ஓமைக்ரான் அச்சுறுத்தல்: தினசரி வகுப்புகள் நடத்துவது குறித்து 25-ம் தேதி முடிவு- அமைச்சர் அன்பில் மகேஷ்..!

ஓமைக்ரான் அச்சுறுத்தல் காரணமாக தினசரி வகுப்புகள் நடத்துவது குறித்து 25-ம் தேதி முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார். செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் , 6 முதல் பன்னிரண்டாம் வகுப்புக்கு தினமும் வகுப்பு நடத்துவது பற்றி வரும் டிசம்பர் 25ம் தேதி மீண்டும் ஆலோசனை நடத்தப்படும் என தெரிவித்துள்ளார். தமிழகத்திற்கு ஓமைக்ரான் வந்துள்ளதால் முதல்வர் தலைமையிலான கூட்டத்தில் ஆலோசித்து முடிவெடுக்கப்படும். பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஜனவரி முதல் திருப்புதல் தேர்வு நடக்கும் … Read more

ஜனவரி முதல் அனைத்து மாவட்டங்களிலும் இல்லம் தேடி கல்வி திட்டம் தொடங்கப்படும் – அமைச்சர் அன்பில் மகேஷ்!

ஜனவரி முதல் அனைத்து மாவட்டங்களிலும் இல்லம் தேடி கல்வி திட்டம் தொடங்கப்படும் என பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். கொரோனா காலத்தில் மாணவர்களின் கல்வித் திறன் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக தமிழக அரசு சார்பில் இல்லம் தேடி கல்வி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அதாவது மாணவர்கள் பள்ளி சென்று வீடு திரும்பிய பின் இல்லம் தேடி கல்வி மையங்களில் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மாலை 5 மணி முதல் … Read more

உதயநிதி அமைச்சராக வர வேண்டும்- அமைச்சர் அன்பில் மகேஷ்.!

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வர வேண்டும் இது எனது விருப்பம் மட்டுமல்ல பலரது விருப்பம் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். திமுக எம்எல்ஏவும், இளைஞர் அணியின் மாநில செயலாளருமான உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாளையொட்டி மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 2,000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சென்னை சேப்பாக்கம் அண்ணா கலையரங்கத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் … Read more

ஒமைக்ரானால் பள்ளி,கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை..? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்..!

ஒமிக்ரான் பரவல் அச்சுறுத்த‌லால் தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை என்ற தகவல் தவறானது. கொரோனா வைரஸ் கடந்த ஒன்றை ஆண்டுகளாக உலகம் முழுவதும் பரவி மக்களை பெரும் அச்சுறுத்தி வந்த நிலையில், தற்பொழுது குறைந்து வருகிறது. இதற்கிடையில் கடந்த வாரம் தென் ஆப்பிரிக்காவில் உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ்  கண்டறியப்பட்டு உள்ளது. இந்த வைரஸ் இது வேகமாகப் பரவலாம் என்றும் இதுவரை வந்த திரிபுகளில் இது மிகவும் ஆபத்தானதாக இருக்கக்கூடும். இந்தப் புதிய வகை … Read more

#BREAKING: பொதுத்தேர்வு தள்ளிப்போக வாய்ப்பு இல்லை-அமைச்சர் அன்பில் மகேஷ்..!

10, 12 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு என்பதால் அவர்கள் மட்டும் தினமும் பள்ளிக்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.  சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், பள்ளிகளில் சுழற்சி முறையில் வகுப்புகள் தொடரும். பொதுத்தேர்வு என்பதால் 10 12ஆம் வகுப்பு மாணவர்களை மட்டும் தினமும் பள்ளிக்கு வரும்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா குறைந்ததும் மற்ற மாணவர்களுக்கும் சுழற்சிமுறை வகுப்புகள் கைவிடப்படும். இல்லம் தேடி கல்வித்திட்டத்தில் 8.75 லட்சத்திற்கும் மேல் தன்னார்வலர்கள் பதிவு செய்துள்ளனர். ஒரு … Read more

மாணவர்களை கண்டிப்பாக பள்ளிக்கு வர கட்டாயப்படுத்தக்கூடாது- அமைச்சர் அன்பில் மகேஷ்..!

