13,331 தற்காலிக ஆசிரியர் நியமனம் – புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை தந்து தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்கலாம் பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.  அரசு பள்ளிகளில் 13,331 தற்காலிக ஆசிரியர் நியமனம் குறித்து பள்ளிக்கல்வித்துறை புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. உயர்நீதிமன்ற கிளையின் அறிவுறுத்தலை திறந்து திருத்திய வழிகாட்டுதல் நெறிமுறைகளை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை தந்து தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்கலாம், இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் தன்னார்வலர்களாக பணியாற்றி வந்தவர்களை ஆசிரியர்களாக நியமிக்கலாம்,  … Read more

இந்தியாவின் முன்னோடி திட்டமாக இல்லம் தேடி கல்வி திட்டம் செயல்படுகிறது – அமைச்சர் அன்பில் மகேஷ்!

இந்தியாவின் முன்னோடி திட்டமாக இல்லம் தேடி கல்வி திட்டம் செயல்படுகிறது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள், கொரோனாவால் மாணவர்களுக்கு ஏற்பட்ட கற்றல் இடைவெளியை குறைக்கத்தான் இல்லம் தேடி கல்வித் திட்டம் கொண்டு வரப்பட்டதாக தெரிவித்துள்ளார். மேலும், தற்பொழுது இந்த திட்டம் இந்தியாவின் முன்னோடி திட்டமாக செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இல்லம் தேடி கல்வி: கலைப்பயணக் குழு செய்த காரியம்;அதிகாரி எடுத்த அதிரடி நடவடிக்கை!

திருச்சி:இல்லம் தேடி கல்வி திட்டம் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்ட வந்த 8 குழுக்களில்,சர்மிளா சங்கர் தலைமையிலான குழு விதிமுறைகளை மீறி செயல்பட்டதால் அந்த குழுவை நீக்கி திருச்சி முதன்மை கல்வி அலுவலர் நடவடிக்கை எடுத்துள்ளார். திருச்சி மாவட்டத்தில்,தமிழக அரசின் இல்லம் தேடிக் கல்வி திட்டத்திற்காக 8 விழிப்புணர்வு பிரச்சாரக் குழு ஈடுபட்டு வருகிறது.இந்த நிலையில், சர்மிளா சங்கர் என்பவரது தலைமையில் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த குழுவில் ஒருவர், இல்லம் தேடிக் கல்வி குழு டி-சர்ட் … Read more

ஜனவரி முதல் அனைத்து மாவட்டங்களிலும் இல்லம் தேடி கல்வி திட்டம் தொடங்கப்படும் – அமைச்சர் அன்பில் மகேஷ்!

ஜனவரி முதல் அனைத்து மாவட்டங்களிலும் இல்லம் தேடி கல்வி திட்டம் தொடங்கப்படும் என பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். கொரோனா காலத்தில் மாணவர்களின் கல்வித் திறன் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக தமிழக அரசு சார்பில் இல்லம் தேடி கல்வி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அதாவது மாணவர்கள் பள்ளி சென்று வீடு திரும்பிய பின் இல்லம் தேடி கல்வி மையங்களில் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மாலை 5 மணி முதல் … Read more

“இவர்களுக்கும் இவை தேவை” – முதல்வருக்கு எம்.பி.ரவிக்குமார் முக்கிய கோரிக்கை!

விழுப்புரம்:நடப்பு ஆண்டு பட்டப் படிப்பில் சேர்ந்திருப்பவர்கள் 10 ஆம் வகுப்புக்குப் பிறகு பொதுத் தேர்வு எதையும் சந்திக்காதவர்கள்,எனவே இவர்களுக்கு ஒரு திட்டத்தை முதல்வர் வடிவைக்க வேண்டும் என்று எம்.பி.ரவிக்குமார் தெரிவித்துள்ளார். கொரோனா காரணமாக மாணவர்களுக்கு கற்பித்தல் பணிகள் நேரடியாக நடைபெறாமல் ஆன்லைன் மூலம் நடைபெறுகிறது. இதனால் மாணவர்களிடம் கற்றல் குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டது. அரசுப் பள்ளி மாணவர்களின் கற்றல் குறைபாடுகளை நீக்க பட்ஜெட்டில் ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு “இல்லம் தேடி கல்வி” என்ற புதிய … Read more

தன்னார்வலர்கள் தேர்வில் பெண்களுக்கு முன்னுரிமை! – அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு!

இல்லம் தேடி கல்வி குறித்து சில தலைவர்கள் எச்சரித்திருப்பதை ஏற்றுக் கொள்கிறோம் என அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி. பள்ளி மாணவர்களின் கற்றல் இடைவெளியை சரிசெய்யும் விதமாக மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு இல்லம் தேடி கல்வி திட்டத்தை கொண்டு வந்துள்ளது. அதன்படி, இல்லம் தேடி கல்வி திட்டத்தை நேற்று விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்திற்காக 200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை … Read more