#BREAKING: 1-8 -க்கு பள்ளி திறப்பு எப்போது..? முதல்வரிடம் அறிக்கை தாக்கல்..!

அமைச்சர் அன்பில் மகேஷ் 1- 8-க்கு பள்ளி திறப்பு எப்போது என முதல்வரிடம் அறிக்கை தாக்கல் செய்தார். 

கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டன. இதனால், மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வந்தன. இதைத்தொடர்ந்து, கடந்த 1-ஆம் தேதி முதல் 9,10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

அதே நேரத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது எப்போது..? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒன்றரை ஆண்டு காலமாக பள்ளிகளுக்கு செல்லாமல் ஆன்லைன் மூலம் கல்வி கற்பதால் மாணவர்களுக்கு மனரீதியான பாதிப்பும் ஏற்பட்டுள்ளதாக பெற்றோர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கடந்த 14-ம் தேதி ஆலோசனையில் ஈடுபட்டார். அதில் சிலர் முதன்மை கல்வி அலுவலர்கள் 6 முதல் 8 வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்கலாம் எனவும் சிலர் 1 முதல் 8 வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கலாம் என கருத்து தெரிவித்தனர்.

இந்த கருத்துக்களை அனைத்தையும் அமைச்சர் அன்பில் மகேஷ் அறிக்கையாக தலைமைச்செயலகத்தில் முதல்வரிடம் தாக்கல் செய்துள்ளார்.

author avatar
murugan