தனியார் பள்ளிகள் மாணவர்களை கண்டிப்பாக பள்ளிக்கு வர வேண்டும் என கட்டாயப்படுத்தக்கூடாது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார். சென்னை அடையாரில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தனியார் பள்ளிகள் மாணவர்களை கண்டிப்பாக பள்ளிக்கு வர வேண்டும் என கட்டாயப்படுத்தக்கூடாது. ஆசிரியர்களை வேலையில் இருந்து நீக்க வேண்டாம் என தனியார் பள்ளிகளை கேட்டுக்கொள்கிறேன். மாஸ்க் அணியாமல் வரும் மாணவர்களுக்கு பள்ளியிலேயே மாஸ்க் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

#BREAKING: 1-8 -க்கு பள்ளி திறப்பு எப்போது..? முதல்வரிடம் அறிக்கை தாக்கல்..!

அமைச்சர் அன்பில் மகேஷ் 1- 8-க்கு பள்ளி திறப்பு எப்போது என முதல்வரிடம் அறிக்கை தாக்கல் செய்தார்.  கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டன. இதனால், மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வந்தன. இதைத்தொடர்ந்து, கடந்த 1-ஆம் தேதி முதல் 9,10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. அதே நேரத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான … Read more

செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்படலாம் என முதல்வர் கூறியுள்ளார்-அமைச்சர் அன்பில் மகேஷ்..!

செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்படலாம் என்று முதல்வர் கூறியுள்ளார் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார். நேற்று முன்தினம் மாலை அரசு ஊரடங்கு நீடித்து உத்தரவு பிறப்பித்தது. அந்த உத்தரவில் செப்டம்பர் 1-ம் தேதி முதல் 9, 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்புகளில் ஒரு நேரத்தில் 50 சதவீத மாணவர்களுடன் கொரோனா தொற்று குறித்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளிகள் துவங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது. திருச்சி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் … Read more

2.04 லட்சம் மாணவர்கள் அரசு பள்ளியில் சேர்ந்துள்ளனர்- அமைச்சர் அன்பில் மகேஷ்..!

ஆசிரியர்களுக்கான அடிப்படை கணினி பயிற்சி வகுப்பை அன்பில் மகேஷ் தொடங்கி வைத்தார். ஆசிரியர்களுக்கான அடிப்படை பயிற்சி வகுப்பை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைத்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  ஆசிரியர்களுக்கு இணையதள கணினி வழி அடிப்படை பயிற்சி வகுப்பு 5 நாட்கள் நடத்தப்படுகிறது. 2.04 லட்சம் மாணவர்கள் அரசு மற்றும் அரசு உதவிபெற்று பள்ளியில் சேர்ந்துள்ளனர். 75,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தனியார் பள்ளியில் இருந்து அரசுப் பள்ளியில் சேர்ந்துள்ளனர் என கூறினார்.

கொரோனா பரவலை பொறுத்து தமிழகத்திலும் பள்ளிகள் திறப்பது குறித்து முதல்வர் முடிவெடுப்பார் – அமைச்சர் அன்பில் மகேஷ்!

புதுச்சேரியை போலவே கொரோனா பரவலை பொறுத்து தமிழகத்திலும் பள்ளிகள் திறப்பது குறித்து முதல்வர் முடிவெடுப்பார் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் கூறியுள்ளார். கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதுமுள்ள பல மாநிலங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இன்னும் திறக்கப்படாத நிலையிலேயே உள்ளது. இந்நிலையில் புதுச்சேரியில் தற்பொழுது கொரோனா பரவல் குறைய தொடங்கியுள்ளதையடுத்து அங்கு 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வருகின்ற 16 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. … Read more