#Breaking : மெரினாவில் பேனா நினைவு சின்னம் அமைக்க தடை.? அரசு பதிலளிக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவு.!

சென்னை மெரினாவில் பேனா நினைவு சின்னம் குறித்து மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் என பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் நினைவாக கடலில் பேனா சின்னம் 42 மீ உயரத்தில் 39 கோடி செலவில் சிலை அமைக்க திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கின. இதற்கு தடை கேட்டு திருச்செந்தூரை சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் என்பவர் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கு விசாரணையை தென் மண்டலம் … Read more

மெரினாவில் ரவுடி கும்பலின் அட்டகாசம்..! பெண்ணின் கழுத்தை அறுத்து நகை, பணம் பறிப்பு..!

சென்னை மெரினாவில் நள்ளிரவில் பெண்ணிடம் 4 பேர் கொண்ட ரவுடி கும்பல் நகை, பணம் உள்ளிட்டவற்றை  பறித்துள்ளனர். சென்னை மெரினாவில் நள்ளிரவில் பெண்ணிடம் 4 பேர் கொண்ட ரவுடி கும்பல் நகை, பணம்  உள்ளிட்டவற்றை பறித்ததோடு, பெண்ணின் கழுத்தை அறுத்து விட்டு குற்றவாளி கடலுக்குள் தப்பியோடியுள்ளார். இதனையடுத்து போலீசார், கடலுக்குள் ஓடிய குற்றவாளியை துரத்திப் பிடித்துள்ளனர். மது போதையில் அட்டகாசம் செய்த 4 பேர் கொண்ட கும்பலிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தடையை மீறி சென்னை கடற்கரையில் குவிந்த மக்கள்.! எச்சரித்து அனுப்பும் போலீசார்.!

மெரினா , பட்டினமருதூர் கடற்கரைக்கு தடையை மீறி வந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி எச்சரித்து அனுப்பினார். மாண்டஸ் புயல் இன்று அதிகாலை கரையினை கடந்தது. புயல் கரையை கடக்கும் போது கரையோரத்தில் பல்வேறு பாதிப்புகள்ஏற்பட்டது. அதனை சரி செய்ய மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் கடற்கரைக்கு யாரும் வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக பட்டினமருதூர், மெரினா பகுதி கடற்கரையில் பொதுமக்கள் யாரும் வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டிருந்தனர். இருந்தாலும், மக்கள் பட்டினமருதூர் கடற்கரைக்கு … Read more

மெரினா கடற்கரையில் கடல் சீற்றம் – மாற்றுத்திறனாளிகள் சிறப்பு பாதை சேதம்..!

கடல்  சீற்றத்தால், மெரினாவில் மாற்றுத்திறனாளிகளுக்காக அமைக்கப்பட்ட சிறப்பு பாதை சேதம் அடைந்துள்ளது. மாண்டஸ் புயல் எதிரொலியால் சென்னை மெரினா கடற்கரை சீற்றத்துடன் காணப்படுகிறது. கடல்  சீற்றத்தால், மெரினாவில் மாற்றுத்திறனாளிகளுக்காக அமைக்கப்பட்ட சிறப்பு பாதை சேதம் அடைந்துள்ளது. மெரினா, காசிமேடு கடல் பகுதியில் அலைகள் ஆக்ரோஷமாக எழுந்து வருவது  குறிப்பிடத்தக்கது. மாண்டஸ் புயல் இன்று  இரவு கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.

இவர்களுக்கான பாதையை மற்றவர்கள் பயன்படுத்துவதை தவிர்க்கவேண்டும்! – மநீம

சென்னை மெரினாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாதையை மற்றவர்கள் பயன்படுத்துவதை தவிர்க்கவேண்டும் என மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்.  கடந்த சில நாட்களுக்கு முன்னதாக சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிக்காலுக்கான சிறப்பு பாதை திறக்கப்பட்டது. இந்த நிலையில், சென்னை மெரினாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாதையை மற்றவர்கள் பயன்படுத்துவதை தவிர்க்கவேண்டும் என மக்கள் நீதி மய்யம்  வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு தூரத்து கனவாகயிருந்தவொன்று, அலைகள் வந்து மோதிச்செல்லும் சென்னை கடற்கரையை அருகில் சென்று பார்ப்பது. சாலைக்கும், கடற்கரைக்கும் இடைப்பட்ட … Read more

கலைஞர் நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை…!

சென்னை மெரினா கடற்கரையில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ள கலைஞரின் நினைவிடத்தில், மலர்தூவி மரியாதை செலுத்தினார். முன்னாள் முதல்வரும்,முன்னாள் திமுக தலைவருமான கருணாநிதி அவர்களின் 99-வது பிறந்த நாள் விழா இன்று அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாப்களின் அவர்கள் கோபாலபுர இல்லத்தில் கலைஞர் கருணாநிதி உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து, சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 16 அடி உயர கலைஞரின் சிலைக்கு மரியாதை செலுத்தினார். தற்போது சென்னை மெரினா கடற்கரையில் மலர்களால் … Read more

முதல்வராக பொறுப்பேற்ற பின் முதல் பிறந்தநாள்:அண்ணா,கலைஞர் நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை!

சென்னை:இன்று தனது 69-வது பிறந்த நாளை முன்னிட்டு அண்ணா,கலைஞர் நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மரியாதை. தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தனது 69-வது பிறந்த நாளை முன்னிட்டு மறைந்த முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி மற்றும் அண்ணா ஆகியோரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தியுள்ளார். அதன்படி,சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதி மற்றும் அண்ணா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மரியாதை செலுத்தியுள்ளார். அவருடன் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்,கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி உள்ளிட்ட அமைச்சர்கள்  உடனிருந்தனர். … Read more

#Breaking:73-வது குடியரசு தினவிழா – தமிழகத்தில் முதல்முறையாக கொடியேற்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி!

சென்னை:நாட்டின் 73-வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு மெரினாவில் தேசியக் கொடியை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்றி வைக்கிறார்.தமிழகத்தில் நடைபெறும் குடியரசு தின விழாவில் முதல் முறையாக ஆளுநர் ஆர்என் ரவி அவர்கள் தேசியக் கொடியை ஏற்றுகிறார். நாட்டின் 73-வது குடியரசு தினவிழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. அதன்படி,டெல்லியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசியக் கொடியேற்றுகிறார்.இதனைத் தொடர்ந்து,முப்படைகளின் அணிவகுப்பு, சாகசங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்காரணமாக,டெல்லி முழுவதும் தீவிர கண்காணிப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில்,குடியரசு … Read more

ஜெயலலிதா போன்று உடையணிந்து ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பெண்…!

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில், ஷாலு என்ற பெண், ஜெயலலிதா போன்று  சேலை,கண்ணாடி என அவரை போன்றே உடையணிந்து வந்து அஞ்சலி செலுத்தினார். தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 5-ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து, ஓபிஎஸ், ஈபிஎஸ், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் சில முக்கிய பிரபலங்கள் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தியுள்ளனர். இந்நிலையில், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில், … Read more

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் ஓபிஎஸ்,ஈபிஎஸ் மரியாதை!பொய்யர்களின் குடும்ப ஆட்சிக்கு முடிவு எழுதுவதாக கூறி உறுதியேற்பு!

சென்னை:மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ் தற்போது மரியாதை செலுத்துகின்றனர். தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்து இன்றுடன் 5 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இதனை முன்னிட்டு ஜெயலலிதாவின் 5-வது ஆண்டு நினைவு நாளை கடைபிடிக்க சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த அதிமுக தரப்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில்,அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் உள்ளிட்டோர் தற்போது சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் … Read more