ; பெண் எடுத்த அதிரடி முடிவு!

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 24 வயதுடைய பெண்ணொருவர் தனக்கு ஒருவர் வேலை வாங்கித் தருவதாக கூறி பலாத்காரம் செய்து விட்டதாகவும், அவர் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் எனவும் போலீசில் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக போலீசில் புகார் அளிக்கச் சென்ற பெண் கூறுகையில், போலீஸ் லென்ஸ் எனும் பகுதிக்கு வருமாறு தன்னை அழைத்ததாகவும், அங்குள்ள உறவினரிடம் சொல்லி தனக்கு வேலை வாங்கி தருகிறேன் எனக் கூறியதால் தான் அங்கு சென்றதாகவும் தெரிவித்துள்ளார். அப்பொழுது அவரது சகோதரி … Read more

பயங்கர தீ விபத்து:6 பேர் பலி;வேதனையளிக்கிறது – பிரதமர் மோடி இரங்கல்!

ஆந்திர மாநிலம் எலுரு தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல். ஆந்திர பிரதேச மாநிலம்,ஏலூரில் உள்ள அக்கிரெட்டிகுடேமில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.மேலும்,முதல்வர் மற்றும் ஆளுநரின் அறிக்கையின்படி,தீ விபத்தில் மொத்தம் 13 பேர் காயமடைந்தனர் மற்றும் 6 பேர் இறந்தனர் என்று கூறப்படுகிறது. இதனையடுத்து,நைட்ரிக் அமிலம்,மோனோமெதில் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக ஏலூர் எஸ்பி ராகுல் தேவ் சர்மா தெரிவித்திருந்தார்.இதனைத் தொடர்ந்து,ஆந்திர … Read more

நடிகை ரோஜா உட்பட 25 புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பு!

ஆந்திரா:நடிகை ரோஜா உட்பட 25 புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்கவுள்ளனர். ஆந்திர மாநிலத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தது.அப்போது,இரண்டரை ஆண்டுகளில் அமைச்சரவை மாற்றம் செய்யப்படும் என்று ஆந்திரா முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்திருந்தார்.இதனைத் தொடர்ந்து,அண்மையில் 24 அமைச்சர்கள் ராஜினாமா செய்தனர். இந்நிலையில்,ஆந்திராவில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் இன்று காலை 11.30 மணிக்கு புதிய அமைச்சரவை பதவியேற்க உள்ளது.இந்த புதிய அமைச்சரவையில் … Read more