சென்னை மக்களுக்கு ஓர் குட் நியூஸ்..! விரைவில் மெரினாவில் இலவச இணைய வசதி!

சென்னை மாநகராட்சி மெரினா கடற்கரைக்கு வரும் பொதுமக்களுக்கு இலவச சேவை செய்யும் வழங்க முடிவு. 

சென்னையில் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் ஒன்று சென்னை மெரினா கடற்கரை. இந்த மெரினா கடற்கரைக்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து சொல்வது வழக்கம். இந்த நிலையில் சென்னை மாநகராட்சி சென்னை மெரினா கடற்கரைக்கு வரும் பொது மக்களுக்கு இலவச இணைய சேவை வழங்க திட்டமிட்டுள்ளது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில் தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்லும் இடமாக சென்னை மெரினா கடற்கரை உள்ளது. எனவே மெரினா கடற்கரைக்கு வரும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சென்னை மாநகராட்சி மெரினா கடற்கரை மேம்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக மெரினா கடற்கரைக்கு வரும் பொதுமக்களுக்கு இலவச சேவை செய்யும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி கலங்கரை விளக்கம் முதல் உழைப்பாளர் சிலை வரை ஐந்து இடங்களில் கம்பங்கள் நிறுவப்பட்டுள்ளன. இதனை தமிழ்நாடு சுற்றுலாத்துறை மற்றும் சென்னை மாநகராட்சி இணைந்து செயல்படுத்த உள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment