கலைஞர் நினைவிடத்தில் கடலுக்குள் பேனா வடிவ நினைவுச் சின்னம் – கருத்து கேட்பு கூட்டம்..!

கலைஞர் நினைவிடத்தில் கடலுக்குள் பேனா வடிவ நினைவுச் சின்னம் அமைக்கும் திட்டத்திற்கு 31.1.2023ல் பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்படும் என மாசு கட்டுப்பாடு வாரியம் அறிவிப்பு.  சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் நினைவாக கடலில் பேனா சின்னம் 42 மீ உயரத்தில் 39 கோடி செலவில் சிலை அமைக்கப்பட உள்ளது. இந்த நிலையில், மெரினாவில் உள்ள முன்னாள் முதல்வர் கலைஞர் நினைவிடத்தில் கடலுக்குள் பேனா வடிவ நினைவுச் சின்னம் அமைக்கும் … Read more

மெரினாவில் ரவுடி கும்பலின் அட்டகாசம்..! பெண்ணின் கழுத்தை அறுத்து நகை, பணம் பறிப்பு..!

சென்னை மெரினாவில் நள்ளிரவில் பெண்ணிடம் 4 பேர் கொண்ட ரவுடி கும்பல் நகை, பணம் உள்ளிட்டவற்றை  பறித்துள்ளனர். சென்னை மெரினாவில் நள்ளிரவில் பெண்ணிடம் 4 பேர் கொண்ட ரவுடி கும்பல் நகை, பணம்  உள்ளிட்டவற்றை பறித்ததோடு, பெண்ணின் கழுத்தை அறுத்து விட்டு குற்றவாளி கடலுக்குள் தப்பியோடியுள்ளார். இதனையடுத்து போலீசார், கடலுக்குள் ஓடிய குற்றவாளியை துரத்திப் பிடித்துள்ளனர். மது போதையில் அட்டகாசம் செய்த 4 பேர் கொண்ட கும்பலிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை மக்களுக்கு ஓர் குட் நியூஸ்..! விரைவில் மெரினாவில் இலவச இணைய வசதி!

சென்னை மாநகராட்சி மெரினா கடற்கரைக்கு வரும் பொதுமக்களுக்கு இலவச சேவை செய்யும் வழங்க முடிவு.  சென்னையில் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் ஒன்று சென்னை மெரினா கடற்கரை. இந்த மெரினா கடற்கரைக்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து சொல்வது வழக்கம். இந்த நிலையில் சென்னை மாநகராட்சி சென்னை மெரினா கடற்கரைக்கு வரும் பொது மக்களுக்கு இலவச இணைய சேவை வழங்க திட்டமிட்டுள்ளது. இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில் தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்லும் இடமாக சென்னை … Read more

கருப்புச் சட்டையில் களமிறங்கிய மு.க அழகிரி..!துவங்கியது அமைதி பேரணி மெரினாவை நோக்கி..!

கருணாநிதியின் நினைவிடம் நோக்கி மு.க.அழகிரி அமைதி பேரணி துவங்கியது. சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையம் அருகே அமைதி பேரணி துவங்கியது . இதில்கருப்புச் சட்டை அணிந்து மகன் தயா அழகிரி, மகள் கயல்விழியுடன் மு.க.அழகிரி அமைதி பேரணியில் கலந்து கொண்டுள்ளார். தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தலைமைக்கு எதிராக அவரது அண்ணன் அழகிரி தனது ஆதரவாளர்களுடன் சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடம் நோக்கி பேரணி சென்றார்.2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். DINASUVADU  

மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது..!சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி..!!

மெரினா கடற்கரையில் எந்தவித போராட்டங்களையும், ஆர்ப்பாட்டங்களையும் அனுமதிக்க முடியாது  தமிழக அரசின் மேல்முறையீடு மனுவை ஏற்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. காவிரி பிரச்னையில் அய்யாகண்ணுவிற்கு அனுமதி அளித்ததை எதிர்த்து தமிழக அரசின் சார்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவில் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது உயர்நீதிமன்றம். தனி நீதிபதி கடந்த ஏப்ரல் மாதத்தில், மெரினாவில் ஒருநாள் போராட்டம் நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டிருந்தார்.மேலும் தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து, காவல்துறை சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.இந்நிலையில் தனிநீதிபதியின் உத்தரவுக்கு இடைக்காலத் … Read more

Breaking News : கலைஞர் உடலை அடக்கம் செய்யும் வழக்கு இரவு 10.30க்கு விசாரணை ….

கலைஞர் கருணாநிதி உடலை மெரினாவில் அடக்கம் செய்ய அனுமதிக்க கோரி தொடரப்பட்ட வழக்கை இன்று இரவு 10.30 மணிக்கு விசாரிக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்..

மீண்டும் மெரினாவில்…..!!!

தமிழகத்தில் நிலவும் அசாதரணமான சூழ்நிலையின் காரணமாக சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் உள்ள பொதுமக்கள் அணைவரும் காவல் துறையினரால் வெளியேற்றப்பட்டனர்.அங்கு உள்ள கடைகள் இரவு 10 மணிக்குள் அடைக்கப்பட்டன.மெரினாவில் முகநூல் மூலம் ஒன்றினைந்து அறவழியில் போரட வந்த 18 பேர் கைது,மூன்று பிரிவுகளின் வழக்கு பதிவு செய்யப்பட்டு பின் விடுதலை செய்யப்பட்டனர்.இதனால் அறவழியில் கூட போராடக்கூட அணுமதி இல்லயா? என பொது மக்கள் கருதுகின்றனர். மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இனைந்திடுங்கள்